கேள்விப் பெட்டி
◼ மாவட்ட மாநாட்டு பேட்ஜ் கார்டுகளை யார் யார் பெற்றுக்கொள்ளலாம்?
நம்முடைய சகோதரர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும் மாநாட்டை விளம்பரப்படுத்துவதற்கும் பேட்ஜ் கார்டுகள் அதிக உதவியாக இருக்கலாம். ஆனால், அவற்றை தாறுமாறாக விநியோகிக்கக் கூடாது. அதை அணிபவர் யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்த ஒரு சபையில் நல்ல நிலைநிற்கையில் இருப்பதை அடையாளம் காட்டுகிறது.
அந்த கார்டில் ஒருவருடைய பெயரையும் சபையின் பெயரையும் எழுதுவதற்கு இடம் இருக்கிறது. ஆகவே, அதில் எழுதப்பட்டுள்ள சபையில் அந்த நபர் ஓரளவு காலமாக கூட்டுறவு கொண்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சபைக்கும் இந்தக் கார்டுகளை சங்கம் அனுப்புகிறது. ஆகவே, முழுக்காட்டப்பட்ட மற்றும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஒவ்வொருவருக்கும் இதை கொடுப்பது நல்லது. அதோடு, கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராகிற பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், ஊழியத்தில் பங்குகொள்ளும் நோக்குடன் முன்னேறி வருபவர்களுக்கும் இதை கொடுக்கலாம். சபை நீக்கம் செய்யப்பட்ட நபருக்கு மாநாட்டு பேட்ஜ் கார்டை கொடுப்பது சரியல்ல.
இந்தக் கார்டுகள் அனுப்பி வைக்கப்படும்போது, மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளுக்கேற்ப இவை விநியோகிக்கப்படுவதை மூப்பர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.