கேள்விப் பெட்டி
◼ ஆர்வம் காட்டுவோருக்கு எந்த இரண்டு புத்தகங்களிலிருந்து படிப்பு நடத்த வேண்டும்?
பைபிள் கற்பிக்கிறது புத்தகமே பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும் நடத்துவதற்கும் நாம் முக்கியமாகப் பயன்படுத்துகிற புத்தகம். ஒருவேளை ஒரு பொருத்தமான துண்டுப்பிரதியிலிருந்தோ வேறு ஏதாவது புத்தகத்திலிருந்தோ பைபிள் படிப்பை ஆரம்பித்தாலும், சீக்கிரத்திலேயே அந்தப் படிப்பை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திற்கு மாற்ற முயல வேண்டும். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பித்ததால் மிகச் சிறந்த பலன்கள் கிடைத்திருக்கின்றன.
பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை முடித்த பிறகு, மாணாக்கர் முன்னேற்றம் செய்கிறார் என்றால் கடவுளை வணங்குங்கள் புத்தகத்திலிருந்து படிப்பை நடத்த வேண்டும். (கொலோ. 2:6, 7) அப்புத்தகத்தின் நோக்கத்தைப்பற்றி பக்கம் 2-ல் இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது: “கடவுளுடைய மதிப்புமிக்க சத்தியங்களின் ‘ஆழத்தையும் உயரத்தையும் இன்னதென்று உணர்ந்து’ கொள்ளும்படி அவரை நேசிக்கும் அனைவரையும் பைபிள் உந்துவிக்கிறது. (எபேசியர் 3:18) இதற்காகவே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஆவிக்குரிய ரீதியில் வளரவும் கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகிற்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் செல்ல உங்களை நன்கு தயார்படுத்தவும் இது உதவும் என நம்புகிறோம்.”
இரண்டு புத்தகங்களையும் முடிப்பதற்கு முன்பாகவே முழுக்காட்டுதல் பெறுவதற்கு மாணாக்கர் தகுதிபெற்றாலும், இரண்டாவது புத்தகத்தை முடிக்கும் வரையில் படிப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அவர் முழுக்காட்டுதல் பெற்றுவிட்ட பிறகும்கூட படிப்பு நடத்துபவர் அந்த நேரத்தையும் மறுசந்திப்பையும் பைபிள் படிப்பையும் அறிக்கை செய்யலாம். படிப்பு நடத்துவோருடன் சென்று அதில் கலந்துகொள்ளும் பிரஸ்தாபியும் அந்த நேரத்தை அறிக்கை செய்யலாம்.