புதிய உலக சமுதாயம் செயலில்—ஓர் சரித்திர கண்ணோட்டம்
1954-ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பற்றிய வீடியோவை நீங்கள் பார்க்கையில், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை எண்ணிப்பாருங்கள்:
(1) இந்தப் படம் ஆரம்பத்தில் ஏன் தயாரிக்கப்பட்டது, எதை சாதித்தது? (2) என்னென்ன பிரசுரங்களை யெகோவாவின் சாட்சிகள் வெளியிடுகிறார்கள், யாருக்காக, ஏன்? (3) 1954-ம் ஆண்டு விநியோகித்ததுடன் ஒப்பிடுகையில், காவற்கோபுர பத்திரிகையின் இப்போதைய விநியோகம் எப்படியுள்ளது? (4) சமீப வருடங்களில் நமது அச்சடிப்பு வேலை எவ்வாறு இன்னும் நவீனமாக்கப்பட்டுள்ளது? (5) யாங்கி ஸ்டேடியத்தில் 1953-ல் நடைபெற்ற சர்வதேச மாநாடு சம்பந்தமாக எது உங்களை கவர்கிறது? (6) ட்ரெய்லர் சிட்டி என்று எதை அழைத்தனர், அதில் குறிப்பிடத்தக்க என்ன விஷயங்களை நீங்கள் கவனித்தீர்கள்? (7) நாம் செய்துவரும் வேலை ஒரு நாட்டின் வேலையோ ஒரு இனத்தின் வேலையோ ஒரு ஜனத்தின் வேலையோ அல்ல என்பதை எது காட்டுகிறது? (8) அன்பின் அடிப்படையிலேயே யெகோவாவின் அமைப்பு செயல்படுகிறது என்பதை நீங்கள் எப்படியெல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்? (சங். 133:1) (9) புதிய உலக சமுதாயம் 1950-களில் செய்துவந்த வேலைகளை சரித்திர கண்ணோட்டம் விடுகையில் யார் அதிகமாய் போற்றுதல் தெரிவிப்பர் என்று நினைக்கிறீர்கள்?