நவம்பர் மாதத்தில் விழித்தெழு! சிறப்பிதழை அளிப்போம்!
1 பைபிளைக் குறித்து அநேகருக்கு நியாயமான கேள்விகள் எழுகின்றன. ‘பைபிளை மனிதர்தானே எழுதினார்கள், அப்படியென்றால் அதைக் கடவுளுடைய வார்த்தை என்று எப்படிச் சொல்ல முடியும்?, பைபிள் சொல்கிறபடி நடந்தால் நன்மை கிடைக்குமென நம்புவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?, பைபிளை வாசிப்பதற்கும் ஆராய்வதற்கும் நேரம் செலவிட்டால் என்ன பலன் கிடைக்கும்?, எந்த மொழிபெயர்ப்பு பைபிளை நான் படிக்க வேண்டும்?’ இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை நவம்பர் மாத விழித்தெழு! சிறப்பிதழில் காணலாம். இதன் தலைப்பு, “பைபிள் நம்பத்தக்க புத்தகமா?” இது, ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. நீங்கள் மற்ற மொழிகளிலுள்ள விழித்தெழு! பத்திரிகையைக் கொடுப்பதாக இருந்தால், அக்டோபர்-டிசம்பர் இதழில், “நல்ல பெற்றோராய் இருக்க ஏழு வழிகள்” என்ற தலைப்புக் கட்டுரையை முக்கியப்படுத்திக் காட்டலாம்.
2 இந்த விழித்தெழு! சிறப்பிதழை அல்லது அக்டோபர்-டிசம்பர் இதழை நம் பிராந்தியமெங்கும் பரவலாக அளிக்கப்போகிறோம். முடிந்தால், நவம்பர் மாதத்தில் உள்ள ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சபையோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ளுங்கள். இந்த விழித்தெழு! சிறப்பிதழை உங்கள் உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்தாருக்கும், சக பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும், மறுசந்திப்பு வீட்டாருக்கும் காட்டுங்கள். ஷாப்பிங் செல்லும்போதும் எங்காவது பயணிக்கும்போதும் இவற்றை உங்கள் கைவசம் வைத்திருங்கள். இந்த இதழ்கள் சபையில் போதியளவு இருப்பதற்காக மூப்பர்கள் கூடுதலான பிரதிகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
3 பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்: இந்தப் பத்திரிகையை அளிப்பவர்களிடம் உங்கள் பேச்சை முடித்துக்கொள்வதற்குமுன், பைபிள் படிப்பிற்கு அடித்தளம் போடுங்கள். உதாரணமாக, நவம்பர் மாத சிறப்பிதழை அளிக்கும்போது, நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “அடுத்த முறை நான் வரும்போது, ‘பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?’ என்ற கேள்விக்கு பைபிள் என்ன பதில் சொல்கிறதென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.” பிறகு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை எடுத்துச்சென்று, பக்கங்கள் 4-5-ஐ அவரிடம் காட்டுங்கள், அல்லது 3-வது அதிகாரத்தில் 1-3 பாராக்களைக் கலந்தாலோசியுங்கள். அல்லது, வீட்டுக்காரரிடம் நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “பைபிளைப் புரிந்துகொள்வது தங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதென்று அநேகர் சொல்கிறார்கள். நீங்கள் பைபிளை இன்னும் நன்றாக எப்படிப் புரிந்துகொள்ளலாமென நான் அடுத்த முறை வரும்போது காட்டுகிறேன்.” மறுசந்திப்பில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் காண்பித்து, பைபிள் படிப்பு நடத்தப்படும் விதத்தைச் செய்துகாட்டுங்கள். நீங்கள் அக்டோபர்-டிசம்பர் இதழை அளிக்கிறீர்கள் என்றால், இப்படிச் சொல்லலாம்: “குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவுமென்று அடுத்த முறை சொல்கிறேன்.” மறுசந்திப்பில், 14-வது அதிகாரத்தை அவரிடம் காட்டி, முதல் இரண்டு பாராக்களைக் கலந்தாலோசியுங்கள்.
4 பைபிளில் மட்டும்தான், நம்மை ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவராக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்கள்’ உள்ளன. (2 தீ. 3:15) ஆகவே, நாம் அனைவரும் இந்த விழித்தெழு! இதழ்களை அளிப்பதில் மும்முரமாகப் பங்குகொண்டு, பைபிளில் நம்பிக்கையை வளர்க்க மக்களுக்கு உதவ வேண்டும்!