புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
1 அடுத்த வருட தொடக்கத்தில் ஆரம்பிக்கும் புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் விவரிக்கப்படும் பேச்சுப் பொருள் “விழித்திருங்கள், நிலைத்திருங்கள், திடன்கொள்ளுங்கள்,” என்பதாகும். இது 1 கொரிந்தியர் 16:13-ல் பதிவுசெய்யப்பட்ட, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த உற்சாகமூட்டுதலின் அடிப்படையில் அமைந்ததாகும்.
2 நிகழ்ச்சிநிரல், ஆவிக்குரிய சுய-பரிசோதனையை நாம் தொடர்ந்து செய்யவேண்டியதன் அவசியத்தை சிறப்பித்துக் காட்டுவதன்மூலம் ஆரம்பமாகும். இந்தக் “கடைசிநாட்களில்” சரியானது எதுவோ அதற்காக பலமான நிலைநிற்கையைக் காத்துக்கொள்வது, யெகோவாவுடன் நம்முடைய உறவையும் அவருடைய பூமிக்குரிய அமைப்போடு உள்ள நம்முடைய நிலைநிற்கையையும் உண்மையுடன் மதிப்பிட்டுப் பார்ப்பதை தேவைப்படுத்துகிறது. (2 தீ. 3:1) நம்முடைய அனைத்து கடின வேலைக்குமான கடவுளுடைய போற்றுதலைக் குறித்து நாம் நினைப்பூட்டப்படுவோம். நம்முடைய கிறிஸ்தவ குணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் முன்மாதிரியான நடத்தையை காத்துக்கொள்வதற்குமான வழிகளில் நாம் போதிக்கப்படுவது அவசியம்.
3 ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காகவும் உத்தரவாதத்திற்காகவும் அடைய நாடுகிறபோதிலும், சீஷராக்கும் வேலையில் வைராக்கியமுள்ளவர்களாய் இருக்கவேண்டியதன் அவசியமும் வலியுறுத்திக் காட்டப்படும். தனிப்பட்ட நபர்களும் குடும்பங்களும் எவ்வாறு ஓர் ஒழுங்கான ஆவிக்குரிய போஷாக்குத் திட்டத்தை காத்துக்கொள்ளலாம் என்பதன் பேரிலான நடைமுறை ஆலோசனைகள், வித்தியாசப்பட்ட பேச்சுக்கள், நடிப்புகள், கலந்தாலோசிப்புகள் ஆகியவற்றினால் முக்கியப்படுத்திக் காட்டப்படும்.
4 சனிக்கிழமை அன்று, தகுதிவாய்ந்தவர்கள் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீரில் முழுக்காட்டப்படுவதன் மூலம் வெளிப்படையாக காண்பிப்பார்கள். பின்பு ஞாயிற்றுக்கிழமை அன்று, “கடவுளிடம் உங்கள் நிலைநிற்கை என்ன?” என்று தலைப்பிடப்பட்ட பொதுப் பேச்சுக்காக நாம் அனைவரும் ஆஜராயிருக்க விரும்புவோம்.
5 விசுவாசத்தில் உறுதியாயிருந்து, எப்பொழுதும் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் சமாதான மனப்பான்மையோடு நடந்துகொண்டிருப்பதற்கான உற்சாகமூட்டுதலுடன் நிகழ்ச்சிநிரல் முடிவடையும். வட்டார மாநாடு, ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவப்படும்படி’ நம் அனைவருக்கும் யெகோவா ஏற்பாடு செய்கிற விசேஷித்த வாய்ப்புகளில் ஒன்றாகும். (எபி. 10:24, 25) இரண்டு தினங்களிலும் முழு நிகழ்ச்சிநிரலுக்காக ஆஜராயிருக்கும்படி நிச்சயமான திட்டமிடுங்கள்.