உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/97 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • இதே தகவல்
  • திருத்தமான அறிக்கைக்கு நீங்கள் உதவுகிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • வெளி ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ளுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • உங்கள் சபை புத்தகப் படிப்பு கண்காணிக்கு உதவியாக இருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 1/97 பக். 7

கேள்விப் பெட்டி

◼ நம்முடைய வெளி ஊழிய நடவடிக்கையை ஒவ்வொரு மாதமும் நாம் ஏன் உடனடியாக அறிக்கைசெய்ய வேண்டும்?

ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதினால் சாதிக்கப்பட்டுவரும் நற்காரியங்களைப் பற்றி கேள்விப்படும்போது ஏற்படும் சந்தோஷ உணர்ச்சியை நாமனைவரும் அனுபவிக்கிறோம். (நீதிமொழிகள் 25:25-ஐ காண்க.) பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு கொடுத்த தூண்டுவிக்கும் பேச்சைத் தொடர்ந்து, “ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்” என அப்போஸ்தலர் 2:41 அறிக்கை செய்கிறது. அதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த எண்ணிக்கை ‘ஏறக்குறைய ஐயாயிரத்திற்கு’ வளர்ந்துவிட்டது. (அப். 4:4) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அந்த அறிக்கைகள் எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்திருக்க வேண்டும்! ஊக்குவிக்கும் அறிக்கைகளுக்கு இன்றும் நாம் அதே போலவே பிரதிபலிக்கிறோம். உலகமுழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நம்முடைய சகோதரர்கள் அனுபவித்து மகிழும் வெற்றியைப் பற்றி கேள்விப்படுவதில் நாம் கிளர்ச்சியடைகிறோம்.

இப்படிப்பட்ட அறிக்கைகளைத் தொகுப்பதில் அதிக நேரமும் முயற்சியும் உட்பட்டிருப்பதால், ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பது முக்கியம். உங்களுடைய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் உடனடியாக அறிக்கை செய்வதைப் பற்றி நீங்கள் உண்மையுடன் இருக்கிறீர்களா?

அதிகரிப்பைப் பற்றிய அறிக்கைகள் நமக்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவருகின்றன. அதோடு, உலகளாவிய வேலையின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கு அறிக்கைகள் சங்கத்திற்கு உதவிபுரிகின்றன. எங்கு அதிக உதவி தேவை அல்லது எந்தவித பிரசுரங்கள் மற்றும் எவ்வளவு பிரசுரங்கள் தயாரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். எங்கு முன்னேற்றம் செய்ய முடியும் என்பதை தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு சபையிலும் உள்ள மூப்பர்கள் வெளி ஊழிய அறிக்கையைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல அறிக்கைகள் கட்டியெழுப்புவதாய் இருக்கின்றன, மேலும் நம்முடைய சொந்த ஊழியத்தில் முன்னேற்றம் செய்வதற்கு சாத்தியமான அம்சங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு நம் அனைவரையும் உந்துவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான தனிப்பட்ட உத்தரவாதத்தை எல்லா பிரஸ்தாபிகளும் உணர வேண்டும். சபை புத்தகப் படிப்பு நடத்துனர்கள் இந்த உத்தரவாதத்தைக் குறித்து பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டலாம், ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வதில் ஏதாவது சிரமமுள்ளவர்களுக்கு தனிப்பட்ட உதவியை அளிப்பதற்கும் அவர்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதத்தின் கடைசி புத்தக படிப்பு நடக்கும் சமயத்தில் அல்லது பொருத்தமான மற்றொரு சந்தர்ப்பத்தில் இந்த நினைப்பூட்டுதல் கொடுக்கப்படலாம். இராஜ்ய மன்றத்தில் வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லையென்றால், சபை புத்தகப் படிப்பு நடத்துனர்கள் அவற்றை சேகரித்து, சங்கத்திற்கு அனுப்பும் சபையின் வழக்கமான மாதாந்திர அறிக்கையுடன் சேர்த்து சரியான சமயத்தில் அனுப்புவதற்கு செயலாளரிடம் கொடுக்கப்படும்படி பார்த்துக்கொள்ளலாம்.

நம்முடைய வெளி ஊழிய நடவடிக்கையை உடனடியாக உண்மையுடன் அறிக்கை செய்வதில் ஊக்கமாயிருப்பது, நம்முடைய ஆவிக்குரிய நலத்திற்காக உத்தரவாதமுள்ளவர்களுடைய சுமையை எளிதாக்குகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்