‘இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்படும்’!
1. பிரசங்க வேலையை யாராலும் தடுக்க முடியாது என்பது நமக்கு எப்படித் தெரியும்?
1 யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேறுவதிலிருந்து எதுவும் அவரைத் தடுக்க முடியாது. (ஏசா. 14:24) மீதியானியரின் 1,35,000 பேர் கொண்ட இராணுவத்தினரை வெல்லுவது முடியாத விஷயம் என்பதாக நியாயாதிபதியான கிதியோனும் அவருடைய 300 படைவீரர்களும் நினைத்தார்கள்.என்றாலும் யெகோவா கிதியோனிடம், “நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.” (நியா. 6:14) இன்று யெகோவா எந்த வேலைக்குப் பக்கதுணையாக இருக்கிறார்? “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:14) இந்த வேலை செய்து முடிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது!
2. ஊழியத்தில் நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா உதவுவார் என ஏன் எதிர்பார்க்கலாம்?
2 யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் உதவுகிறார்: யெகோவா ஒரு தொகுதியாகத் தம் சாட்சிகளுக்கு உதவினாலும், தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வார் என எதிர்பார்க்க முடியுமா? அப்போஸ்தலன் பவுல் கஷ்டமான ஒரு சமயத்தில் இருந்தபோது யெகோவா தம்முடைய மகனாகிய இயேசுவின் மூலம் தனிப்பட்ட விதமாக தனக்கு உதவியதை உணர்ந்தார். (2 தீ. 4:17) அதேபோல நாம் ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தைச் செய்ய எடுக்கும் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—1 யோ. 5:14.
3. எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் யெகோவா நமக்கு உதவுகிறார்?
3 வாழ்க்கையின் அன்றாட கவலைகள் காரணமாக ஊழியத்தில் ஈடுபட சக்தியே இல்லாததுபோல் உணருகிறீர்களா? ‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுக்கிறார்.’ (ஏசா. 40:29-31) எதிர்ப்பையோ துன்புறுத்தலையோ சந்திக்கிறீர்களா? ‘யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.’ (சங். 55:22) சில சமயங்களில் நம்பிக்கை இழந்துவிடுகிறீர்களா? ‘நீங்கள் போங்கள்; நான் உங்கள் வாயோடே இருப்பேன்.’ (யாத். 4:11, 12) உடல் நலக்குறைவால் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியவில்லையா? நாம் எவ்வளவு குறைவாக ஊழியத்தில் ஈடுபட்டாலும் சரி, அதற்காக நாம் முழுமூச்சுடன் எடுக்கிற முயற்சிகளை யெகோவா உயர்வாகக் கருதுகிறார்.—1 கொ. 3:6, 9.
4. யெகோவாவின் மீதுள்ள நம்பிக்கை நம்மை என்ன செய்ய தூண்டும்?
4 ‘யெகோவாவுடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?’ (ஏசா. 14:27) நாம் செய்கிற ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதில் நம்பிக்கை வைத்து, ‘அவர் தரும் அதிகாரத்தில் தைரியமாகப் பேசி’ பிரசங்க வேலையில் தொடர்ந்து சாதுரியமாக ஈடுபடுவோமாக.—அப். 14:3.