கேள்விப் பெட்டி
◼ தொலைபேசி மூலம் சாட்சி கொடுக்கையில் நன்கொடைகளைப் பற்றி சொல்ல வேண்டுமா?
ஒரு நபரை நேரில் சந்தித்து சாட்சி கொடுக்கும்போது, யெகோவாவின் சாட்சிகள் செய்யும் உலகளாவிய வேலை பலர் மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது என்று விளக்குகிறோம்; பைபிள் அடிப்படையிலான அந்தக் கல்வி புகட்டும் வேலைக்காக நன்கொடைகளை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் விளக்குகிறோம். இருந்த போதிலும், தொலைபேசி வாயிலாக சாட்சி கொடுக்கும்போது நன்கொடைகளை பற்றியோ நன்கொடை ஏற்பாடுகளைப் பற்றியோ நாம் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால், நாம் தொலைபேசி மூலம் பணம் வசூலிக்க முயற்சிப்பதாக அவர்கள் தவறாக நினைத்துவிடலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் எந்த வகையிலும் வியாபார நோக்குடையது அல்ல.—2 கொ. 2:17, NW.
◼ தொலைபேசியில் சாட்சி கொடுக்கும்போது, மறுபடியும் யெகோவாவின் சாட்சிகள் தன்னுடன் தொடர்புகொள்ள வேண்டாம் என ஒருவர் கேட்டுக்கொள்கையில் என்ன செய்ய வேண்டும்?
அந்த நபரின் வேண்டுகோளை நாம் மதிக்க வேண்டும். அந்த நபரின் பெயரையும் அவர் எப்போது அக்கோரிக்கையை விடுத்தார் என்பதையும் தேதியுடன் பிராந்திய அட்டையின் உறையில் குறித்து வைக்க வேண்டும். இது எதிர்காலத்தில் மற்ற பிரஸ்தாபிகள் மறுபடியும் அவரை தொடர்புகொள்ளாதிருக்க உதவும். தங்களை மறுபடியும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று சொல்லியிருப்பவர்களின் பட்டியலை வருடத்திற்கு ஒருமுறை பரிசீலிக்க வேண்டும். பிறகு, அந்த நபர்களின் தற்போதைய மனநிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக, மறுபடியும் அவர்களை சந்திக்க சாதுரியமும் அனுபவமும் வாய்ந்த பிரஸ்தாபிகளை ஊழியக் கண்காணி நியமிக்கலாம்.—மே 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள கேள்விப் பெட்டியைக் காண்க.