உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/04 பக். 1
  • உங்களுடைய உதவி தேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுடைய உதவி தேவை
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
  • இதே தகவல்
  • உதவி ஊழியர்கள் மதிப்புமிக்க சேவை செய்கிறார்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • சகோதரர்களே, கடவுளுடைய சக்திக்கென்று விதையுங்கள், தகுதி பெறுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • சகோதரர்களே, நீங்கள் தகுதிபெற முயற்சி செய்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • தகுதிபெற மற்றவர்களைப் பயிற்றுவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 12/04 பக். 1

உங்களுடைய உதவி தேவை

1 “எங்களுக்காக நீங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி. அது எங்களுக்கு ரொம்பவே பிரயோஜனமாயிருக்கிறது.” நம் மத்தியில் உள்ள கிறிஸ்தவ மூப்பர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் நாம் எந்தளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை இந்தக் குறிப்பு நன்கு உணர்த்துகிறது. கடவுளுடைய அமைப்பு தொடர்ந்து விரிவாகையில், உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 1,00,000 சபைகளில் சேவை செய்ய முதிர்ச்சியுள்ள ஆண்களின் உதவி தொடர்ந்து தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு முழுக்காட்டப்பட்ட சகோதரராக இருந்தால், உங்களுடைய உதவி தேவை.

2 “நாடித்தேடுதல்”: நீங்கள் எவ்வாறு கூடுதலான ஊழிய சிலாக்கியங்களை நாடித்தேடலாம்? (1 தீ. 3:1, NW) வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பதன் மூலமாகவே. (1 தீ. 4:12; தீத். 2:6-8; 1 பே. 5:3) ஊழியத்தில் முழுமையாக பங்கெடுங்கள், மற்றவர்களும் பங்கெடுக்க உதவுங்கள். (2 தீ. 4:5) உடன் விசுவாசிகளின் நலனில் உண்மையான அக்கறை காட்டுங்கள். (ரோ. 12:13) கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக படித்து, ‘உபதேசிப்பதில் . . . வல்லவராகுங்கள்.’ (தீத். 1:9; 1 தீ. 4:13) மூப்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கும் பொறுப்புகளை கவனத்தோடு நிறைவேற்றுங்கள். (1 தீ. 3:10) நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், ‘உங்கள் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்துங்கள்.’​—⁠1 தீ. 3:4, 5, 12.

3 நியமிக்கப்பட்ட ஊழியராக சேவை செய்ய கடின உழைப்பும், சுய தியாக மனப்பான்மையும் அவசியம். (1 தீ. 5:17) ஆகவே, ஊழிய சிலாக்கியங்களை நாடுகையில் மனத்தாழ்மையுடன் மற்றவர்களுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருங்கள். (மத். 20:25-28; யோவா. 13:3-5, 12-17) தீமோத்தேயுவின் மனநிலையைக் குறித்து தியானித்து, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். (பிலி. 2:20-22) தீமோத்தேயுவைப் போலவே, உங்கள் நன்னடத்தை உங்களைச் சிபாரிசு செய்யட்டும். (அப். 16:1, 2) கூடுதல் பொறுப்புகளைக் கையாளுவதற்குத் தேவையான ஆவிக்குரிய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், உங்களுடைய வளர்ச்சிக்காக மற்றவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைப் பொருத்துங்கள், அப்போது, ‘நீங்கள் தேறுகிறது யாவருக்கும் விளங்கும்.’​—⁠1 தீ. 4:15.

4 பெற்றோரே, உதவி செய்ய பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள்: உதவி செய்ய சிறுவயதிலிருந்தே பிள்ளைகளால் கற்றுக்கொள்ள முடியும். எனவே, கூட்டங்களில் கவனிக்கவும் பிரசங்கிக்கவும் அவர்களைப் பயிற்றுவியுங்கள், அதோடு ராஜ்ய மன்றத்திலும், பள்ளியிலும் தங்கள் நடத்தையில் முன்மாதிரிகளாக இருக்கவும் அவர்களைப் பயிற்றுவியுங்கள். ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வது, வயதானோருக்கு உதவுவது போன்றவற்றை செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுவதில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கொடுப்பதால் வரும் மகிழ்ச்சியை அவர்களும் ருசித்துப் பார்க்கட்டும். (அப். 20:35) அத்தகைய பயிற்சி, பிற்காலத்தில் பயனியர்களாகவும், உதவி ஊழியர்களாகவும், மூப்பர்களாகவும் சேவை செய்ய அவர்களுக்கு உதவலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்