வெளி ஊழியக் கூட்டத்தில் இனி தினவசனத்தைக் கலந்தாலோசிக்க வேண்டியதில்லை
முன்பெல்லாம்... அன்றைய தினவசனம் ஊழியத்துடன் சம்பந்தப்பட்ட வசனமாக இருந்தால் வெளி ஊழியக் கூட்டத்தின்போது அதைச் சுருக்கமாகக் கலந்தாலோசிப்பது வழக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறுபுத்தகத்திலுள்ள குறிப்புகளை இனி வெளி ஊழியக்கூட்டத்தின்போது கலந்தாலோசிக்கக் கூடாது. முன்பு செய்துவந்ததைப் போலவே, வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவோர்... ஊழியத்தோடு சம்பந்தப்பட்ட பைபிள் வசனங்களைப் பயன்படுத்தலாம்; நம் ராஜ்ய ஊழியம், ஊழியப் பள்ளி புத்தகம், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் ஆகியவற்றிலுள்ள தகவலையும் பயன்படுத்தலாம். இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள்... அன்று ஊழியத்திற்குச் செல்பவர்களுக்கு என்ன குறிப்புகள் உதவியாய் இருக்குமென தயாரித்துச் சென்று, நடைமுறையான குறிப்புகளை அவர்களிடம் சொல்ல வேண்டும். முன்பு செய்யப்பட்டதைப் போலவே, இந்தக் கூட்டத்தை 10 முதல் 15 நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும்; ஒருவேளை... சபைக் கூட்டத்திற்குப் பின் இந்தக் கூட்டத்தை நடத்தினால், அதைவிடக் குறைந்த நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.