“உன் வீட்டைக் கட்டு”
1 கேள்விக்கிடமின்றி, உலகெங்கும் ஒவ்வொரு சமுதாயத்திலும் குடும்ப வாழ்க்கை சிதைந்துகொண்டிருக்கிறது. சாத்தானின் உலகம், வஞ்சிப்பதிலும் ஒழுக்கக்கேட்டிலும் புகுந்துவிளையாடுகிறது. (1 யோ. 5:19) இது ‘நம் வீட்டை கட்டவும்’ மற்றவர்களும் அவ்வாறே கட்ட உதவும்வகையில் கற்பிக்கவும் இருக்கும் அவசரத்தன்மையை நமக்கு வலியுறுத்துகிறது.—நீதி. 24: 3, 27.
2 பைபிள் நியமங்கள் ஒரு பாதுகாப்பு: பைபிள் நியமங்களை பொருத்துவதில்தான் உண்மையான குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் அடங்கியுள்ளது. இந்த வல்லமையுள்ள சத்தியங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நன்மை செய்பவை. இவற்றை வாழ்க்கையில் பொருத்தும் குடும்பங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும், தேவ சமாதானத்தை மகிழ்ந்து அனுபவிக்கும்.—ஏசாயா 32:17, 18-ஐ ஒப்பிடுக.
3 குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புதிய புத்தகத்தில் நம் குடும்பத்தை கட்டுவதற்கு உதவும் நியமங்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. குடும்ப அங்கத்தினர்கள் நினைவில் வைக்கவேண்டிய நியமங்களை வலியுறுத்தும் பயனுள்ள கற்பிக்கும் பெட்டியோடு ஒவ்வொரு அதிகாரமும் முடிகிறது. இந்தப் பெட்டிகளில் அநேகம் பின்வரும் கேள்வியோடு ஆரம்பிக்கிறது, “கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?” இது கடவுளுடைய சிந்தையிடமாக கவனத்தை ஈர்க்கிறது, எனவே நாம் கலந்தாலோசிக்கும் பொருளைப் பற்றியதில் கடவுளுடைய கருத்தை நம்மால் பெற முடியும்.—ஏசா. 48:17.
4 புத்தகத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள். பல்வேறு பிரச்சினைகள் எழும்போது உதவக்கூடிய நியமங்களை எங்கே கண்டெடுப்பது என கற்றுக்கொள்ளுங்கள். இந்தப் புத்தகம் பின்வரும் விஷயங்களை கலந்தாலோசிக்கிறது: ஒருவர் ஏற்ற திருமணத் துணையைத் தேடும்போது எவற்றை மனதில் வைத்திருக்க வேண்டும் (அதிகாரம் 2), நிலையான திருமண மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கிய திறவுகோல்கள் யாவை (அதிகாரம் 3), பெற்றோர்கள் தங்களுடைய பருவவயது பிள்ளைகளை பொறுப்புள்ள, கடவுள் பயமுள்ள வளரிளம் பருவத்து பிள்ளைகளாய் எப்படி வளர்க்கலாம் (அதிகாரம் 6), குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாப்பது எவ்வாறு (அதிகாரம் 8), ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களுக்கு வெற்றிபெற உதவும் நியமங்கள் (அதிகாரம் 9), குடிப்பழக்கத்தாலும் வன்முறையாலும் துன்பப்படும் குடும்பங்களுக்கு ஆவிக்குரிய உதவி (அதிகாரம் 12), திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கையில் என்ன செய்வது (அதிகாரம் 13), வயதான பெற்றோரைக் கனம்பண்ண என்ன செய்யலாம் (அதிகாரம் 15), எவ்வாறு ஒருவருடைய குடும்பத்துக்கு நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்வது (அதிகாரம் 16).
5 இப்புதிய புத்தகத்தை முழுமையாக பயன்படுத்துங்கள்: இதுவரையாக ஒருவேளை நீங்கள் இவ்வாறு படிக்காமல் இருந்தாலும்கூட, குடும்ப மகிழ்ச்சி என்ற புத்தகத்தை நீங்களும் உங்களுடைய குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இப்போது படிக்கலாம் இல்லையா? மேலும், புதிய பிரச்சினைகளையோ சாவால்களையோ உங்களது குடும்பம் எதிர்ப்படும்போதெல்லாம், புத்தகத்தில் இப்பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் அதிகாரங்களை மறுபார்வை செய்து, ஆலோசனையை எவ்வாறு பொருத்தலாம் என்று ஜெபத்தோடு சிந்தனை செய்யுங்கள். கூடுதலாக, மார்ச் மாதம் வெளி ஊழியத்திற்காக அட்டவணை போடும்போது, கொஞ்சம் தாராளமாகவே நேரத்தை ஒதுக்குங்கள்; அப்போது, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கொடுக்க நாம் முயற்சிசெய்யலாம்.
6 கடவுள் பக்தியை அப்பியாசிக்கும் குடும்பங்கள் ஆவிக்குரிய வகையில் பலப்படுத்தப்பட்டு, ஒற்றுமையோடு இருக்கும். சாத்தானுடைய தாக்குதல்களை சமாளிக்க அவை நன்கு தாயார் நிலையில் இருக்கும். (1 தீ. 4:7, 8; 1 பே. 5:8, 9) குடும்பத்தை ஏற்படுத்தி வைத்தவரிடமிருந்து நமக்குக் கிடைத்த தெய்வீக போதனைக்காக எவ்வளவாய் நன்றிக்கடன்பட்டுள்ளோம் நாம்!