உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/00 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • இதே தகவல்
  • செயலற்றவர்களை மறந்துவிடாதீர்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • “என்னிடம் திரும்பி வாருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • தாமதமின்றி உடனே திரும்ப உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 11/00 பக். 3

கேள்விப் பெட்டி

◼ நீண்ட காலம் செயலற்றிருப்பவர் மீண்டும் பிரஸ்தாபி ஆவதற்கு நாம் எவ்வாறு உதவலாம்?

யெகோவாவை சேவிக்க தனக்கு உள்ளூர ஆசை இருப்பதை செயலற்றிருப்பவர் வெளிப்படுத்தினால் அது சந்தோஷத்திற்குரிய விஷயம். (லூக். 15:4-6) தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள், ஊழியம் ஆகியவற்றிற்கு நேரத்தை ஒதுக்க முடியாதளவுக்கு எதிர்ப்போ, வாழ்க்கையின் அழுத்தங்களோ அவரை தடுத்திருக்கலாம். அப்படியானால், ஆவிக்குரிய ரீதியில் முன்னேற அவருக்கு எப்படி சிறந்த விதத்தில் நாம் உதவலாம்?

அவர்மீது நமக்கு உண்மையான கிறிஸ்தவ அன்பு இன்னும் இருப்பதை வெளிக்காட்ட நாம் அனைவரும் முன்வர வேண்டும். மூப்பர்களும், ஆவிக்குரிய ரீதியில் குறிப்பாக அவருக்கு என்ன தேவை என்பதை அறிந்து உடனடியாக செயல்படுவார்கள். (யாக். 5:14, 15) அவர் சிறிது காலமே செயலற்று இருந்திருந்தால் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி ஒருவர் உதவினாலே போதும், அவர் மீண்டும் வெளி ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார். ஒருவேளை அவர் நீண்ட காலம் செயலற்று இருந்திருந்தால் அதிகப்படியான உதவி அவருக்குத் தேவை. பொருத்தமான புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு நடத்துவது அவசியம்; இது விசுவாசத்தையும் போற்றுதலையும் அவரில் வளர்க்கும். இந்த சந்தர்ப்பத்தில் படிப்பு நடத்துவதற்கு தகுதி வாய்ந்த பிரஸ்தாபி ஒருவரை ஊழியக் கண்காணி ஏற்பாடு செய்வார். (எபி. 5:12-14; நவம்பர் 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் கேள்விப் பெட்டியைக் காண்க.) இப்படிப்பட்ட உதவி யாருக்கேனும் தேவை என்றால் அதை உங்கள் சபை ஊழியக் கண்காணியிடம் தெரிவியுங்கள்.

நீண்ட காலம் செயலற்றிருந்த நபரை மீண்டும் ஊழியத்தில் கலந்துகொள்ள அழைப்பதற்கு முன்பு, பிரஸ்தாபி ஆவதற்கு தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த இரண்டு மூப்பர்கள் அவரை சந்திப்பது நல்லது. புதியவர்கள் பிரஸ்தாபிகளாவதற்கு என்ன முறை பின்பற்றப்படுகிறதோ அதுவே இந்தச் சந்தர்ப்பத்திலும் பின்பற்றப்பட வேண்டும். (1989, ஆகஸ்ட் 1, காவற்கோபுரம், பக்கம் 20-ஐக் காண்க.) ஊழியத்தில் ஈடுபட, செயலற்றிருந்த நபருக்கும் உண்மையான ஆர்வம் தேவை. நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 98-9-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அவரிடம் இருக்க வேண்டும்; மேலும் அவர் சபை கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவராகவும் இருக்க வேண்டும்.

மனந்திருந்தி வருபவர் ஆவிக்குரிய வகையில் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இது யெகோவாவுடன் அருமையான உறவை பலப்படுத்திக் கொள்ளவும் காத்துக்கொள்ளவும் நித்திய ஜீவனுக்குரிய பாதையில் தொடர்ந்து நடக்கவும் அவருக்குப் பெரிதும் உதவும். (மத். 7:14; எபி. 10:23-25) கிறிஸ்தவ சீஷராக மீண்டும், ‘செயலற்றவராகவும், பயனற்றவராகவும்’ ஆகிவிடாமல் தன்னைக் காத்துக்கொள்ள அவர் ‘முழு ஆர்வத்தோடு முயற்சி செய்ய’ வேண்டும்; அதோடு பிரச்சினைகளை சகித்து நிலைத்திருக்க உதவும் கிறிஸ்தவ குணங்களையும் அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்.​—⁠2 பே. 1:5-8, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்