மற்றவர்களுக்குப் போதிக்க தகுதியுடையவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் ஆகுதல்
1 யெகோவாவின் பிரதிநிதியாக மோசே நியமிக்கப்பட்டபோது, பார்வோனுக்கு கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதற்கு தன்னை தகுதியுள்ளவராக அவர் நினைக்கவில்லை. (யாத். 4:10; 6:12) யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவிப்பதற்கான திறமையில் எரேமியா தன்னுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினார், தான் எவ்வாறு பேசுவதென்று அறியாமலிருந்ததாக கடவுளிடம் சொன்னார். (எரே. 1:6) ஆரம்பத்தில் அவர்கள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தபோதிலும், அந்தத் தீர்க்கதரிசிகள் இருவரும் யெகோவாவுக்கு பயமற்ற சாட்சிகளாக நிரூபித்தார்கள். கடவுளால் அவர்கள் போதுமானளவு தகுதியுள்ளவர்களாக்கப்பட்டார்கள்.
2 இன்று, யெகோவாவின் தயவினால், நம்முடைய ஊழியத்தை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவதற்கு தேவையானது எதுவோ அது நம்மிடம் இருக்கிறது. (2 கொ. 3:4, 5; 2 தீ. 3:16) எல்லா கருவிகளையும் வைத்திருக்கிற தகுதிவாய்ந்த ஒரு மெக்கானிக்கைப் போல, நம்முடைய நியமிக்கப்பட்ட ஊழியத்தை திறமையாக செய்வதற்கு நாம் தகுந்த விதத்தில் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறோம். விசேஷ விலையில் அளிப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க பழைய பதிப்பு புத்தகங்களில் எவற்றையேனும் நாம் ஜனவரியில் அளிப்போம். இந்த ஆவிக்குரிய கருவிகள் புதியவையாய் இல்லாதபோதிலும், அவற்றின் வேதப்பூர்வமான பொருள்கள் இன்னும் நடப்பிலுள்ளவையாக இருக்கின்றன, இந்தப் புத்தகங்கள் சத்தியத்தை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவிசெய்யும். எந்தப் புத்தகத்தை அளித்தாலும் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் பிரசங்கங்களை அதற்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
3 கடவுளுடைய வார்த்தையில் அக்கறையை ஏற்படுத்துவதற்கு கல்வி என்ற பொருளை பயன்படுத்தலாம். பொருத்தமான சந்தர்ப்பத்தில், நீங்கள் இவ்வாறு சொல்வதன் மூலம் பேச்சை ஆரம்பிக்கலாம்:
◼“நல்ல தரமான கல்வியின் அவசியத்தைக் குறித்து இன்றைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உங்களுடைய அபிப்பிராயத்தின்படி, வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட அதிக சந்தோஷத்தையும் வெற்றியையும் நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன வகையான கல்வியை ஒரு நபர் தொடர வேண்டும்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுகிறவர்கள் நித்திய நன்மைகளை அடையமுடியும். [நீதிமொழிகள் 9:10, 11-ஐ வாசிக்கவும்.] கையடக்கமான இந்தப் புத்தகம் [நீங்கள் அளிக்கும் புத்தகத்தின் தலைப்பைக் கூறுங்கள்] பைபிளின் அடிப்படையிலானது. பைபிளானது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைக் கொடுக்கும் வியக்கத்தக்க ஒரு ஊற்றுமூலம் என்பதை இது விளக்குகிறது.” இந்தப் புத்தகத்திலுள்ள குறிப்பான ஒரு உதாரணத்தைக் காண்பியுங்கள். வீட்டுக்காரருக்கு இருதயப்பூர்வமான அக்கறை இருந்தால், நீங்கள் அந்தப் புத்தகத்தை அவருக்குக் கொடுத்து, ஒரு மறுசந்திப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
4 பைபிள் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் பேசிய வீட்டுக்காரரை சந்திக்கச் செல்லும்போது, இவ்வாறு சொல்லலாம்:
◼“நான் போன தடவை சந்தித்தபோது, பைபிள் நம்முடைய நித்திய எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் கல்வியைக் கொடுக்கும் ஊற்றுமூலமாய் இருப்பதாக நாம் பேசினோம். நிச்சயமாகவே, வேதவசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை கற்றுக்கொள்வதற்கு முயற்சி தேவை. [நீதிமொழிகள் 2:1-5-ஐ வாசிக்கவும்.] நிறைய பேர் பைபிளிலுள்ள சில பகுதிகள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பதாக காண்கிறார்கள். அடிப்படை பைபிள் போதனைகளைப் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவிசெய்ய நாங்கள் விரிவாக பயன்படுத்தியிருக்கும் ஒரு முறையை நான் உங்களுக்குச் சுருக்கமாக நடத்திக்காட்ட விரும்புகிறேன்.” நீங்கள் கொடுத்துவிட்டுப் போயிருந்த புத்தகத்தைப் பயன்படுத்தி, பொருத்தமான ஒரு பகுதிக்குத் திருப்பி ஒரு பைபிள் படிப்பை சுருக்கமாக நடத்திக்காட்டுங்கள். ஒழுங்கான பைபிள் படிப்பு ஒன்றை கொண்டிருப்பதற்கு அந்த வீட்டுக்காரர் விரும்பினால், படிப்புக்கான உதவிப்புத்தகமாகிய நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்துடன் மீண்டும் வருவதாக விளக்குங்கள்.
5 உலகிலுள்ள இலட்சக்கணக்கான பிள்ளைகள் படும் அவதியைக் கண்டு அநேக மக்கள் கலக்கமடைகின்றனர். இந்தத் துயரகரமான நிலைமையை கடவுள் எவ்வாறு நோக்குகிறார் என்பதைக் காண்பதற்கு, நீங்கள் இவ்வாறு சொல்வதன் மூலம் ஒருவேளை வீட்டுக்காரருக்கு உதவலாம்:
◼“பசியாக, வியாதியாக, கைவிடப்பட்டவர்களாக இருக்கிற உலகமுழுவதிலுமுள்ள பிள்ளைகளைப் பற்றிய செய்தி அறிக்கைகளை நீங்கள் நிச்சயமாகவே பார்த்திருப்பீர்கள். சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஏன் இந்த நிலைமையை முன்னேற்றுவிக்க முடியவில்லை? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] மனிதர்களுக்கு தேவையான மிகச் சிறந்ததையே கடவுள் விரும்புகிறார். பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அவர் என்ன வாக்குறுதி அளிக்கிறார் என்பதை கவனியுங்கள். [வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசிக்கவும்.] துன்பம் இல்லாத ஒரு உலகத்தை கடவுள் உருவாக்கப்போவதைப் பற்றிய கூடுதலான விவரங்களை இந்தப் புத்தகம் [தலைப்பைக் கூறுங்கள்] கொடுக்கிறது.” கூடுமானால், பரதீஸை சித்தரித்துக் காண்பிக்கிற ஒரு படத்திற்குத் திருப்பி, அதைக் குறித்து கலந்துபேசுங்கள். அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, மற்றொரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
6 பிள்ளைகள் துன்புறுவதைப் பற்றி நீங்கள் ஆரம்பத்தில் பேசியிருந்தால், இவ்வாறு சொல்வதன் மூலம் அடுத்த சந்திப்பில் அந்த உரையாடலை நீங்கள் தொடரலாம்:
◼“சில நாட்களுக்கு முன்பு நான் இங்கு வந்திருந்தபோது, பிளவுபட்ட குடும்பங்கள், பஞ்சம், வியாதி, வன்முறை ஆகியவற்றின் காரணமாக அவதிப்படுகிற பிள்ளைகளின் கடினமான சூழ்நிலைமையின் பேரில் உங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தினீர்கள். பிள்ளைகளோ பெரியவர்களோ வியாதியினால், வேதனையினால், அல்லது மரணத்தினால் கஷ்டப்படாத ஒரு உலகத்தைப் பற்றி பைபிளில் வாசிப்பது ஆறுதலளிப்பதாய் இருக்கிறது. பூமியில் வரப்போகும் மேம்பட்ட ஒரு வாழ்க்கையைப் பற்றி ஏசாயா புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் விவரிக்கிறது.” ஏசாயா 65:20-25-ஐ வாசித்து, அதைக் குறித்து கலந்துபேசுங்கள். முடிவில் அறிவு புத்தகத்தில் ஒரு பைபிள் படிப்பு எடுப்பதற்கு வழிநடத்துங்கள்.
7 ஜெபிப்பது மதப்பற்றுள்ள மக்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கமாதலால், நீங்கள் இவ்வாறு சொல்வதன் மூலம் இந்தத் தலைப்பில் ஒரு உரையாடலை ஆரம்பிக்கலாம்:
◼“நம்முடைய வாழ்க்கையில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், உதவிக்காக கடவுளிடம் ஜெபம் செய்ய நம்மைத் தூண்டிய பிரச்சினைகளை நம்மில் பெரும்பாலானோர் அனுபவித்திருக்கிறோம். இருந்தபோதிலும், தங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என்பதாக அநேகர் உணருகிறார்கள். சமாதானத்திற்காக வெளிப்படையாக செய்யப்படும் மதத் தலைவர்களுடைய ஜெபங்களும் கேட்கப்படுவதில்லை என்பதாகவும்கூட தோன்றுகிறது. போரும் வன்முறையும் தொடர்ந்து மனிதவர்க்கத்தை அலைக்கழிப்பதனால் நாம் அவ்வாறு சொல்லுகிறோம். கடவுள் உண்மையிலேயே ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறாரா? அவர் செவிகொடுக்கிறாரென்றால், ஏன் அநேக ஜெபங்கள் பதிலளிக்கப்படாமல் போவதுபோல் தோன்றுகின்றன? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நம்முடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட வேண்டுமானால் என்ன தேவைப்படுகிறது என்பதை சங்கீதம் 145:18 விளக்குகிறது. [வசனத்தை வாசியுங்கள்.] ஒரு விஷயம் என்னவென்றால், கடவுளிடம் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் உண்மை மனதோடும் அவருடைய வார்த்தையில் காணப்படுகிற சத்தியத்திற்கு இசைவாகவும் இருக்க வேண்டும்.” நீங்கள் அளிக்கும் புத்தகத்தைக் காண்பித்து, ஜெபத்தின் மதிப்பைப் பற்றி அது என்ன சொல்லுகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள்.
8 ஜெபத்தைப் பற்றிய முந்திய உரையாடலை தொடரும்போது, நீங்கள் இந்த அணுகுமுறையை முயற்சித்துப் பார்க்கலாம்:
◼“ஜெபத்தைப் பற்றி நாம் பேசியதை நான் அனுபவித்துக் களித்தேன். என்ன ஜெபிப்பது என்பதைப் பற்றி இயேசு சொன்ன கருத்துக்கள் பயனுள்ள வழிநடத்துதலாய் இருப்பதாக காண்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.” மத்தேயு 6:9, 10-ஐ வாசித்து, இயேசுவினுடைய மாதிரி ஜெபத்தில் சிறப்பித்துக் காண்பிக்கப்படும் முக்கிய அக்கறைகளை சுட்டிக் காட்டுங்கள். அறிவு புத்தகத்தில், “கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கிவரலாம்” என்ற 16-ம் அதிகாரத்தைக் காண்பியுங்கள், பின்பு அந்த விஷயத்தை எவ்வாறு படிப்பது என்பதை நடத்திக்காட்டட்டுமா என்று கேளுங்கள்.
9 மற்றவர்களுக்கு கடவுளைப் பற்றிய அறிவை வழங்கும் விஷயத்திற்கு வருகையில், “இவற்றை நடப்பிக்கிறதற்கு தகுதியானவர் யார்?” என்பதாக நாம் கேட்கலாம். வேதாகமம் பதிலளிக்கிறது: ‘நாம்தான்.’—2 கொ. 2:16, 17, NW.