‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவைப் பின்பற்றுங்கள்
1 நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார். மனிதகுலத்திற்கு அவர் என்னென்ன அருமையான ஆசீர்வாதங்களைப் பொழியப் போகிறாரென்று பைபிள் சொல்கிறதோ, அவற்றையெல்லாம் காண ஆவலாகக் காத்திருக்கிறோம். (ஏசா. 65:21-25) ‘நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தை’ ஜனங்களுக்கு அறிவிப்பதில் நாம் சந்தோஷம் காண்கிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். (1 தீ. 1:11) ராஜ்ய செய்தியை நாம் பேசும் விதம் சத்தியத்திடம் நமக்குள்ள ஆழ்ந்த பற்றையும், நாம் பேசும் ஆட்களிடம் நமக்குள்ள உள்ளான அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும்.—ரோ. 1:14-16.
2 எல்லா சமயத்திலும் நாம் சந்தோஷமாய் இருப்போமென சொல்ல முடியாது என்பது உண்மைதான். சில ஏரியாக்களில் வெகு சிலரே ராஜ்ய செய்திக்குச் செவிசாய்ப்பதை நாம் பார்க்கிறோம். இன்னும் சில சமயங்களில் நாமே கஷ்டமான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கலாம். அந்தச் சூழ்நிலைகளிலும் நம் சந்தோஷம் குறைந்துபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கு, நம் ஏரியாவிலுள்ள ஜனங்கள் நாம் பிரசங்கிக்கும் ராஜ்ய நற்செய்தியைக் கேட்பதும், அதற்கேற்ப செயல்படுவதும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை சற்று யோசித்துப் பார்ப்பது நமக்கு உதவும். (ரோ. 10:13, 14, 17) இப்படித் தியானிப்பது, இரட்சிக்கப்படுவதற்கு யெகோவா இரக்கத்துடன் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி சந்தோஷத்துடன் சொல்ல நமக்கு எப்போதும் உதவும்.
3 வரவிருக்கும் நல்ல நிலைமை பற்றியே பேசுங்கள்: நாம் என்ன சொல்கிறோம் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய பிரச்சினையைப் பற்றியோ செய்தி அறிக்கையைப் பற்றியோ நாம் பேச ஆரம்பித்தாலும் அவர்கள் நொந்துபோகுமளவுக்கு அதைப் பற்றியே அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ‘நற்காரியங்களை [அதாவது, வரவிருக்கும் நல்ல நிலைமைகளை] சுவிசேஷமாய் அறிவிப்பதுதான்’ நம் வேலை. (ஏசா. 52:7; ரோ. 10:15) இந்த நற்செய்தி, பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியின் அடிப்படையில் அமைந்த செய்தியாகும். (2 பே. 3:13) இதை மனதில் வைத்து நாம் வேதவசனங்களைப் பயன்படுத்தி, ‘இருதயம் நொறுங்குண்டவர்களின் காயத்தைக் கட்ட’ வேண்டும். (ஏசா. 61:1, 2) இது நாம் ஒவ்வொருவரும் எப்போதுமே சந்தோஷமான மனநிலையுடன் இருப்பதற்கும், வரவிருக்கிற நல்ல நிலைமை பற்றியே பேசுவதற்கும் உதவும்.
4 பிரசங்க வேலையில் ஈடுபடும்போது நாம் சந்தோஷமாய் இருப்பதை ஜனங்கள் நிச்சயம் கவனிப்பார்கள். எனவே, நம் ஏரியாவிலுள்ள ஜனங்களுக்கு ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது, ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவின் மனநிலையையே நாம் எப்போதும் வெளிக்காட்டுவோமாக.