கேள்விப் பெட்டி
◼ முழு பிராந்திய வரைபடத்தை ராஜ்ய மன்றத்தில் வைக்க வேண்டுமா?
ஆம், முழு பிராந்திய வரைபடத்தை பிரேம் செய்து ராஜ்ய மன்றத்தில் மாட்டிவைக்க வேண்டும். வரைபடத்தை அறிவிப்பு பலகையில் போடக் கூடாது. அந்த வரைபடத்தில் சபைக்கு நியமிக்கப்பட்ட முழு பிராந்திய எல்லைகள் இடம்பெற வேண்டும்; அதோடு ஒவ்வொரு தனிப்பட்ட பிராந்தியமும் அதற்கு நியமிக்கப்பட்ட எண்களும் இருக்க வேண்டும். ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகிற எல்லா சபைகளின் பிராந்திய எல்லைகளும் குறிப்பிடப்பட வேண்டும். இது, பிரஸ்தாபிகளும் புதியவர்களும் தாங்கள் எந்த சபையின் பிராந்தியத்தில் வசிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும். வரைபடத்தில் சபை புத்தகப் படிப்பு மையங்களை குறிப்பிட்டால், அனைவரும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட புத்தகப் படிப்பு இடத்தை தெரிந்துகொள்ள முடியும். வரைபடம் ‘அப்-டு-டேட்’டாக இருக்க வேண்டும்.
முடிந்தால், தனிப்பட்ட பிராந்திய நியமிப்பை வைத்திருப்பது நல்லது என்பதை எல்லா பிரஸ்தாபிகளுக்கும் வரைபடம் நினைப்பூட்டும். தங்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள பிராந்தியத்தை தெரிந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு வரைபடம் பிரயோஜனமாக இருக்கும். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் இது உதவியாக இருக்கலாம். நடத்துனர் ஒவ்வொரு தொகுதியிலுள்ள பிரஸ்தாபிகளையும் அவர்களுடைய ஏரியாவுக்கு உடனடியாக வழிநடத்துவதும் எளிது.
சபையானது அதற்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் ராஜ்ய செய்தியை முற்றுமுழுக்க பிரசங்கம் செய்ய எல்லாவற்றையும் ஒழுங்கமைத்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சியையும் இந்த வரைபடம் அளிக்கிறது.—லூக். 9:6.