உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/02 பக். 1
  • உற்சாகமான வரவேற்பு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உற்சாகமான வரவேற்பு!
  • நம் ராஜ்ய ஊழியம்—2002
  • இதே தகவல்
  • ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வீடியோ
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2002
km 4/02 பக். 1

உற்சாகமான வரவேற்பு!

1 இளைஞர் கேட்கின்றனர்​—⁠நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற ஆங்கில வீடியோவுக்கு எங்குமுள்ள கிறிஸ்தவ குடும்பங்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அந்த வீடியோவைப் பார்த்த பின்பு தன் மகன்கள் அமைதியாக உட்கார்ந்திருந்ததாக​—⁠அதிலுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் சாதகமாக பிரதிபலித்ததாக​—⁠ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு தகப்பன் சொன்னார்! மலாவியைச் சேர்ந்த இளம் சகோதர சகோதரிகளும் அதே போன்ற அழுத்தங்களை சகமாணவர்களிடமிருந்து அனுபவிப்பதால் வீடியோவைப் புரிந்துகொண்டு பாராட்டிப் பேசினார்கள் என அங்கிருந்து வரும் அறிக்கை சொல்கிறது. “அதை என் ஜெபங்களுக்குக் கிடைத்த பதில் என நினைக்கிறேன்” என ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தகப்பன் சொன்னார். “என்மீது யெகோவாவுக்கு அக்கறை இருப்பதை எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி” என ஓர் இளம் பெண் சொன்னாள். “எங்கள் இளைஞர்களில் ஒருவர் மீண்டும் ஜீவ பாதைக்குத் திரும்ப அது வழிசெய்தது” என நியூஜீலாந்தை சேர்ந்த ஒரு மூப்பர் அறிக்கை செய்தார். வீடியோவைப் பார்த்த மணமான பெண் ஒருவர், “சத்தியத்திலுள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்த வீடியோவைப் பார்த்து, சத்தியத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்!” என்றார். குடும்பங்களே, ஏன் அந்த வீடியோவை மீண்டும் பார்க்கக்கூடாது? பிறகு, பின்வரும் கேள்விகளை சேர்ந்து கலந்தாலோசியுங்கள்.

2 முன்னுரை: உண்மையான நண்பன் யார்?​—⁠நீதி. 18:24.

3 நட்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளவை: ஒதுக்கப்பட்டதைப் போன்ற உணர்வை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்? (பிலி. 2:4) உங்கள் குணங்களை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக நீங்கள் ஏன் இருக்க வேண்டும், அதற்கு யார் உங்களுக்கு உதவ முடியும்? அநேக நண்பர்களைப் பெறுவதற்கு எது வாய்ப்புகளை ஏற்படுத்தும், அவர்களை எங்கே காணலாம்?​—⁠2 கொ. 6:13, NW.

4 கடவுளுடன் நட்புறவு: யெகோவாவுடன் நீங்கள் எப்படி உறவை வளர்த்துக் கொள்ளலாம், அதற்கு எடுக்கும் முயற்சி ஏன் பயனுள்ளது? (சங். 34:8) கடவுளுடனான உங்கள் நட்புறவை உண்மையில் யாரால் பலப்படுத்த முடியும்?

5 மோசமாக வழிநடத்தும் நண்பர்கள்: யார் கெட்ட நண்பர்கள்? (1 கொ. 15:33) மோசமான நண்பர்கள் எப்படி ஒருவரை ஆவிக்குரிய அழிவுக்கு வழிநடத்தலாம்? தீனாளைப் பற்றிய பைபிள் பதிவு என்ன பாடம் புகட்டுகிறது?​—⁠ஆதி. 34:1, 2, 7, 19.

6 நவீன நாளைய நாடகம்: தாராவை தனிமை எப்படி பாதித்தது? உலகப்பிரகாரமான இளைஞர்களுடன் கூட்டுறவு கொள்வதில் தவறேதுமில்லை என அவள் எப்படி நியாயப்படுத்தினாள்? அவர்களால் என்னென்ன ஆபத்துக்களை அவள் சந்திக்க நேர்ந்தது? அவள் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கியிருக்கிறாள் என்பதை அவளுடைய பெற்றோர் ஏன் புரிந்துகொள்ள தவறினார்கள், ஆனால் அவள் ஆவிக்குரிய விதமாக மீண்டும் பலப்பட என்ன மனநிலையுடன் அவர்கள் உதவினார்கள்? ஒரு பயனியர் சகோதரி எப்படி தாராவின் உண்மையான சிநேகிதியாக நிரூபித்தார்கள்? கிறிஸ்தவர்கள், நீதிமொழிகள் 13:20-லும் எரேமியா 17:9-லும் சொல்லப்பட்டவற்றிற்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்? என்ன முக்கிய பாடத்தை தாரா கற்றுக்கொண்டாள்?

7 முடிவுரை: இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்? மற்றவர்களுக்கு உதவ இதை நீங்கள் எப்படி உபயோகிக்கலாம்?​—⁠சங். 71:⁠17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்