புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
1 பிப்ரவரி 1997-ல் தொடங்கவிருக்கும் புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல், “கொடுப்பதிலிருந்து வரும் பெருமகிழ்ச்சியை அனுபவியுங்கள்” என்ற தலைப்புப் பொருளை விவரிக்கும். (அப். 20:35) மகிழ்ச்சி என்பது “நலமும் திருப்தியும் நிறைந்த ஒரு மனநிலை” என்பதாக விவரிக்கப்படுகிறது. இன்று பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் தங்களுக்கு என்னென்ன சந்தோஷத்தை அடையமுடியுமோ அதையெல்லாம் வற்புறுத்தி பெறுகின்றனர். அவ்வாறு பெறும்போது அது அடிக்கடி தற்காலிகமானதாகவே இருக்கிறது. அது உண்மையான மகிழ்ச்சி அல்ல. இருப்பினும், நாம் என்றென்றுமாக பலனடைவது எவ்வாறு என்று யெகோவா நமக்கு போதிக்கிறார். (ஏசா. 48:17; 1 யோ. 2:17) ஆவிக்குரிய விதத்தில் கொடுப்பதன்மூலம் நாம் எவ்வாறு பெருமகிழ்ச்சியை பெறலாம் என்பதை இந்தப் புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல் அழுத்திக்காட்டும்.
2 ஊழியத்தில் நம்மையே கொடுப்பதற்கான நடைமுறையான வழிகளை நாம் கற்றுக்கொள்ளலாம். பிரயாணக் கண்காணிகளால் கொடுக்கப்படும் பேச்சுக்களின் தலைப்புகள்: “அநீதியான உலகப்பொருளால் நண்பர்களை சம்பாதித்தல்,” “ ‘மனுஷர் வடிவில் வரங்களாகிய’ தெய்வீக ஏற்பாட்டுக்கு மரியாதை காண்பியுங்கள்,” “உண்மை மகிழ்ச்சியின் பல அம்சங்களை அனுபவியுங்கள்.” இந்த மாநாட்டில் முழுக்காட்டப்பட விரும்புகிறவர்கள், நடத்தும் கண்காணியைச் சந்தித்து, தங்களோடு முழுக்காட்டுதலுக்கான கேள்விகளை மறுபார்வை செய்ய மூப்பர்களை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்ள விரும்புவார்கள். ஒரு சுத்தமான உறவுமுறையோடு யெகோவாவுக்கு சேவை செய்வது புதிதாக முழுக்காட்டப்பட்ட ஆட்களுக்கு பெருமகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
3 யெகோவாவின் அதிகாரத்தை தகுந்தவகையில் ஒப்புக்கொள்ளுதலும் உண்மையான மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் கொண்டுவருகிறது. மக்கள் அனைவரும் இதை தெரிந்திருக்கவேண்டும். ஆகவே, இந்த வட்டார மாநாடு, “கடவுளுடைய மகிழ்ச்சியுள்ள மக்களோடு ஒன்றுபடுங்கள்,” என்ற தலைப்புப் பொருளை விளக்கும். சத்தியத்தில் அக்கறை காண்பித்திருக்கும் அனைவரையும் இந்தப் பேச்சை வந்து கேட்கும்படி அழைக்கத் தவறாதீர்கள். சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ் கிடக்கும் இந்த உலகில் உள்ள மனித ஆட்சியின்கீழ் அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பும் நிரந்தரமான மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை. (பிர. 8:9) ஆனால் யெகோவாவின் மகிழ்ச்சியான ஜனங்களோடு கூட்டுறவு கொள்வதில் அவர்கள் என்னே ஒரு சந்தோஷத்தைக் காண்பார்கள்!—சங். 144:15ஆ.
4 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் சீரழிந்துகொண்டிருக்கும் நிலைமைகளின் மத்தியிலும், ஆவிக்குரிய விதத்தில் கொடுப்பதன் பெருமகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் நித்தியானந்தக் கடவுளால் ஒருபோதும் ஏமாற்றப்படமாட்டார்கள். (1 தீ. 1:11) இது உண்மையாக இருக்கிறது என்பதை புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல் மெய்ப்பிக்கும். அதைத் தவறவிடாதீர்கள்!