மிகச் சிறந்த சிகிச்சை—அது என்ன?
“இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுகையில், நோயாளி மிகச் சிறந்த சிகிச்சையைப் பெறுகிறார்” என்று மருத்துவ இயக்குநரும் மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் மைக்கல் ரோஸ் தெரிவித்தார். “இரத்தமில்லா சிகிச்சை”யில் எப்படிப்பட்ட மருத்துவமுறைகளும் இரத்தமேற்றுதலுக்குப் பதிலான மாற்று சிகிச்சைகளும் உட்பட்டுள்ளன? மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை சம்பந்தமாக நன்கு விஷயம் தெரிந்து தீர்மானமெடுக்க இவற்றை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இரத்தமில்லா சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவை பாருங்கள். அதற்குப்பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.—குறிப்பு: வீடியோவில் அறுவை சிகிச்சை சம்பந்தமான சில காட்சிகள் வருவதால் குழந்தைகளுடன் இந்த வீடியோவைப் பார்க்கும் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
(1) யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்ற மறுப்பதற்கு முக்கிய காரணம் என்ன? (2) யெகோவாவின் சாட்சிகள் எத்தகைய சிகிச்சையைப் பெற விரும்புகிறார்கள்? (3) என்ன அடிப்படை உரிமை நோயாளிக்கு இருக்கிறது? (4) இரத்தமேற்றுதலுக்குப் பதிலாக மாற்று சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது ஏன் நியாயமான, பொறுப்பான செயலாக இருக்கிறது? (5) அதிக இரத்தப் போக்கு ஏற்படுகையில் மருத்துவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் யாவை? (6) இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகளில் உட்பட்டுள்ள நான்கு நியதிகள் யாவை? (7) டாக்டர்கள் எவ்வாறு (அ) இரத்தப் போக்கை குறைக்கலாம், (ஆ) இரத்தச் சிவப்பணுக்களைப் பாதுகாக்கலாம், (இ) இரத்த உற்பத்தியைத் தூண்டலாம், (ஈ) இழந்த இரத்தத்தை மீண்டும் பெறலாம்? (8) (அ) இரத்தச்செறிவைக் குறைத்தல், (Hemodilution) மற்றும் (ஆ) இரத்த சுத்திகரிப்பு முறை (cell salvage) போன்ற சிகிச்சை முறைகளை விளக்குக. (9) இரத்தமேற்றுதலுக்குப் பதிலான மாற்று சிகிச்சைகளைப் பற்றி எது உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? (10) இரத்தமேற்றாமல் கஷ்டமான, சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியுமா? (11) மருத்துவத் துறையில் எப்படிப்பட்ட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது?
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை ஒவ்வொருவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இரத்தமேற்றுதலுக்குப் பதிலான மாற்று சிகிச்சை முறைகளில் எதை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதைத் தீர்மானித்துவிட்டீர்களா? சாட்சிகளாக இல்லாத குடும்ப அங்கத்தினரிடம்கூட உங்கள் தீர்மானங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் தெள்ளத் தெளிவாக தெரிவிப்பது அவசியம்.—காவற்கோபுரம், 2004, ஜூன் 15-லும் 2000, அக்டோபர் 15-லும் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.