கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மற்றவர்களுக்கு போதியுங்கள்
1 ஆவிக்குரிய விதத்தில் “கர்த்தருடைய வசனம் கேட்கக்” கிடைக்காமல் இருக்கிற அநேக மக்களை இன்னும் பார்க்கலாம். (ஆமோ. 8:11) கடவுள் இருக்கிறார் என சிலர் நம்புகிறபோதிலும், அவருடைய நோக்கங்களையும் அவர் தேவைப்படுத்துகிற காரியங்களையும் பற்றி அறியாமல் இருக்கின்றனர். எனவே, ஜீவனைக் காக்கும் ராஜ்ய சத்தியத்தை அவர்களுக்கு போதிப்பதற்கான அவசியம் நமக்கிருக்கிறது. எல்லா சந்தர்ப்பத்திலும் சாட்சிகொடுப்பதற்கு தகுந்த விதத்தில் தேவையானவற்றை வைத்திருப்பவர்களாயும் தயாரானவர்களாயும் இருப்பதன்மூலம், யெகோவா தேவைப்படுத்துகிறவற்றை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களை நாம் சென்றெட்ட முடியும்.
2 ஏப்ரல், மே மாதங்களில், சந்தாக்களை அளிக்கையில் விநியோகிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகவும் காலத்திற்கேற்ற காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களைக் கொண்டிருப்போம். அதோடுகூட, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை முதல் தடவையாக சிறப்பித்துக் காண்பிப்போம். அதிலுள்ள கண்கவர் படங்களும் சிந்தையைத் தூண்டும் கேள்விகளும் அந்தச் சிற்றேட்டிற்கு அதிக மெருகூட்டுகின்றன. நம்முடைய சிறப்புமிக்க பிரசுரங்களை திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தும்படி நமக்கு உதவிசெய்ய பின்வரும் ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன.
3 மக்களைத் தேடிக் கண்டுபிடித்தல்: வீட்டுக்கு வீடு சந்திக்கையில் மக்கள் அநேகர் வீடுகளில் இல்லாத இடங்களில், அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் பேசுவது பிரயோஜனமுள்ளதாய் இருந்திருக்கிறது. நற்செய்தியை எல்லா இடங்களிலும்—தெருவில், பொதுப் போக்குவரத்தில், பூங்காக்களில், வாகனங்கள் நிறுத்துமிடங்களில், வியாபார பகுதிகளில்—பிரசங்கிக்கும்படி நவம்பர் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கை நமக்கு உற்சாகமூட்டியது. அது சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நாம் உணர்வுள்ளவர்களாய் இருக்கும்படியும் செய்தது. இதற்கு ஓர் உதாரணமாக, பயனியர் சகோதரி ஒருவர் மிருகக்காட்சி சாலைக்கு சென்றார்; “அருகிவரும் உயிரினங்கள்—கவலைகொள்ள வேண்டியது ஏன்?” என்ற தொடரைக் கொண்ட ஆகஸ்ட் 8, 1996, விழித்தெழு! பத்திரிகைகளைத் தன்னுடன் கொண்டுசென்றார். ஒரு மணிநேரத்திற்குள், மிருகங்களை மிகவும் வியந்து பாராட்டும் விலங்குப் பிரியர்கள் சிலருக்கு 40 பிரதிகளைக் கொடுத்தார்! நற்செய்தியை எங்கும் பிரசங்கிப்பதில் இதுபோன்ற என்ன வெற்றியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்? காவற்கோபுரம், விழித்தெழு!, அதோடு தேவைப்படுத்துகிறார் சிற்றேடு ஆகியவை முக்கியமாய் எல்லா வகையான சாட்சிகொடுத்தலுக்கும் பொருந்துகின்றன, ஏனென்றால் அவை மக்களுடைய வாழ்க்கையைத் தொடுகிற, சிந்திக்கும் திறனை தூண்டுவிக்கிற தகவல்களைக் கலந்தாராய்கின்றன.
4 சம்பாஷணையை ஆரம்பித்தல்: அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள பின்பக்கத்தில், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு உங்களுடைய சொந்த பிரசங்கத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதன் பேரில் விபரங்கள் கொடுக்கப்பட்டது. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிற்கு உங்களுடைய பிரசங்கத்தைத் தயாரிக்கையிலும் அதே ஆலோசனைகள் பலன்தரத்தக்கவையாய் இருக்கும். நாம் என்ன சொல்கிறோமோ அது சில வாக்கியங்களாக இருக்குமளவுக்கு சுருக்கமானதாகவோ அல்லது வேதப்பூர்வமான கருத்தை உட்படுத்தும் அளவுக்கு அதிக நீண்டதாகவோ இருக்கலாம். அறிமுக வார்த்தைகளைக் கவனமாய் தெரிந்தெடுப்பது முக்கியம், ஏனென்றால் நீங்கள் அணுகுகிற நபர் தொடர்ந்து செவிகொடுப்பாரா என்பதை அது தீர்மானிக்கலாம். பின்வரும் அறிமுக வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலர் வெற்றிகரமாய் பேச்சை தொடர்ந்திருக்கின்றனர்: “என்னை உற்சாகப்படுத்திய ஒரு கட்டுரையை வாசித்தேன், நான் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.” அல்லது, மற்ற நபரை சம்பாஷணையில் கொண்டுவருவதற்கு ஆவலைத் தூண்டும் கேள்வியைக் கேட்கலாம்.
5 உங்களுடைய பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால், இந்த மாதத்தில் உங்களுடைய பிரசங்கத்தில் பின்வருவனவற்றைப் போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் முயற்சிக்கலாம்:
◼ “நாம் இன்றைக்கு சுவர்களில் கிறுக்கப்பட்ட நிறைய விளம்பரங்களையும் குப்பைகளையும் தூய்மைக்கேட்டையும் பார்க்கிறோம். பூமியை சுத்தப்படுத்தி, வாழ்வதற்கேற்ற ஒரு சிறந்த இடமாக்குவதற்கு என்ன தேவைப்படும்?” பதில்சொல்ல அனுமதியுங்கள், அதன் பின்பு எப்படி, மேலும் எப்பொழுது இந்தப் பூமி ஒரு பூகோள பூங்காவாக மாறும் என்பதைப் பற்றி நமக்கு உறுதியளிக்கிற தகவலை நீங்கள் வைத்திருப்பதாக கூறுங்கள். திட்டவட்டமான ஒரு குறிப்பையும் சுருக்கமான ஒரு வசனத்தையும் தற்போதைய பத்திரிகையிலுள்ள அழகிய படத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதன் பிறகு எவ்வாறு அவர் தவறாமல் பத்திரிகையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை விளக்குங்கள். சந்தா அளிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்தப் பத்திரிகைகளில் சில தனிப் பிரதிகளை அளிக்கத் தவறாதீர்கள். அந்த சம்பாஷணையை நீங்கள் முடிப்பதற்கு முன்பு, மற்றொரு சமயத்தில் அதை தொடருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
◼ “நமக்கு இன்றைக்கு இருப்பது மாதிரி தொல்லைகள் நிறைந்த ஒரு நிலைமையில் நாம் வாழும்படியே கடவுள் நினைத்திருந்தாரென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” அந்த நபர் பதிலளித்தப் பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தில், கடவுளுடைய ராஜ்யம் வருவதற்கு ஜெபிக்கும்படி சொன்னதை நீங்கள் ஒருவேளை கேட்டிருப்பீர்கள். கடவுளுடைய அந்த ராஜ்யம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 6-ம் பாடத்திற்குத் திருப்பி, பாடத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை வாசியுங்கள். அதன் பின்பு, பாரா 1-ஐ நீங்கள் வாசிக்கையில், முதல் கேள்விக்கான பதிலை சுட்டிக்காட்டுங்கள். மீதமுள்ள கேள்விகளும் அதைப்போலவே சுருக்கமாய் பதிலளிக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குங்கள். அந்தச் சிற்றேட்டை அளித்து, ராஜ்யத்தைப் பற்றிய அதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு மீண்டும் சந்திக்க வருவதாக சொல்லுங்கள்.
◼ “சிந்திக்கும் அநேக ஆட்கள், இந்த உலகத்திலுள்ள மதங்கள் மனித பிரச்சினைகளுக்குப் பரிகாரம் அளிப்பதற்குப் பதிலாக அவைதான் அதற்கு காரணமாக இருப்பதாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” அந்த நபருடைய கருத்தை செவிகொடுத்துக் கேட்ட பிறகு, பொய் மதத்தின் தோல்வியை அல்லது அதன் வீழ்ச்சி நெருங்கி வருவதைப் பற்றி அவருடைய ஆவலைத் தூண்டுகிற தற்போதைய பத்திரிகைகள் ஒன்றிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பை காண்பியுங்கள். சந்தாவை அளியுங்கள். பெயர்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள், அதன் பின்பு எப்படி உண்மை மதம் மனிதவர்க்கத்தை தோல்வியடையச் செய்யவில்லை என்பதை விளக்குவதற்கு மறுபடியும் வருவதாக சொல்லுங்கள்.
◼ “இன்றைக்கு குடும்ப வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் இருப்பதால், குடும்ப மகிழ்ச்சியை பெறுவதற்கான இரகசியம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” பதில்சொல்வதற்காக காத்திருங்கள், அதன் பின்பு குடும்ப மகிழ்ச்சியின் உண்மையான இரகசியத்தை பைபிளில் கடவுள் வெளிப்படுத்துகிறார் என்பதை விளக்குங்கள். ஒருவேளை ஏசாயா 48:17-ஐ நீங்கள் வாசிக்கலாம். அதற்குப் பிறகு, தேவைப்படுத்துகிறார் புத்தகத்தில் 8-ம் பாடத்திற்குத் திருப்பி, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் நம்பத்தக்க வழிநடத்துதலை அளிக்கிற இடக்குறிப்பு செய்யப்பட்ட வசனங்களில் சிலவற்றை சுட்டிக்காட்டுங்கள். பாடத்தின் துவக்கத்திலுள்ள கேள்விகளை வாசியுங்கள். அந்த நபர் பதில்களை வாசிக்க விரும்புகிறாரா என்று கேளுங்கள். அவருக்கு அந்தச் சிற்றேட்டை அளித்து, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு பைபிளில் அடங்கியுள்ள நடைமுறையான வழிநடத்துதலில் கூடுதலானவற்றை பகிர்ந்துகொள்வதற்கு மறுபடியும் வருவதாக சொல்லுங்கள்.
6 மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கை, தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்தியது. முதல் சந்திப்பில் இல்லையென்றால், மறுசந்திப்பில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தும்படி அது சிபாரிசு செய்தது. கடவுள் தேவைப்படுத்துகிறவற்றைக் கற்றுக்கொண்டு அதைச் செய்வதே மனிதவர்க்கத்தின் மிகப் பெரிய தேவை. (கொலோ. 1:9, 10) ஜீவனைப் பெறுவதற்கு யெகோவா தேவைப்படுத்தும் காரியங்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறவற்றை மற்றவர்களுக்கு கற்பிக்க ஆரம்பிப்போமானால், ஏப்ரல், மே மாதங்களில் மற்றவர்களுக்கு நாம் அதிகமாய் பயனளிப்போம்.—1 கொ. 9:23.