புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
“கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொண்டு பிழைப்பாயாக” என்பதே ஜனவரி 1999-லிருந்து துவங்குகிற நம்முடைய இரண்டு நாள் வட்டார மாநாட்டின் தலைப்பு. (நீதி. 4:4) கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவது ஏன் பாரமானதல்ல என்பதை அது வலியுறுத்தும். கூடுதலாக, கடவுளுடைய சித்தத்தை செய்வது எவ்வாறு புத்துணர்ச்சியையும் உண்மையான சந்தோஷத்தையும் அதேசமயத்தில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொடுக்கிறது என்பதையும் காட்டும்.—மத். 11:28-30; யோவா. 13:17.
கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து மாநாட்டில் முழுக்காட்டப்பட விரும்புகிறவர்கள் தங்கள் விருப்பத்தை நடத்தும் கண்காணியிடம் சொல்ல வேண்டும்; அவர் தேவையான ஏற்பாடுகளைச் செய்வார்.—மத். 28:19, 20.
கடவுளுக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் அன்பைக் காட்டுவதற்கான நடைமுறையான வழிகளைக் குறித்து ஒரு தொடர்பேச்சு விளக்கும். (யோவா. 13:34, 35; 1 யோ. 5:3) நிகழ்ச்சிநிரலில், சங்கீதம் 19, 119 ஆகிய அதிகாரங்களில் அடங்கியிருக்கும் உள்ளத்தை ஊக்குவிக்கும் ஆலோசனைகள் இடம்பெறும். இந்தச் சங்கீதங்களிலுள்ள ஏவப்பட்ட புத்திமதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும்கூட, இன்று நமக்கு தனிப்பட்ட விதமாக எவ்வாறு பலனளிக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.
“தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்” என்பதே மாவட்டக் கண்காணியால் கொடுக்கப்படும் பொதுப் பேச்சின் தலைப்பு. (பிர. 12:13) இளைஞர்கள் இப்போதே எப்படி தங்களுடைய வாழ்க்கையில் சிறந்ததைக் கண்டடையலாம் என்பதையும் என்றென்றுமான எதிர்காலத்தைக் குறித்ததில் அவர்கள் எவ்வாறு உறுதியுடன் இருக்கலாம் என்பதையும் வட்டாரக் கண்காணியின் கடைசி பேச்சு விளக்கும். அன்பின் ‘ராஜரிக பிரமாணத்தின்படி’ வாழ்வதன் மூலம் கிடைக்கும் அநேக நன்மைகளை தொகுத்தளிப்பதன் மூலம் மாவட்டக் கண்காணி நிகழ்ச்சியை நிறைவு செய்வார். (யாக். 2:8) உண்மையில், எவருமே தவறவிட விரும்பாத வட்டார மாநாடு அல்லவா இது!