கேள்விப் பெட்டி
◼ நாம் வினியோகிக்கிற பிரசுரங்களில் நம்முடைய ஈ-மெயில் விலாசத்தை இணைத்து கொடுப்பது சரியா?
சில பிரஸ்தாபிகள் மற்றவர்களுக்குப் பத்திரிகைகளையோ துண்டுப்பிரதிகளையோ கொடுக்கும்போது அவற்றில் தங்களுடைய ஈ-மெயில் விலாசத்தை ரப்பர் ஸ்டாம்ப்பால் முத்திரை பதிக்கிறார்கள் அல்லது ஸ்டிக்கராக ஒட்டுகிறார்கள். இது, பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் கூடுதல் தகவல் பெற விரும்பினால் பிரஸ்தாபிகளைத் தொடர்புகொள்ள வழிசெய்கிறது. ஆர்வம் காட்டுவோருக்கு உதவும் நல்லெண்ணத்தோடு இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனினும், பத்திரிகைகளிலும் துண்டுப்பிரதிகளிலும் நம்முடைய அதிகாரப்பூர்வ வெப்சைட் விலாசம் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, நம்முடைய சொந்த ஈ-மெயில் விலாசத்தை பிரசுரங்களில் இணைக்காதிருப்பது மிகவும் சிறந்தது.
முக்கியமாய் மறுசந்திப்பு செய்கையில், தன்னை தொடர்புகொள்வதற்கான தகவலை பிரஸ்தாபி ஒரு துண்டுச் சீட்டில் தனியாகக் கொடுக்கிறார் என்றால் அது அவருடைய சொந்த விஷயம். ஆர்வம் காட்டுவோர் கூடுதல் தகவலைப் பெற நம்மை அணுகட்டுமென காத்திராமல் நாம் போய் அவர்களைச் சந்திப்பதற்கு முதலாவது முயற்சி எடுக்க வேண்டும். நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போதுதான் அவர்கள்மீது நமக்கு உண்மையிலேயே அக்கறை இருப்பதைத் தெளிவாகக் காட்ட முடியும்.