“வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டிலிருந்து முழுமையாக பயனடைதல்
1 ஊக்கமளித்த நிகழ்ச்சி: சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் எவ்வளவு உயிர்ப்பூட்டும் நிகழ்ச்சியை நாம் அனுபவித்தோம்! பொதுவான ஒரு நோக்கத்திற்காக, அதாவது, கடவுளுடைய ராஜ்யத்தை வைராக்கியமாக அறிவிப்பதற்கு இன்னும் தகுதியுள்ளவர்களாகும்படி நாம் கூடி வந்தோம். “அறிவிப்பது” என்ற பதத்தை முதல் பேச்சாளர் எப்படி விளக்கினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “யெகோவா நம்மோடு இருப்பதை அறிந்திருப்பதால் பயப்படாதிருங்கள்” என்ற பேச்சில் நாம் என்ன ஆராய்ச்சி செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டோம் என்பது ஞாபகம் வருகிறதா? இது வரைக்கும் எத்தனை நிஜ வாழ்க்கை சரிதைகளை ஆராய்ந்திருக்கிறீர்கள்?
2 “பல்வேறு சோதனைகளால் நம் விசுவாசத்தின் தரம் பரீட்சிக்கப்படுதல்” என்ற தொடர் பேச்சில் யெகோவா துன்புறுத்துதலை அனுமதிப்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டன. அவை என்னவென்று உங்களால் விவரிக்க முடியுமா? நாம் எந்த வேதப்பூர்வ அடிப்படையில் கிறிஸ்தவ நடுநிலைமை வகிக்கிறோம்? நடுநிலை வகிப்பதால் வரும் பிரச்சினைகளை சமாளிக்கும்படி தயார் நிலையில் இருப்பதற்கு என்ன செய்யும்படி உற்சாகம் அளிக்கப்பட்டோம்? உண்மையுடன் சோதனைகளை சகிப்பது எப்படி யெகோவாவுக்கு துதி சேர்க்கிறது?
3 “துன்ப காலங்களில் உறுதியாக நிலைத்திருங்கள்” என்ற நாடகத்தில் குறிப்பாக எந்தக் காட்சிகள் உங்களை பலப்படுத்தின? நாம் எப்படி எரேமியாவைப் போல் இருக்கலாம்?
4 ‘இந்த உலகத்தின் காட்சி கடந்துபோகிறதே’ என்ற பொதுப் பேச்சு, கடவுளுடைய பயங்கரமான நாளுக்கு வழிநடத்தும் என்ன குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவிருப்பதாக விவரித்தது? “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போராக நற்கிரியைகளில் பெருகுங்கள்” என்ற கடைசி பேச்சைக் கேட்கையில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தை உங்கள் ஊழியத்தில் எப்படி பின்பற்றினீர்கள்?
5 பின்பற்றுவதற்கான முக்கிய குறிப்புகள்: “நன்றியுணர்வை காட்டுங்கள்” என்ற பேச்சில் விளக்கியபடி, யெகோவாவுக்கு நம் இருதயப்பூர்வமான நன்றியை எப்படி வெளிக்காட்டலாம்? “வைராக்கியத்தால் தூண்டப்பட்டு ராஜ்யத்தை அறிவிப்போர்” என்ற முக்கிய பேச்சில், யாருடைய வைராக்கியத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டோம்? என்ன சுயபரிசோதனை செய்யும்படி சொல்லப்பட்டோம்?
6 யெகோவாவின் தயவைப் பெற தேவையான என்ன மூன்று காரியங்களை “மீகா தீர்க்கதரிசனம் யெகோவாவின் பெயரில் நடக்க நம்மை பலப்படுத்துகிறது” என்ற தொடர் பேச்சு சிறப்பித்துக் காட்டியது? இந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா? (மீ. 6:8) “உங்கள் இருதயத்தைப் பாதுகாப்பதன்மூலம் ஒழுக்க தூய்மையைக் காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சின்படி, என்ன வழிகளில் நாம் ஒழுக்க தூய்மையை காத்துக் கொள்ள வேண்டும்? “ஏமாற்று வேலைக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சு எந்தெந்த அம்சங்களில் ஏமாற்றப்படுவதற்கும் மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் எதிராக நம்மை எச்சரித்தது?
7 “தங்கள் ஊழியத்தை மேன்மைப்படுத்தும் ராஜ்ய அறிவிப்பாளர்கள்” என்ற தொடர் பேச்சிலிருந்து கற்றுக்கொண்ட என்னென்ன பயனுள்ள குறிப்புகளை உங்கள் ஊழியத்தில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்? “ஆவிக்குரிய உரையாடல் கட்டியெழுப்புகிறது” என்ற பேச்சில் பிலிப்பியர் 4:8 ஆராயப்பட்டது. நம் உரையாடல்கள் ஆன்மீக விஷயங்களைச் சுற்றியே அமைவதற்கு அந்த வசனம் எப்படி உதவுகிறது, நாம் எப்போது அப்படி செய்ய வேண்டும்?
8 துயரமான சம்பவங்களையும், பணக் கஷ்டங்களையும், மோசமான உடல்நிலையையும், குடும்ப பிரச்சினைகளையும், மீண்டும் மீண்டும் தலைதூக்கும் பலவீனங்களையும் சமாளிப்பது எப்படி என்பது “துயர வேளையில் யெகோவாவை முழுமையாக நம்புங்கள்” என்ற பேச்சில் கலந்தாலோசிக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது யெகோவாவிடம் நம்பிக்கையை எப்படி காட்டலாம்?
9 புதிய ஆன்மீக பொக்கிஷங்கள்: ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புதிய புத்தகத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். அதன் நோக்கத்தை விளக்கிய அறிவிப்பு உங்களை என்ன செய்ய தூண்டியது? சீஷராக்கும் வேலையில் இரண்டாவது படிப்பு புத்தகமாக அது எப்படி உதவியாக இருக்கும்?
10 அடுத்ததாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற அருமையான புத்தகத்தைப் பெற்றோம். அதன் விசேஷித்த அம்சங்கள் சில யாவை? அதில் குறிப்பாக எந்தப் படங்கள் உங்களுக்குப் பிடித்தவை? அதை வாசித்ததால் யெகோவாவிடம் நீங்கள் இன்னுமதிகமாக நெருங்கி வந்திருக்கிறீர்களா? அதிலிருந்து வேறு யாரும் பயனடையலாம்?
11 இந்தக் கடினமான காலங்களை சமாளிக்க தேவையான ஆன்மீக உற்சாகத்தை “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாடு நமக்கு அளித்தது. இந்த முக்கியமான ஆன்மீக ஏற்பாட்டிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு, அங்கு சொல்லப்பட்டவற்றை நினைவில் வைப்பதற்கும், அங்கு பெற்றுக் கொண்டவற்றிற்கு போற்றுதல் காட்டுவதற்கும், கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்பதற்கும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக. (2 பே. 3:14) அவ்வாறு செய்வது உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போல் வைராக்கியமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருக்கவும் நம்மை பலப்படுத்தும். இவை அனைத்தும் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும்.—பிலி. 1:9-11.