புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
எச்சரிப்பு சமிக்கையை நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள். ஆனால் அதற்குத் தக்கவாறு செயல்படாவிட்டால்? நீங்கள் பேரழிவை சந்திக்க நேரிடலாம். யெகோவாவின் ஆவிக்குரிய வழிநடத்துதலுக்கு ஏற்ப செயல்படுவது இன்னும் அதிக முக்கியமானது. வருகிற ஊழிய ஆண்டிற்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியில் இது வலியுறுத்தப்படும். அதன் பொருள்: ‘நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனம் செலுத்துங்கள்’ என்பதே.—லூக். 8:18.
முதல் பேச்சில், கடவுளுடைய ஏவுதலால் எபிரெயருக்கு பவுல் எழுதிய கடிதத்தின் ஆரம்ப அதிகாரங்களிலுள்ள அறிவுரை இன்று நமக்கு எப்படி பொருந்துகிறது என்பதை முக்கியப் பேச்சாளர் எடுத்துரைப்பார். “தெய்வீக அறிவுரைக்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்” என்பதே முடிவான பேச்சின் தலைப்பு. யெகோவா, அவருடைய குமாரன், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் ஆகியோருக்கு நாம் எல்லாரும் உண்மையிலேயே செவிகொடுக்கிறோமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இந்தப் பேச்சு நமக்கு உதவும்.—மத். 24:45, NW.
நிகழ்ச்சியில் கலந்தாலோசிக்கப்படும் பல்வேறு பகுதிகள் முக்கியமாக குடும்பங்களுக்கு பயனளிக்கும். “கவனச்சிதறலின்றி கடவுளுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கும் குடும்பங்கள்” என்ற பேச்சு நம் ஆவிக்குரிய தன்மையை இந்த உலக காரியங்கள் நெருக்கிப் போடாமல் தடுக்க நமக்கு உதவும். அந்தப் பேச்சில், ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்காக மாற்றங்களைச் செய்திருப்பவர்களிடம் பேட்டிகள் நடத்தப்படும். “கடவுளுடைய வார்த்தையை கவனத்துடன் கேட்பது நம் இளைஞர்களை எப்படி பலப்படுத்துகிறது” என்ற பேச்சில் இளைஞர்களிடம் பேட்டிகள் நடத்தப்படும்; இவர்கள் பள்ளியில், தங்கள் சகாக்களிடத்தில், அல்லது ஊழியத்தில் சத்தியத்துக்காக நிலைநிற்கை எடுத்திருப்பவர்கள் ஆவர். “கடவுள் சொல்வதை கவனமாக கேட்டு கற்றுக்கொள்ளும் சிறுபிள்ளைகள்” என்ற பேச்சு சிறுவர்களின் கற்கும் திறமையை குறைவாக மதிப்பிடாதிருக்க நமக்கு உதவும். சிறுவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமும் நடத்தப்படும் பேட்டிகள் சிறுவயது முதலே பிள்ளைகளை யெகோவாவின் வழிகளில் பயிற்றுவிப்பதால் வரும் பயனைக் காண நமக்கு உதவும்.
சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்கினாலும்,’ யெகோவா தம் உண்மையுள்ள ஊழியர்களிடம் அவர்கள் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகிறார். (வெளி. 12:9; ஏசா. 30:21) அவருடைய ஆலோசனைக்கு கவனமாய் செவிசாய்ப்பதும் நம் வாழ்க்கையில் அதைக் கீழ்ப்படிதலுடன் பின்பற்றுவதும் நமக்கு ஞானத்தை தருகின்றன, சந்தோஷத்தை தருகின்றன, நம்மை நித்திய ஜீவனுக்கும் வழிநடத்துகின்றன.—நீதி. 8:32-35.