உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/98 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • கிறிஸ்தவக் கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருப்பதில் உங்கள் பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கூட்டங்களில் சந்தோஷ வெள்ளம் பெருக்கெடுக்க
    நம் ராஜ்ய ஊழியம்—1999
  • கூட்டங்கள் தரும் நன்மைகள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 4/98 பக். 7

கேள்விப் பெட்டி

◼ நம்முடைய கூட்டங்களை அதிக திறம்பட்டவையாக ஆக்குவதற்கு உதவியாக நாம் என்ன செய்யலாம்?

மூப்பர்களும் உதவி ஊழியர்களும் மட்டுமே சபை கூட்டங்களின் வெற்றிக்கு பொறுப்புள்ளவர்கள்; ஏனெனில் அவர்கள்தாமே அவற்றை நடத்துகிறார்கள்; அவற்றின் பெரும்பாலான பகுதியை கையாளுகிறார்கள் என்று சிலர் ஒருவேளை உணரலாம். உண்மையில், ஆர்வமிக்க, பயனுள்ள கூட்டங்களுக்காக நாம் அனைவருமே தனிப்பட்ட விதமாக உதவலாம். கூட்டங்களை அதிக திறம்பட்டவையாக ஆக்குவதற்கு பின்வருகிற பத்து வழிகளில் நாம் உதவலாம்:

முன்கூட்டியே தயாரியுங்கள். நன்றாக தயாரிக்கும்போது, கூட்டங்களுக்கு செல்லவேண்டும் என்ற துடிப்பு நமக்குள் ஏற்படும். நாம் எல்லாருமே இதை செய்கையில், கூட்டங்கள் உயிரோட்டமுள்ளவையாகவும் அதிக கட்டியெழுப்புபவையாகவும் இருக்கின்றன. தவறாமல் ஆஜராகுங்கள். கூட்டங்களுக்கு அதிகமான ஆட்கள் ஆஜராகும்போது, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் அதிக உற்சாகமூட்டுவதாக இருக்கிறது; கூட்டங்களுக்கு வருவதன் முக்கியத்துவத்தை அதிகம் மதித்துணரச் செய்கிறது. தொடங்குவதற்கு முன்னரே வந்துவிடுங்கள். நாம் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே வந்து அமர்ந்துவிட்டால், ஆரம்ப பாட்டு, ஜெபம் ஆகியவற்றில் சேர்ந்து கொள்ள முடியும்; இதனால் கூட்டங்களிலிருந்து முழு நன்மையையும் பெறலாம். நன்கு ஆயத்தமாக வாருங்கள். பைபிளையும் கூட்டங்களில் பயன்படுத்தப்படுகிற நம் பிரசுரத்தையும்/பிரசுரங்களையும் கொண்டுவருவதன் மூலம், என்ன கலந்தாலோசிக்கப்படுகிறதோ அதை ஒன்றுவிடாமல் கவனிக்கவும் நன்றாக புரிந்துகொள்ளவும் முடியும். கவனச்சிதறல்களை தவிருங்கள். நாம் முன்னால் அமர்ந்தோமானால் நன்றாக கவனிக்கலாம். கிசுகிசுப்பது, டாய்லெட்டுக்கு அடிக்கடி சென்று வருவது ஆகியவை நாமும் மற்றவர்களும் கவனத்தை இழக்கும்படி செய்யும். பங்குகொள்பவராக இருங்கள். நம்மில் அதிகமான பேர் கைகளை உயர்த்தி, குறிப்பு சொல்கையில், அநேகர் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்; அதோடு விசுவாசமிக்க வார்த்தைகளால் கட்டியெழுப்பப்படுகின்றனர். சுருக்கமான குறிப்புகளை சொல்லுங்கள். இது பங்குகொள்வதற்கான வாய்ப்பை அநேகருக்கு அளிக்கிறது. நம்முடைய சுருக்கமான குறிப்புகள் படிக்கப்படும் பொருளிலிருந்து மட்டுமே சொல்லப்படவேண்டும். நியமிப்புகளை செய்து முடியுங்கள். தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் மாணாக்கராகவோ, ஊழியக் கூட்டத்தில் பங்குபெறுகிறவராகவோ இருந்தால், நன்கு தயாரியுங்கள்; முன்னரே ஒத்திகை செய்து பாருங்கள்; மேலும் உங்கள் நியமிப்பை எப்போதுமே செய்துமுடிக்க தவறாதீர்கள். பங்குபெறுகிறவர்களை பாராட்டுங்கள். மற்றவர்களிடம், அவர்களுடைய முயற்சி எந்தளவுக்கு பாராட்டுதலுக்குரியது என்பதை சொல்லுங்கள். இது அவர்களை கட்டியெழுப்பி, எதிர்காலத்தில் இன்னும் நன்றாக செய்வதற்கும்கூட தூண்டும். ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துங்கள். கூட்டங்களுக்கு முன்பும், கூட்டங்களுக்கு பின்பும் தயவான வாழ்த்துக்களும் கட்டியெழுப்பும் உரையாடல்களும், கூட்டங்களில் ஆஜராவதால் நாம் பெறும் இன்பத்தையும் பலன்களையும் அதிகப்படுத்துகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்