உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 1 பக். 12-13
  • கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • இதே தகவல்
  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்பித்தவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 1 பக். 12-13
பூமியின்மேல் சூரிய ஒளி படர்ந்திருக்கிறது

கடவுளுடைய அரசாங்கம்​—உண்மைகள்

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்ய சொல்லி இயேசு தன்னைப் பின்பற்றியவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அது என்ன செய்யப்போகிறது? அதற்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

இயேசுதான் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா.

லூக்கா 1:31-33: “அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது.”

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசு முக்கியமாகப் பிரசங்கித்தார்.

மத்தேயு 9:35: “இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.”

கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும் என்பதற்கான அடையாளத்தை இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்னார்.

மத்தேயு 24:7: “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்.”

இன்று இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் சொல்கிறார்கள்.

மத்தேயு 24:14: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”

கடவுளுடைய அரசாங்கம்—ஒரு பார்வை

இடம். கடவுள் தன்னுடைய அரசாங்கத்தைப் பரலோகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். இது நிஜமான ஓர் அரசாங்கம்.​—தானியேல் 2:44; மத்தேயு 4:17.

நோக்கம். கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றும். மனிதர்கள் அதில் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள்; வியாதியோ சாவோ அவர்களுக்கு வரவே வராது.​—சங்கீதம் 37:11, 29.

அரசர்கள். இயேசுவை ராஜாவாகவும், பூமியிலிருந்து 1,44,000 பேரை உடன் அரசர்களாகவும் கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்கள் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள்.​—லூக்கா 1:30-33; 12:32; வெளிப்படுத்துதல் 14:1, 3.

குடிமக்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் இந்தப் பூமியில் வாழ்வார்கள்; இயேசுவின் ஆட்சிக்கும் அந்த அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் மனதார கீழ்ப்படிவார்கள்.​—மத்தேயு 7:21.

நம்மை ஆட்சி செய்வதற்கான எல்லா தகுதியும் இயேசுவுக்கு இருக்கிறதா?

இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது தான் ஓர் அன்பான ஆட்சியாளர் என்பதையும் ஆட்சி செய்ய தனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்பதையும் நிரூபித்தார். அவர்...

  • ஏழைகளிடம் அக்கறை காட்டினார்.​—லூக்கா 14:13, 14.

  • ஊழலையும் அநியாயத்தையும் வெறுத்தார்.​—மத்தேயு 21:12, 13.

  • இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்தினார்.​—மாற்கு 4:39.

  • ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு கொடுத்தார்.​—மத்தேயு 14:19-21.

  • வியாதியால் அவதிப்பட்டவர்களைப் பார்த்து மனதுருகி, அவர்களைக் குணப்படுத்தினார்.​—மத்தேயு 8:16.

  • இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்பினார்.​—யோவான் 11:43, 44.

கடவுளுடைய அரசாங்கத்தால் இப்போது உங்களுக்கு என்ன நன்மை?

கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இப்போதே உங்களால் ஆக முடியும், அதனால் இன்றே சந்தோஷமாக வாழ முடியும். கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள்...

  • ‘எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுகிறார்கள்.’​—எபிரெயர் 12:14.

  • குடும்பத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிக்கிறார்கள்; ஏனென்றால், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் காட்டுகிறார்கள்.​—எபேசியர் 5:22, 23, 33.

  • “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருப்பதால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள்.​—மத்தேயு 5:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்