இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது வீடியோவிலிருந்து நன்மை பெறுவீர்
இரத்தமின்றி சிகிச்சை அளிப்பதில் என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன என உங்களுக்கு நன்கு தெரியுமா? ஏற்றிக்கொள்ளத்தக்க சில மாற்று வகை மருந்துகளைப் பற்றியும் அவை செயல்படும் விதத்தைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த வீடியோவை பாருங்கள், பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி எந்தளவுக்கு அறிந்திருக்கிறீர்கள் என உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். குறிப்பு: வீடியோவில் அறுவை சிகிச்சை செய்யும் சில காட்சிகள் வருவதால் குழந்தைகளுடன் இந்த வீடியோவைப் பார்க்கும் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
(1) என்ன முக்கிய காரணத்திற்காக யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்றுதலை மறுக்கிறார்கள், அதற்கான நியமம் பைபிளில் எங்கே காணப்படுகிறது? (2) மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக நாம் எதை விரும்புகிறோம்? (3) என்ன அடிப்படை உரிமை நோயாளிக்கு இருக்கிறது? (4) இரத்தமேற்ற மறுப்பது ஏன் நியாயமான, பொறுப்பான செயல்? (5) அதிக இரத்தப் போக்கு ஏற்படுகையில் மருத்துவர்களுக்கு என்ன இரண்டு அவசர முன்னுரிமைகள் உள்ளன? (6) என்ன உடல்நல அபாயங்கள் இரத்தமேற்றுதலுடன் சம்பந்தப்பட்டுள்ளன? (7) அறுவை சிகிச்சையின் போது இரத்தப் போக்கை குறைப்பதற்கு அறுவை மருத்துவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள்? (8) ஏற்றிக்கொள்ளத்தக்க எந்தவொரு மாற்று மருந்து சம்பந்தமாகவும் எது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? (9) இரத்தமேற்றாமல் கஷ்டமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்ய முடியுமா? (10) அநேக மருத்துவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதை செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள், இறுதியில் எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கையில் எது பொதுவான தராதரமாக ஆகலாம்?
வீடியோவில் காட்டப்படும் எந்தவொரு சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மனசாட்சியின் அடிப்படையில் கவனமாக எடுக்கப்படும், தனிப்பட்டவருடைய தீர்மானமாகும்.—ஜூன் 15, 2004, காவற்கோபுரம், பக். 22-4, 29-31, அக்டோபர் 15, 2000, காவற்கோபுரம், பக் 30-1 ஆகியவற்றைக் காண்க.