நம் அயலார் நற்செய்தியைக் கேட்க வேண்டும்
1 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டுமென்பது கடவுளின் சித்தம். (1 தீ. 2:4) “எல்லா மனுஷர்” என்பது நம் அயலாரையும் உட்படுத்துகிறது. நற்செய்தியுடன் அவர்களை சென்றெட்டுவதற்கு வித்தியாச வித்தியாசமான பிரசங்கங்களை அறிந்திருப்பதும் நாம் சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கும் எது அக்கறையூட்டுவதாய் இருக்கும் என்பதைக் குறித்து சிந்திப்பதும் அவசியம். (1 கொ. 9:19-23) ‘நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வுள்ளவர்களின்’ இருதயத்தை சென்றெட்டுவதற்கு உதவும் கருவிகளை யெகோவாவின் அமைப்பு நமக்கு தந்திருக்கிறது. (அப். 13:48) நம் அயலாரின் ஆவிக்குரிய தேவைகளுக்கு ஏற்ப ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாம் எவ்வாறு வெவ்வேறு சிற்றேடுகளைப் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
2 சிறப்பு அம்சங்களை உடைய சிற்றேடுகள்: குறிப்பிட்ட சிற்றேடுகளை அளிப்பதற்கு உதவக்கூடிய சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலோசனையிலும் (1) உரையாடலைத் துவக்குவதற்கு சிந்தனையைத் தூண்டும் கேள்வியும், (2) நீங்கள் பேசும் பொருளுக்கேற்ற குறிப்புகள் சிற்றேட்டில் எங்கே இருக்கின்றன என்பதும், (3) உரையாடும்போது வாசிப்பதற்கு பொருத்தமான வசனமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர் செவிகொடுப்பதைப் பொருத்து, மீதமுள்ள பிரசங்கத்திற்கு உங்கள் சொந்த வார்த்தைகளை உபயோகியுங்கள். பெரும்பாலான சிற்றேடுகளுக்கு நம் ராஜ்ய ஊழியத்தின் முந்தைய இதழ் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; அதில் சிற்றேட்டை எவ்வாறு அளிக்கலாம் என்பதற்கான விரிவான பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?
அநியாயத்தால் கஷ்டப்படுகிற மக்களுக்கு மிகச் சிறந்த நம்பிக்கை இருக்கிறது; அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?—பக்கங்கள் 27-8, பாராக்கள் 23-7; ஏசா. 65:17, 18; km-TL 7/97 பக். 8.
வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
இன்று ஏன் இத்தனையநேக மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் விரக்தி அடைந்திருக்கிறார்கள்?—பக்கங்கள் 29-30, பாராக்கள் 2, 25-6; சங். 145:16; km-TL 7/96 பக். 4.
பூமியில் வாழ்க்கையை என்றென்றுமாக மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
இயேசு கிறிஸ்து இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?—41-2-ம் பக்கங்களிலுள்ள படங்கள்; வெளி. 11:15; km-TL 8/96 பக். 8.
பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்.
இயேசு ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்த அந்த ராஜ்யத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?—பக்கம் 3; மத். 6:9, 10.
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்.
மரணத்தில் அன்பானவரை இழந்த ஒருவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என யோசித்ததுண்டா?—பக்கம் 26, பாராக்கள் 2-5; யோவா. 5:28, 29; km-TL 7/97 பக். 8.
நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
கடவுளுடைய உண்மையான இயல்பை புரிந்துகொள்வது நம்முடைய எதிர்காலத்துக்கு அவசியமா?—பக்கம் 3, பாராக்கள் 3, 7-8; யோவா. 17:3.
3 மற்ற சிற்றேடுகள்: பிப்ரவரி 1998 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில், புத்த மதத்தினர், இந்துக்கள், யூத மதத்தினர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு சாட்சி கொடுப்பதற்கென விசேஷமாக தயாரிக்கப்பட்ட மற்ற பிரசுரங்களையும் சிற்றேடுகளையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம், நாம் சந்திக்கும் மக்களுக்கு இந்தச் சிற்றேடுகளை அளிக்கலாம். இந்த உட்சேர்க்கையின் பக்கங்கள் 4-6-ல் உள்ள ஆலோசனைகளை, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 21-4-வுடன் சேர்த்து இத்தகைய மக்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சுருக்கமான பிரசங்கங்களைத் தயாரியுங்கள்.
4 மெத்தப் படித்த, ஆனால் அதே சமயத்தில் பைபிளைப் பற்றி சிறிதே அறிந்திருக்கிற மக்களுக்கு உதவி செய்வதற்கு மற்றொரு சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய வார்த்தையினிடமாக இவர்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமாயிருக்கிற இடங்களில் இதை நீங்கள் அளிக்கலாம்:
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்.
பலதுறைகளிலும் அறிவு பெற்றிருப்பது பைபிளில் அடங்கியிருப்பதைப் பற்றி அறிந்திருப்பதையும் குறிக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?—பக்கம் 3, பாராக்கள் 1-3 மற்றும் பக்கம் 30, பாரா 2; பிர. 12:9, 10.
5 பைபிள் படிப்புச் சிற்றேடு: ஊழியத்தில் எப்போதுமே நம்முடைய குறிக்கோள் முதல் சந்திப்பிலோ, அடுத்தடுத்த மறுசந்திப்பிலோ பைபிள் படிப்பை துவங்கவேண்டும் என்பதுதான். அந்த விதத்தில், வீட்டு பைபிள் படிப்புகளை துவங்குவதற்கும் நடத்துவதற்கும் எளிதாக பயன்படுத்தமுடிகிற பின்வரும் சிற்றேடு நம்மிடம் உள்ளது:
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
ஒரு வாரத்துக்கு 30 நிமிடங்களையோ, அதற்கும் குறைவாகவோ செலவிட்டால், வெறும் 16 வாரங்களில், உங்களால் பைபிளின் அடிப்படை சத்தியத்தை அறிந்துகொள்ள முடியுமென உங்களுக்கு தெரியுமா?—பாடம் 2, பாரா 6; 2 தீ. 3:16, 17; km-TL 3/97 பக். 4.
6 நல்ல சமாரியனைப் பற்றிய உவமையில், துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அன்பையும் தயவையும் காட்டி, உதவுபவரே உண்மையான அயலார் என்பதை இயேசு தெளிவாக சுட்டிக்காட்டினார். (லூக். 10:27-37) நம் அயலார் ஆவிக்குரிய துன்பத்தில் இருக்கின்றனர். அவர்கள் நற்செய்தியைக் கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்களோடு அதை பகிர்ந்துகொள்ளும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம்; இவ்விதமாக இயேசு கிறிஸ்துவின் மெய்யான சீஷர்கள் என்பதை நிரூபிப்போம்.—மத். 24:14; கலா. 5:14.