செப்டம்பரில் விசேஷ விழித்தெழு! இதழை அளித்தல்
1 பறவைகளின் கானங்களைக் கேட்டும், சூரிய அஸ்தமனத்தைக் கண்டும் மகிழாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இருப்பினும், இவை பரலோகத்திலுள்ள நம் அன்பான தந்தையின் கைவண்ணம் என்ற உண்மையை அநேகர் ஏற்க மறுக்கிறார்கள். இந்த விசேஷ விழித்தெழு! இதழை விநியோகிப்பதன் மூலம் யெகோவாவே படைப்பாளர் என்பதை நிரூபிக்க நமக்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (ஏசா. 40:28; 43:10) செப்டம்பர் மாத இதழின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை “படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா?” என்ற பொருளே முழுக்க முழுக்க சிந்திக்கப்படுகிறது.
2 பிராந்தியத்தில்: முடிந்தால், சனிக்கிழமை தோறும் சபையாருடன் சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள். இந்த விசேஷப் பத்திரிகையை வாரத்தின் மற்ற சமயங்களிலும் விநியோகியுங்கள். ஆசிரியர்களும், கல்வித் துறையில் பணியாற்றும் மற்றவர்களும் நிச்சயம் இந்த இதழில் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, உங்கள் பிராந்தியத்திலிருக்கும் இத்தகையவர்களைப் போய் சந்திக்க விசேஷ ஏற்பாடுகளைச் செய்யலாம்.
3 யாரேனும் ஆர்வம் காட்டினால், ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அடுத்த முறை வந்து அதற்குப் பதில் அளிப்பதாகச் சொல்லுங்கள். உதாரணத்திற்கு, அன்பான படைப்பாளர் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். பிறகு, மறுசந்திப்பின்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் முதல் அதிகாரத்தையோ 11-ம் அதிகாரத்தையோ காட்டலாம். அல்லது படைப்பாளர் பூமியை எந்த நோக்கத்துடன் படைத்தார் என்ற கேள்வியைக் கேட்கலாம்; பின்னர், மறுசந்திப்பு செய்கையில் 3-ம் அதிகாரத்தைச் சிந்திக்கலாம்.
4 பள்ளியில்: நீங்கள் பள்ளிக்குச் செல்பவரா? அப்படியென்றால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இந்த விசேஷ விழித்தெழு! இதழை ஏன் பரிசாகக் கொடுக்கக் கூடாது? ஒரு பிரதியை உங்கள் மேசைமீது வைக்கும்போது, அதைப் பார்க்கும் ஒருவர் நம் நம்பிக்கைகளைக் குறித்து கேள்விகளைக் கேட்கலாம். அதிலுள்ள தகவலைப் பயன்படுத்தி, உங்கள் நம்பிக்கையை ஆதரித்து வகுப்பில் பேசுவதற்கும், அது பற்றி கட்டுரை எழுதுவதற்கும் ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். உங்களுக்கு உதவியாக இந்த இதழில், “இளைஞர் கேட்கின்றனர்” பகுதியில், “படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?” என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
5 தாம் படைத்தவற்றிற்கான கனத்தையும் மகிமையையும் பெற யெகோவா தகுதியுள்ளவராய் இருக்கிறார். (வெளி. 4:11) செப்டம்பர் மாத விழித்தெழு! இதழை உற்சாகத்துடன் விநியோகிப்பதன் மூலம் நாம் படைப்பாளரைக் கனப்படுத்துவோம், மற்றவர்களும் அவரைக் கனப்படுத்த உதவுவோம்.