2008-ஆம் ஆண்டிற்கான யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 வரும்படியும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படியும் அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். அதுவும், நாள் நெருங்கிவருவதை “எவ்வளவாய்ப்” பார்க்கிறார்களோ அந்த அளவுக்கு இவற்றை அதிகமாகச் செய்யும்படி கூறினார். (எபி. 10:24, 25) பவுல் குறிப்பிட்ட அந்த ‘நாள்’ மிகவும் நெருங்கிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் அத்தாட்சிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. எனவே, ஆபத்தாகிக்கொண்டே போகும் இந்த “கடைசி நாட்களில்” நம்மை வழிநடத்துவதற்குத் தேவையான ஆன்மீக போதனையைப் பெற நம்முடைய சகோதர சகோதரிகளுடன் கூடிவருவதற்கான வாய்ப்புகளை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். (2 தீ 3:1) இதற்கான வாய்ப்பு, வரவிருக்கும் 2008-ஆம் ஆண்டு மாவட்ட மாநாட்டில் கிடைக்கும்.
2 மூன்று நாட்களும் கலந்துகொள்ளுங்கள்: மூன்று நாட்களும் கலந்துகொள்ளும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம். “சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல்” இருந்தால், மாநாட்டில் கொடுக்கப்படவிருக்கும் மிக முக்கியமான ஆன்மீக உணவை நாம் இழக்காதிருப்போம். (எபி. 10:25) அதில் கலந்துகொள்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை முடிந்தவரை சீக்கிரமாகத் துவங்குங்கள். முன்கூட்டியே உங்கள் முதலாளியிடம் தெரிவித்துவிட்டால், தேவையான ஏற்பாடுகளை அவர் செய்துகொள்வார். மாநாடு நடக்கும் சமயத்தில், உங்கள் பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லையெனில், உங்களுடைய திட்டத்தைக் குறித்து அவர்களுடைய ஆசிரியர்களிடம் சொல்லுங்கள். மாநாட்டில் கலந்துகொள்வது உங்களுடைய வழிபாட்டின் வழக்கமான ஓர் அம்சம் என அவர்களிடம் தெரிவியுங்கள். ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—மத். 6:33.
3 மற்றவர்களும் கலந்துகொள்ள உதவுங்கள்: ‘ஒருவரையொருவர் கவனிக்கும்படியும்’ பவுல் தன் சகோதரர்களிடம் கூறினார். (எபி. 10:24) மாநாட்டில் கலந்துகொள்ள உங்களுடைய புத்தகப் படிப்பில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவி தேவையா? உங்களிடம் பைபிள் படிப்பவர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உதவ முடியுமா? அவர்களால் ஒரு நாள் மட்டும்தான் வர முடியும் என்றாலும் பரவாயில்லை. நீங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதைப்பற்றி சத்தியத்தில் இல்லாத உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்லும்போது, அவர்களையும் உங்களுடன் வரும்படி அழையுங்கள். நீங்கள் அன்புடன் எடுக்கும் முயற்சிகள் எதிர்பாராத பலன்களைத் தரலாம்.
4 தகவல் பெறுதல்: மாநாடுகள் எங்கு, எப்போது நடைபெறுகின்றன என்று விசாரிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் அநேகர் கிளை அலுவலகத்தை தொலைபேசிமூலம் தொடர்புகொள்கிறார்கள். இவை பெரும்பாலும், இந்தத் தகவலை ஏற்கெனவே பெற்ற சகோதர சகோதரிகளிடமிருந்துதான் வருகின்றன. கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்வதற்கு முன், நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
5 உங்களுடைய சபை கலந்துகொள்ள வேண்டிய மாநாட்டுக்குச் செல்லாமல், வேறொரு மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால், அறைவசதி சம்பந்தப்பட்ட தகவலை மாநாட்டு அலுவலகங்களின் விலாசத்திற்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம். அந்தத் தகவல் இனிவரவிருக்கும் நம் ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்கப்படும். பதிலைப் பெறுவதற்கு, அஞ்சல்தலை ஒட்டி, சுய விலாசம் எழுதிய ஓர் அஞ்சல் உறையை உங்கள் கடிதத்தோடு சேர்த்து அனுப்புங்கள்.
6 விசேஷ தேவைகள்: தங்குவது சம்பந்தமாக ஒரு பிரஸ்தாபிக்கு உதவி தேவைப்பட்டால், சபையின் ஊழியக் குழு ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தை சமர்ப்பிக்க அவர் தகுதி உள்ளவரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சபை செயலர் அந்தப் படிவத்தை மாநாட்டு அறைவசதி இலாகாவுக்கு அனுப்பி வைக்கும் முன், அந்தப் படிவத்திலும் பிப்ரவரி 14, 2008 தேதியிட்டு, அனைத்து மூப்பர் குழுக்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
7 அறை முன்பதிவு: பரித்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மாநாடு நடப்பதற்கு வெகு முன்னதாகவே உங்களுடைய சபையின் தகவல் பலகையில் போடப்படும். ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்வதற்கு முன்பாக “அறைவசதிகளுக்கான குறிப்புகள்,” “ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கான படிகள்” ஆகிய பகுதிகளைப் படியுங்கள். பட்டியலில் உள்ள ஹோட்டல்களுக்கு அதிகப் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வது அல்லது பட்டியலில் இல்லாத ஹோட்டல்களைத் தொடர்பு கொள்வது ஆகியவற்றைச் செய்யாமல், ஹோட்டல்கள் சம்பந்தமான புதிய பட்டியல் சபைக்கு வரும்வரை காத்திருங்கள்.
8 நற்காரியங்கள்: ஒன்றுகூடிவந்து வழிபடும்படி யெகோவா கொடுத்திருக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது நமக்கு ‘பிரயோஜனமாயிருக்கிறது.’ மிக முக்கியமாக, யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. (ஏசா. 48:17) மாவட்ட மாநாடுகளின்போது, அநேகருக்கு நம்முடைய ‘நற்கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன.’ அவர்களில் சிலர் நம்மைப்பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்கள். (1 தீ. 5:25) பல ஆண்டுகளாக நம்முடைய மாநாடுகள் நடத்தப்பட்ட ஒரு நகரத்தில், அரங்கத்தின் மேலாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்துகொண்டார்கள். அரங்கத்தையும் வளாகத்தையும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தார்கள்.” இன்னொரு நகரத்தில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் நல்ல நடத்தையைக் கவனித்த மற்றொரு அரங்கத்தின் நிர்வாகம் மாநாட்டுக் கூடத்தின் வாடகையில் 25% தள்ளுபடி அளித்தது. மேலாளர் ஒருவர் தங்களுடைய ஹோட்டலில் தங்கியிருந்த மற்ற தொகுதியினராலும் கலைநிகழ்ச்சி நடத்துபவர்களாலும் பட்ட கஷ்டங்களை எடுத்துச் சொன்னார். ஹோட்டலில் தங்கியிருந்தபோது நம் சகோதரர்கள் ஒத்துழைத்ததையும் பொறுமையாக இருந்ததையும் பாராட்டினார். “இங்கு தங்கும் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளைப்போல் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று அவர் சொன்னார். இதுபோன்று பலரும் பாராட்டும் அளவுக்கு நடந்துகொண்ட நம் சகோதரர்களை நினைத்து நம் கடவுளாகிய யெகோவா நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்!
9 நம்முடைய வாழ்க்கை ‘தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும்’ கவனித்துக் கேட்பதைச் சார்ந்திருக்கிறதென இயேசு கூறினார். (மத். 4:4) வருடந்தோறும் நடைபெறும் நம்முடைய மாநாடுகளில், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை மூலமாக’ யெகோவா ஆன்மீக ‘போஜனத்தை ஏற்றவேளையில்’ அளிக்கிறார். (மத். 24:45. NW) இந்த ஆன்மீக விருந்தை தயாரிக்கவும் அளிக்கவும் சகோதரர்கள் கடினமாக உழைக்கிறார்கள். மாநாட்டில் கலந்துகொண்டு, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிப்பதன்மூலம், யெகோவா காட்டும் அன்பான அக்கறைக்கு நம்முடைய நன்றியைக் காட்டுவோமாக.
[கேள்விகள்]
1. (அ) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த அறிவுரையைப் பின்பற்றுவது ஏன் இன்று மிக அவசியமாக இருக்கிறது? (எபிரெயர் 10:24, 25-ஐ வாசிக்கவும்.) (ஆ) பவுலின் அறிவுரையைப் பின்பற்ற நமக்கு எது வாய்ப்பளிக்கப் போகிறது?
2. (அ) மாநாட்டில் மூன்று நாட்களுமே கலந்துகொள்வது ஏன் அவசியம்? (ஆ) கலந்துகொள்வதற்கு நீங்கள் என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்க வேண்டும்?
3. நாம் எவ்விதங்களில் மற்றவர்களுக்கு உதவலாம்?
4. மாவட்ட மாநாடுகள் நடைபெறும் தேதிகளையும் இடங்களையும் பற்றிய தகவலை எங்கிருந்து தெரிந்துகொள்ளலாம்?
5. நம்முடைய சபை செல்லவிருக்கும் மாநாடு அல்லாத வேறொரு மாநாட்டிற்குச் செல்கையில் அறைவசதி சம்பந்தப்பட்ட தகவல்கள் தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
6. ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவம் சம்பந்தமான என்ன குறிப்புகளை நாம் நினைவில் வைக்க வேண்டும்?
7. அறைவசதிக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கு நாம் எவ்வாறு ஒத்துழைப்புக் கொடுக்கலாம்? (“அறைவசதிகளுக்கான குறிப்புகள்” என்ற பெட்டியைக் காண்க.)
8. (அ) மாநாடுகளில் கலந்துகொள்ளும்போது, நாம் எவ்விதங்களில் யெகோவாவை மகிமைப்படுத்தலாம்? (ஆ) யெகோவாவின் மக்களை மற்றவர்கள் எவ்வாறு பாராட்டியிருக்கிறார்கள்?
9. மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிப்பதன் அவசியத்தை மத்தேயு 4:4 எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறது?
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சி நடைபெறும் நேரம்:
வெள்ளி, சனி
காலை 9:20- மாலை 4:55
ஞாயிறு
காலை 9:20- மாலை 4:00
[பக்கம் 4-ன் பெட்டி]
அறைவசதிகளுக்கான குறிப்புகள்
◼ 2008, ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்திற்கு முன்பாக அறையை முன்பதிவு செய்ய ஹோட்டலைத் தொடர்புகொள்ளாதீர்கள்.
◼ முடிந்தால், ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்யுங்கள். இன்டர்நெட் மூலமாக அறையை முன்பதிவு செய்யாதீர்கள், ஏனெனில் நாம் அந்த முறையை பயன்படுத்துவது கிடையாது.
◼ தங்குவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே தங்குங்கள்.
◼ பட்டியலில் குறிப்பிடப்பட்டதற்கும் அதிகமான வாடகைக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள்.
◼ தங்கப்போகிறவரின் பெயரிலேயே அந்தந்த அறையை முன்பதிவு செய்ய வேண்டும்.
◼ ஓர் அறையில் எத்தனை பேர் தங்கலாம் என்று பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை மீறாதீர்கள். இதன்மூலம் ஹோட்டல் விதிமுறைகளை நாம் பின்பற்றுவோம்.
◼ ஒருமுறை முன்பதிவு செய்த பிறகு அதை ரத்து செய்யாதீர்கள்.—மத். 5:37.
◼ மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டண சலுகை உள்ளதா என்று பட்டியலில் இல்லாத ஹோட்டல்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்க வேண்டாம்.
◼ பட்டியலில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் விசாரித்த பிறகு, அறைகள் காலியாக இல்லையென்று தெரிந்தால் அல்லது குறிப்பிட்ட ஹோட்டலுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் சபை செயலருக்குத் தெரிவியுங்கள். அவர் அந்தப் பட்டியலில் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி மாநாட்டின் அறைவசதி இலாகாவுடன் தொடர்புகொள்ள வேண்டும்.
◼ முன்பதிவு செய்த அறையை ரத்து செய்ய வேண்டியிருந்தால், முடிந்தளவு சீக்கிரத்தில் செய்யுங்கள். ரத்து செய்தபின், அதற்கான விவரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கான படிகள்:
1. பட்டியலிலுள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, ஹோட்டலின் வழக்கமான வேலை நேரத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
2. யெகோவாவின் சாட்சிகளது மாநாட்டில் கலந்துகொள்கிறீர்கள் என்பதை ஹோட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள்.
3. ஹோட்டலில் எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதிவரை தங்குவீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.
4. அங்கு அறைகள் காலியாக இல்லையென்றால், பட்டியலிலுள்ள வேறொரு ஹோட்டலைத் தொடர்புகொள்ளுங்கள்.
5. முன்பதிவு செய்தபின், அதை உறுதிப்படுத்தும் விவரங்களை கேளுங்கள்.
6. பத்து நாட்களுக்குள் கிரெடிட் கார்டு, செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தைக் கட்டிவிடுங்கள். ஒருபோதும் பணத்தை அனுப்பாதீர்கள். செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தை அனுப்புகையில், உறுதிபடுத்தும் விவரங்களை செக்கின் பின்புறமோ, மணி ஆர்டர் படிவத்தின் கீழோ குறிப்பிடுங்கள்.