புதிய வட்டார அசெம்பிளி நிகழ்ச்சிநிரல்
1 மத்தேயு 6:33-லுள்ள (NW) இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் விதமாக, உண்மை கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் ராஜ்யத்தை தங்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். எனவே, ஜனவரி 1994-ல் ஆரம்பமாகும் வட்டார அசெம்பிளி நிகழ்ச்சிநிரலுக்கு “முதலாவது ராஜ்யத்தைத் தேடிக்கொண்டிருங்கள்” என்ற தலைப்பு பொருத்தமான ஒன்றாகும்.
2 தொடக்கத்திலிருந்து இந்த நிகழ்ச்சிநிரல் ராஜ்யத்தின் மெய்மையை சிறப்பித்துக் காண்பித்து, ஆட்சி எல்லை, ஆட்சியாளர்கள், குடிமக்கள், மற்றும் சட்டங்களினால் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஓர் அரசாங்கம் என்பதை வலியுறுத்திக் கூறும். உண்மையில், இன்று சமுதாயத்திற்கு பயனளிக்கிற மனித அரசாங்கங்களின் சட்டங்கள் பல, பைபிள் சட்டங்களின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
3 நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ராஜ்யத்திற்கு முன்னுரிமை அளிப்பதிலிருந்து நாம் பெறுகிற பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் சிந்திக்கப்படும். தேவையில்லாத கவலையை நாம் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைக் காண்பிக்க பயனுள்ள ஆலோசனை கொடுக்கப்படும். பேச்சுக்கள், நடிப்புகள், கலந்தாலோசிப்புகள் ஆகியவை, நம்முடைய கண்ணைத் தெளிவாக வைத்துக்கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைக் காண்பிக்கும்.
4 அந்த அசெம்பிளியில் சனிக்கிழமை அன்று, முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தகுதியுள்ள மாணாக்கர்கள் யெகோவாவுக்கான தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை வெளிப்படையாகத் தெரிவிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை, “கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்திற்காக செய்யவிருப்பவை” என்று தலைப்பிடப்பட்ட பொதுப் பேச்சுக்கு நாமனைவரும் ஆஜராயிருக்க விரும்புவோம்.
5 அந்த வட்டார அசெம்பிளியில் இரண்டு நாட்களும் ஆஜராயிருப்பதற்காக நீங்கள் திட்டமிடுவதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். மகிழ்வளிக்கிற சகோதர கூட்டுறவோடுகூடிய அந்த அசெம்பிளி நிகழ்ச்சிநிரல், நம்மில் ஒருவரும் தவறவிட விரும்பாத, கட்டியெழுப்பும் புத்துணர்ச்சிமிக்க உற்சாகத்தை அளிக்கும்.