மக்களின் கருத்தைக் கவரும் கட்டுரைகளை தேர்ந்தெடுங்கள்
1 தங்கள் அம்புகளை எய்ய கவனமாக குறிபார்க்கும் வில்வீரர்களைப் போல, சபையிலுள்ள அநேக பிரஸ்தாபிகளும் பயனியர்களும் தங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களின் தனிப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, மனதை கவருவதற்கு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை பயன்படுத்துகின்றனர்; அதன் மூலம் மெச்சத்தகுந்த வெற்றியை பெற்றிருக்கின்றனர். நம் பத்திரிகைகளில் வரும் குறிப்பிட்ட சில கட்டுரைகளை யார் பெரும்பாலும் வாசிக்க விரும்புவர் என்பதை அவர்கள் தீர்மானிக்கின்றனர்; மேலும் அத்தகைய கட்டுரைகளைப் பயன்படுத்தி, நம்முடைய பத்திரிகைகளுக்கு சந்தா எடுக்கும்படி குறிப்பிட்ட சில நபர்களை உற்சாகப்படுத்துகின்றனர். அவர்கள் இதை எவ்வாறு செய்கின்றனர்?
2 முதலாவதாக ஒவ்வொரு இதழையும் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரையிலுமாக படிக்கின்றனர். அப்போது, ஒவ்வொரு கட்டுரையும் எத்தகைய ஆட்களை கவரக்கூடியதாக இருக்கும் என்று தங்களுக்குதாங்களே கேட்டுக் கொள்கின்றனர். பிறகு, அந்தக் கட்டுரையை படிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கும் நபர்களை சந்திப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தைக் கவரும் அந்தக் கட்டுரையை அவர்களிடம் காட்டியபிறகு, ஒரு சந்தா செய்யும்படி கேட்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதி தங்களுடைய பிராந்தியத்தில் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை எதிர்நோக்கும்போது, இந்தச் சாட்சிகள் கூடுதலான பிரதிகளை ஆர்டர் செய்கின்றனர்.
3 நம் பத்திரிகைகள் உயர்வாய் மதிக்கப்படுகின்றன: நைஜீரியாவில் மிகப் பரவலாக வாசிக்கப்படும் சர்வதேச பத்திரிகை ஒன்றிற்காக வேலை செய்யும் நம்முடைய சந்தாதாரர் ஒருவர், “உலகின் மிகச்சிறந்த பொதுப்படை பத்திரிகைக்கு பாராட்டுக்கள்” என்று விழித்தெழு!-வைக் குறித்து சொன்னார். நம்முடைய பத்திரிகைகளை ஆர்வமாக வாசிக்கும் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மதிப்புமிக்க ஞானத்தின் என்னே வியத்தகு இரத்தினங்கள்! எனக்கு பிடித்தமான கட்டுரைகள் இவற்றில் [பத்திரிகைகளில்] ஏதாவது ஒரு பக்கத்தில் இல்லாமல் இருப்பதில்லை.”
4 இந்தப் பத்திரிகைகள் பலதரப்பட்ட விஷயங்களை கையாளுகின்றன. அவற்றில் சிலவற்றை பட்டியலிட்டால், பைபிள், உலக நிகழ்ச்சிகள், குடும்பப் பிரச்சினைகள், சமுதாய பிரச்சினைகள், சரித்திரம், விஞ்ஞானம், மிருக மற்றும் தாவர உயிர்கள் ஆகியவை அடங்கும். நிச்சயமாகவே, தன்னுடைய தேவைகள், சூழ்நிலைமைகள், அல்லது தொழிலோடு சம்பந்தப்பட்ட ஏதோவொன்றை வாசிப்பதற்கு ஒருவர் அதிக நாட்டமுள்ளவராக இருப்பார். அவரவருக்குரிய தனிப்பட்ட விருப்பங்களையும் பிரச்சினைகளையும் உடைய அநேக நபர்களிடம் நாம் பேசுவதால், நாம் சந்திக்கும் மக்களின் மனதைக் கவருகிற கட்டுரைகளை தேர்ந்தெடுப்பது அதிக பலனுள்ளதாக இருக்கிறது.
5 சாட்சிகள் இருவர் ஒரு செய்தித்தாள் பத்தியெழுத்தாளரிடம் செப்டம்பர் 8, 1996 விழித்தெழு!-வை அளித்தபோது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். அவர் எழுதினார்: “எனக்கு விருப்பமில்லை என்று நான் சொல்வதற்குள் அவர்களில் ஒருவர் சொன்னார்: ‘அமெரிக்க இந்தியர்களைப் பற்றி இதுல ஒரு கட்டுரை இருக்கு. இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் நிறையா எழுதியிருக்கிறீங்கன்னு எங்களுக்குத் தெரியும்.’” அவர் அந்தப் பத்திரிகையை பெற்றுக்கொண்டார்; காலை சாப்பாட்டின்போது இந்தியர்களைப் பற்றிய அந்தக் கட்டுரையை வாசித்தார்; “அபாரமாக இருந்தது, . . . முழுவதும் நேர்மையானதாக இருந்தது” என்று பின்னர் ஒத்துக்கொண்டார்.
6 உங்கள் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு ஆர்வமூட்டுவது எது? உங்கள் பிராந்தியத்திலுள்ள கடைக்காரர்கள் தொழில்புரிபவர்கள் அல்லது உங்களுடைய அயலார், உடன் பணிபுரிபவர்கள், உடன் மாணவர்கள் ஆகியோரை கவரக்கூடிய எதை சமீப மாதங்களில் வந்த பத்திரிகைகளில் பார்த்தீர்கள்? வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், குடும்ப ஆலோசகர்கள், பள்ளி ஆலோசகர்கள் பருவ வயதினருக்கு அறிவுரை கூறுவோர், பொதுநல ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு எவை பிரத்தியேக அக்கறைக்குரியவையாக இருக்கும்? ஒவ்வொரு இதழையும் கவனமாக படிக்கையில், நீங்கள் பிரசங்கிக்கும் பலதரப்பட்ட பின்னணியிலுள்ள மக்களை நினைவில் வைத்திருப்பது சத்தியத்தின் வார்த்தைகளை பரப்புவதற்கு மிகச் சிறந்த வழிகளைக் கொடுக்கும்.
7 காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் விசேஷ ஆர்வத்தைக் காட்டி, அந்தப் பத்திரிகையை ஏற்றுக்கொள்கிற ஒரு நபரை நீங்கள் சந்திப்பீர்களென்றால், இவ்வாறு சொல்லலாம்: “இனிவரும் இதழில் உங்களுக்கு ஆர்வமூட்டுகிற ஒரு கட்டுரை இருக்கிறதென்றால், அந்தப் பிரதியை உங்களுக்கு கொண்டுவந்து கொடுக்கிறேன்.” புதிய பத்திரிகைகளுடன் அந்நபரை அவ்வப்போது சந்திப்பதன்மூலம், உங்களுடைய பத்திரிகை மார்க்கத்தில் அவரையும் சேர்த்துக்கொள்ளலாம். நம் பத்திரிகைகளிலுள்ள குறிப்பிட்ட கட்டுரைகளில் விசேஷமாக அக்கறை காட்டுகிற நபர்களை மறுசந்திப்பு செய்வதற்காக, நீங்கள் இதுவரை செய்துவந்த நேரடியான அணுகுமுறைக்கு இது ஒத்திருக்கிறது.
8 ஆவிக்குரிய உள்நோக்கோடு இருங்கள்: ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, வேலையிலேயே முழுமூச்சாக இருந்த ஒரு மனிதர், தனக்கு ஆர்வமூட்டிய ஒரு பொருளில் விழித்தெழு! பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், மத நம்பிக்கையுள்ள இந்த மனிதர் அதன் துணைப் பத்திரிகையான காவற்கோபுரத்தையும் வாசிக்க ஆரம்பித்தார்; திரித்துவத்தில் சிறுவயதுதொட்டு அவருக்கிருந்த நம்பிக்கையை நுணுக்கமாய் ஆராய அதிலிருந்த ஒரு கட்டுரை அவரைத் தூண்டியது. ஆறு மாதங்களுக்கு பிறகு அவர் முழுக்காட்டப்பட்டார்! எனவே, நம் பத்திரிகைகளின் வாசகர்களை ஆவிக்குரிய கலந்தாலோசிப்புகளில் ஈடுபடுத்துவதற்கு தயங்காதீர்கள். கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்; பத்திரிகைகளின் புதிய பிரதிகளோடு மறுபடியுமாக நீங்கள் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை கலந்தாலோசிப்பதற்கு ஒருசில நிமிடங்களை எடுத்துக் கொள்ளலாமா என அவர்களிடமாக கேளுங்கள்.
9 உங்களுடைய மறுசந்திப்புகளிலும் வியாபார ரீதியாக தொடர்பு கொள்பவர்களிலும் காவற்கோபுரம், விழித்தெழு!-விற்கான சந்தாவை யார் பெரும்பாலும் மதித்துணர்வோடு ஏற்றுக்கொள்வர் என்பதை கவனமாக தீர்மானியுங்கள். அவர்களை சென்று சந்திப்பதற்கு ஊக்கமான முயற்சி எடுங்கள். இந்த மதிப்புமிக்க பத்திரிகைகளை அளிக்கும்படி உங்களால் முடிந்தளவுக்கு அதிகமானோரை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் சந்தா எடுக்காவிட்டாலும், ஆர்வம் காட்டினார்களென்றால், புதிய இதழ்களை தவறாமல் கொண்டுபோய் கொடுங்கள், ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு பிரத்தியேகமாக ஆர்வமூட்டக்கூடிய கட்டுரையாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதை சுட்டிக்காட்டுங்கள். நம் பத்திரிகைகளை அதிகமான பேர் வாசிப்பதற்கு உதவ முயலுகையில், “ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு”கிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். காலப்போக்கில், எதிர்கால உடன் சீஷர்களை கண்டுபிடிப்பதில் நீங்கள் வெற்றி அடையலாம்.—பிர. 11:1, 6.