2009-ஆம் ஆண்டிற்கான யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 நாமெல்லாரும் 2009 மாவட்ட மாநாட்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்; “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிற” நம் சக வணக்கத்தாரோடு மீண்டும் கூடிமகிழவும் ஆவலோடு காத்திருக்கிறோம். (மத். 5:3, NW) யெகோவாவின் நாள் விரைவில் வரவிருக்கிறது; எனவே, இனிய கிறிஸ்தவக் கூட்டுறவிலிருந்து நீங்கள் முழுமையாகப் பயனடைவதற்கும், விசுவாசத்தில் உறுதியாக இருப்பதற்குத் தேவையான ஆன்மீக உற்சாகத்தைப் பெறுவதற்கும் மாநாட்டின் மூன்று நாட்களுமே கலந்துகொள்ளுமாறு உங்கள் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறோம். (செப். 1:14) மாநாட்டில் கலந்துகொள்வது உங்கள் வணக்கத்தின் முக்கியப் பாகம் என்பதை உங்கள் ஆசிரியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் தெரியப்படுத்துங்கள். இது குறித்து வெகு முன்னதாகவே தைரியத்துடன் திட்டமிடுங்கள்; யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபியுங்கள்; நிச்சயமாக அவர் உங்களுக்கு உதவுவார்.—ஏசா. 50:10.
2 சர்வதேச மாநாடுகள்: இந்தியாவில் சர்வதேச மாநாடுகள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்படவில்லை. இந்த மாநாடுகள் ஒருசில நாடுகளிலும் நகரங்களிலுமே நடைபெறவிருப்பதால் மாநாட்டுக்குச் செல்ல நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே இவற்றில் கலந்துகொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டுக்கு நாம் ஒத்துழைத்தால் மாநாட்டில் நெரிசல் அதிகமாவதைத் தவிர்க்கலாம். (1 கொ. 14:40; எபி. 13:17) இந்த வருடம் இந்தியாவில் பெரும்பாலான மாவட்ட மாநாடுகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களின்போது நடைபெறவிருக்கின்றன. டிசம்பர் மாதத்தில், இரண்டு பெரிய மாவட்ட மாநாடுகள் தமிழ்நாட்டிலுள்ள சென்னையிலும், கேரளாவிலுள்ள கொச்சியிலும் நடைபெறவிருக்கின்றன; பல இடங்களிலிருந்து சகோதரர்கள் ஒன்றுகூடி மகிழ இது வாய்ப்பளிக்கும்.
3 மற்றவர்களும் கலந்துகொள்ள உதவுங்கள்: உங்கள் சபையிலுள்ள யாருக்காவது மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள உதவி தேவைப்படுகிறதா? மற்றவர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள நீங்கள் உதவும்போது, “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்ற வசனத்திற்கு ஏற்ப நடந்துகொள்கிறீர்கள்.—பிலி. 2:4.
4 தகவல் பெறுதல்: மாநாடு நடக்கும் தேதிகளையும் இடங்களையும் குறித்துக் கிளை அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு முன், தேவையான தகவலுக்காக உங்கள் சபையின் செயலரை அணுகுங்கள்.
5 உங்களுடைய சபைக்கென்று நியமிக்கப்பட்ட மாநாட்டிற்குச் செல்லாமல் வேறொரு மாநாட்டிற்கு நீங்கள் செல்ல வேண்டியிருந்தால், பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியலை மாநாட்டு அலுவலகங்களின் விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்; இந்த விலாசங்கள் ஜூன் 2009 நம் ராஜ்ய ஊழியத்தில் வெளியிடப்படும். பதிலைப் பெறுவதற்கு, சுய விலாசம் எழுதிய ஓர் அஞ்சல் உறையில் அஞ்சல்தலை ஒட்டி உங்கள் கடிதத்தோடு சேர்த்து அனுப்புங்கள்.
6 விசேஷத் தேவைகள்: தங்குமிடம் சம்பந்தமாக ஒரு பிரஸ்தாபிக்கு உதவி தேவைப்பட்டால், ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தைச் சமர்ப்பிக்க அவர் தகுதி உள்ளவரா என்பதைச் சபையின் ஊழியக் குழு தீர்மானிக்க வேண்டும். சபையின் செயலர் அந்தப் படிவத்தை மாநாட்டு அறைவசதி இலாகாவுக்கு அனுப்பி வைக்கும் முன், அந்தப் படிவத்திலும், பிப்ரவரி 14, 2009 தேதியிட்டு அனைத்து மூப்பர் குழுக்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்திலும் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அந்தக் குழு கலந்தாலோசிக்க வேண்டும்.
7 அறை முன்பதிவு: பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியல் சபைக்கு வந்தவுடனே தகவல் பலகையில் அது போடப்படும். ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்வதற்கு முன்பு “அறைவசதிகளுக்கான குறிப்புகள்” என்ற பெட்டியிலுள்ள தகவலைக் கவனமாகப் படியுங்கள். ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்கையில்:
◼ பட்டியலிலுள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, ஹோட்டலின் வழக்கமான வேலை நேரத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
◼ யெகோவாவின் சாட்சிகளது மாநாட்டில் கலந்துகொள்கிறீர்கள் என்பதை ஹோட்டல் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள்.
◼ ஹோட்டலில் எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதிவரை தங்குவீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.
◼ அங்கு அறைகள் காலியாக இல்லையென்றால், பட்டியலிலுள்ள வேறொரு ஹோட்டலைத் தொடர்புகொள்ளுங்கள்.
◼ முன்பதிவு செய்தபின், அதை உறுதிப்படுத்தும் விவரங்களைக் கேளுங்கள்.
◼ பத்து நாட்களுக்குள் கிரெடிட் கார்டு, செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தைக் கட்டிவிடுங்கள். செக் அல்லது மணி ஆர்டர் மூலமாக முன்பணத்தை அனுப்புகையில், உறுதிப்படுத்தும் விவரங்களை செக்கின் பின்புறமோ, மணி ஆர்டர் படிவத்தின் கீழோ குறிப்பிடுங்கள். ஒருபோதும் பணத்தை அனுப்பாதீர்கள்.
8 சிலர், தங்களுக்குப் பிடித்த வேறு ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பக்கூடும். என்றாலும், பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியலில் இல்லாத ஹோட்டல்களில் நாம் தங்கினாலோ, அதில் குறிப்பிடப்பட்ட வாடகையைவிட அதிக வாடகை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டாலோ, இந்த ஏற்பாட்டைச் செய்கிற சகோதரர்களின் வேலையைக் கஷ்டமாக்கிவிடுவோம். தயவுசெய்து, நீங்கள் ஒரு ஹோட்டல் அறையில் தங்கப்போவதில்லை என்றால் அதை முன்பதிவு செய்யாதீர்கள்; அல்லது, வேறொரு ஹோட்டலில் தங்குவதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்த ஹோட்டல் அறையைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யாதீர்கள். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துழைப்பதன் மூலம், நியாயமான வாடகை கொடுத்து ஹோட்டலில் தங்க எல்லாருக்குமே நீங்கள் உதவுவீர்கள்.—1 கொ. 10:24.
9 கடவுளுக்கு மகிமை சேர்க்கும் செயல்கள்: நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும், முக்கியமாக மாநாடு நடைபெறும் நகரிலுள்ள ஹோட்டல் பணியாளர்களிடமும் மற்றவர்களிடமும் தொடர்புகொள்ளுகையில் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை வெளிக்காட்டும்போது, யெகோவாவின் மக்களுடைய நற்பெயரைக் காத்துக்கொள்கிறோம், மற்றவர்களுக்கு இடறலை ஏற்படுத்தாமலும் பார்த்துக்கொள்கிறோம். (1 கொ. 10:31; 2 கொ. 6:3, 4) இவ்வாறு, 2009 மாவட்ட மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்வதும், உங்கள் நல்நடத்தையும் கடவுளுக்கு மகிமை சேர்ப்பதாக!—1 பே. 2:12.
[கேள்விகள்]
1. (அ) மாவட்ட மாநாட்டின் மூன்று நாட்களுமே கலந்துகொள்வதன் மூலம் என்ன ஆசீர்வாதங்களை நாம் பெறுவோம்? (ஆ) நாம் இப்போது எதைக் குறித்துத் திட்டமிட வேண்டும்?
2. (அ) சர்வதேச மாநாடுகளில் யார் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்? (ஆ) பெரிய மாநாடுகள் எங்கு, எப்போது நடைபெறவிருக்கின்றன?
3. கிறிஸ்தவ அன்பை நம் சபையிலுள்ள சிலருக்கு எவ்வாறு வெளிக்காட்டலாம்?
4, 5. நம்முடைய சபைக்கென்று நியமிக்கப்பட்ட மாநாட்டிற்குச் செல்லாமல் வேறொரு மாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
6. தங்குமிடம் சம்பந்தமாக ஒரு பிரஸ்தாபிக்கு உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
7. (அ) ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்வது எப்படி? (ஆ) ஹோட்டல் நிர்வாகத்தாரிடம் நற்பெயரைக் காத்துக்கொள்வதற்காக என்னென்ன விஷயங்களை நாம் மீண்டும் நினைவில் வைக்க வேண்டும்? (“அறைவசதிகளுக்கான குறிப்புகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
8. நியாயமான வாடகை கொடுத்து ஹோட்டலில் தங்க எல்லாருக்குமே நாம் எப்படி உதவலாம்?
9. 2009 மாவட்ட மாநாட்டிற்காகத் தயாரிக்கும்போதும் அதில் கலந்துகொள்ளும்போதும் முக்கியமாக எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சி நடைபெறும் நேரம்:
வெள்ளி, சனி
காலை 9:20 - மாலை 4:55
ஞாயிறு
காலை 9:20 - மாலை 4:00
[பக்கம் 4-ன் பெட்டி]
அறைவசதிகளுக்கான குறிப்புகள்:
◼ மார்ச் 2, 2009-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்திற்கு முன்பாக ஹோட்டல் அறையை முன்பதிவு செய்யாதீர்கள்.
◼ முடிந்தவரை, சீக்கிரமாக முன்பதிவு செய்யுங்கள்.
◼ தங்குவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே தங்குங்கள்.
◼ பட்டியலில் குறிப்பிடப்பட்டதைவிட அதிகமான வாடகைக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள்.
◼ தங்கப்போகிறவரின் பெயரிலேயே அந்தந்த அறையை முன்பதிவு செய்ய வேண்டும்.
◼ தீயணைப்பு விதிமுறைகளின்படி, ஓர் அறையில் எத்தனை பேர் தங்கலாம் என்று பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை மீறாதீர்கள்.
◼ ஒருமுறை முன்பதிவு செய்த பிறகு அதை ரத்து செய்யாதீர்கள்.—மத். 5:37.
◼ மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்குக் கட்டணச் சலுகை உள்ளதா எனப் பட்டியலில் இல்லாத ஹோட்டல்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்க வேண்டாம்.
◼ பட்டியலில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் விசாரித்த பிறகு, அறைகள் காலியாக இல்லையென்று தெரிந்தால் அல்லது குறிப்பிட்ட ஹோட்டலுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் சபையின் செயலருக்குத் தெரிவியுங்கள். பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி மாநாட்டு அறைவசதி இலாகாவுடன் அவர் தொடர்புகொள்ள வேண்டும்.
◼ முன்பதிவு செய்த அறையை ரத்து செய்ய வேண்டியிருந்தால், முடிந்தளவு சீக்கிரத்தில் செய்யுங்கள். ரத்து செய்தபின், அதற்கான விவரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.