புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
“யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாமல் வைத்திருத்தல்” என்பதே அடுத்த வருட ஆரம்பத்தில் துவங்க இருக்கும் இரண்டு நாள் வட்டார மாநாட்டின் தலைப்புப் பொருளாகும். (2 பே. 3:12, NW) நம்மில் அவசர உணர்வைத் தூண்டும் விதமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பூமியின் குடிகள் சீக்கிரத்தில் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை எதிர்ப்படுவார்கள். “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில்” யார் தப்பிப்பிழைப்பார்கள்? ஆவிக்குரிய விதத்தில் விழிப்புள்ளவர்களாய் நிலைத்திருப்பவர்களும் “பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ள” வாழ்க்கை மாதிரியை உறுதியாய் பின்பற்றுகிறவர்களுமே தப்பிப்பிழைப்பார்கள்.—வெளி. 16:14; 2 பே. 3:11.
யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்க ஒரு நபருக்கு முழுக்காட்டுதல் இன்றியமையாதது. (1 பே. 3:21) இந்த மாநாட்டில் முழுக்காட்டப்பட விரும்பும் பிரஸ்தாபிகள், நடத்தும் கண்காணியிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்; அவர் அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்.
“நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்” என்ற நான்கு பகுதிகளடங்கிய தொடர்பேச்சு, யெகோவாவுடைய நாளின் பிரசன்னத்தை மனதில் இடைவிடாமல் வைத்திருப்பதில் என்ன செயல்கள் உட்பட்டிருக்கின்றன என்பதை தெளிவாக காண்பிக்கும். “யெகோவாவின் நாள் நெருங்கிவருகையில் ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்” என்ற பொதுப் பேச்சு, தப்பிப்பிழைப்பவராய் இருப்பதற்கு, ‘யெகோவாவையும் நீதியையும் மனத்தாழ்மையையும் தேடுவது’ எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்கிக் காண்பிக்கும்.—செப். 2:3, NW.
பயணக் கண்காணிகளால் கொடுக்கப்படும் உந்துவிக்கும் இரண்டு பேச்சுக்களுடன் அந்த வட்டார மாநாடு முடிவடையும்; அந்தப் பேச்சுக்கள் இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளன: “உங்கள் வாழ்க்கை சத்தியத்தை மையமாகக் கொண்டிருக்கிறதா?” மற்றும் “யெகோவாவின் நாளை மனதிற்கொண்டு முன்னதாகவே திட்டமிடுதல்.” நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்துபார்த்து, தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு இந்தப் பேச்சுக்கள் நம்மை தூண்டுவிக்கும். யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது என்பதை பைபிள் தீர்க்கதரிசனமும் உலக சம்பவங்களும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, விழித்திருக்கும்படி’ இந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் நம்மை உற்சாகப்படுத்தும். (1 பே. 5:8) நிச்சயமாய் இரண்டு நாட்களும் ஆஜராயிருப்பதற்கு திட்டமிடுங்கள்.