எல்லா மொழியினரிலிருந்தும் ஆட்களை கூட்டிச் சேர்த்தல்
1 கடவுளுடைய வார்த்தை நிறைவேறி வருகிறது! ‘பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரிலிருந்து’ வருவோர் உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். (சக. 8:23) “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்புடன், யெகோவாவுக்கு முன் சுத்தமான நிலைநிற்கையைப் பெறுவதற்கு இந்தியாவிலுள்ள எல்லா ‘கோத்திரத்தாருக்கும் ஜனத்தாருக்கும் பாஷைக்காரருக்கும்’ யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவுகிறார்கள்?—வெளி. 7:9, 14.
2 கடவுளுடைய அமைப்பு அளிக்கும் ஆதரவு: தேசமெங்கும் உள்ளவர்கள் நற்செய்தியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக புரிந்துகொள்வதற்காக 24 இந்திய மொழிகளில் பைபிள் பிரசுரங்கள் கிடைப்பதற்கு ஆளும் குழு வழி செய்திருக்கிறது. இத்தனை அநேக மொழிகளில் பிரசுரங்களைத் தயாரித்து, வெளியிடுவது என்பது சுலபமான வேலை இல்லை. இது, தகுதியுள்ள மொழிபெயர்ப்பாளர்களின் குழுக்களை கூட்டிச் சேர்த்து, நம்முடைய பிரசுரங்களை இந்த எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்குத் தேவையான உதவி அளிப்பதையும், அவற்றை அச்சடித்து சபைகளுக்கு அனுப்பி வைப்பதையும் உட்படுத்துகிறது. எனினும் உயிர் காக்கும் பைபிளின் செய்தியைக் கொண்டு செல்லும் தனிப்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளே இதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்.
3 சவாலை சந்தித்தல்: பிற மொழி பேசும் கணிசமான எண்ணிக்கையினர் அநேக பெரிய நகரங்களில் வசிக்கின்றனர்; இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைவிட்டு வந்தவர்கள். இவர்களும் பயன் பெறும் விதத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு வசதியாக பிற மொழி பிரசுரங்களை நம் கைவசம் வைத்திருக்கிறோமா? கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் அவற்றை வைத்திருக்கின்றனர்; தங்கள் பிராந்தியத்தில் பொதுவாக பேசப்படும் பிற மொழிகளில் எளிய பிரசங்கத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ள முயலுகிறார்கள். இந்திய சைகை மொழி பேசுபவர்களிடமும் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யெகோவாவை பற்றியே கேள்விப்பட்டிராத அல்லது பைபிளைப் பற்றி எதுவும் அறியாத சிலர் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.—ரோ. 15:20.
4 பிற மொழி பேசுபவர்கள் காட்டும் ஆர்வத்தை நாம் எப்படி வளர்க்கலாம்? நம்முடைய நகரத்தில் அந்த மொழி பேசும் சபை இருந்தால் ஆர்வம் காட்டுபவரின் விலாசத்தை பிளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தில் பூர்த்தி செய்து அச்சபைக்கு அனுப்பி வைக்கலாம். அப்படியொரு சபை இல்லாவிட்டால் அந்த மொழியை அறிந்த சபை பிரஸ்தாபி ஒருவரிடம் அதை தெரிவிக்கலாம். அப்படிப்பட்டவரைப் போய் சந்திக்கும்படி நம்மிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால் பிரயாணப்பட்டு போய் அந்த நபரை சந்திக்க நாம் இன்னுமதிக முயற்சி எடுப்போமா? இப்படி செய்கையில் நம் பிராந்தியத்திலுள்ள எல்லா சமுதாயத்தினருக்கும் அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் மொழியில் நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்படும்.—கொலோ. 1:25.
5 எல்லா விதமான பின்னணியினருக்கும் மொழியினருக்கும் ராஜ்ய செய்தி விரும்பத்தக்கதாக உள்ளது. அவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ள கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாதிருப்போமாக.