ஊழியத்தை நன்றாக செய்ய உதவுகிற வெளி ஊழியக் கூட்டங்கள்
1. எதற்காக வெளி ஊழியக் கூட்டங்கள் நடத்துகிறோம்?
1 ஒரு சமயம், இயேசு 70 சீடர்களோடு ஊழியத்துக்கு போனார். அதற்கு முன் அவர்களோடு ஒரு கூட்டம் நடத்தினார். (லூக். 10:1-11) தனியாக இருப்பதாக நினைத்து பயப்பட வேண்டாம் என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார். ‘அறுவடையின் எஜமானரான’ யெகோவா துணையாக இருப்பார் என்று சொல்லி தைரியம் கொடுத்தார். ஊழியத்தை எப்படி நன்றாக செய்வது என்று சொல்லிக்கொடுத்தார். அவர்கள் எல்லாரையும் “இரண்டிரண்டு” பேராக அனுப்பினார். இன்றும் வெளி ஊழிய கூட்டங்கள் நடக்கின்றன. அந்த கூட்டங்களில் நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள்... எப்படி நன்றாக ஊழியம் செய்யலாம் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்... எங்கே செய்ய வேண்டும், யாரோடு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
2. வெளி ஊழியக் கூட்டத்தை எவ்வளவு நேரம் நடத்த வேண்டும்?
2 நாம் நடத்தும் வெளி ஊழியக் கூட்டங்கள், பொதுவாக 10-15 நிமிடங்கள் நடக்கின்றன. ஊழியம் சம்பந்தமான தகவல்களை சொல்வது, பிரஸ்தாபிகளை இரண்டு இரண்டு பேராக அனுப்புவது, எங்கே ஊழியம் செய்ய வேண்டும் என்று சொல்வது, ஜெபம் செய்வது... எல்லாவற்றையும் 15 நிமிடத்துக்குள் முடிக்கிறோம். ஆனால், ஏப்ரல் மாதத்தில் இருந்து வெளி ஊழியக் கூட்டம் 5-7 நிமிடம்தான் நடக்கும். சில சமயத்தில், சபை கூட்டத்துக்கு பிறகு வெளி ஊழியக் கூட்டம் நடத்த வேண்டியிருக்கும். எல்லாரும் சபை கூட்டத்தில் அப்போதுதான் நிறைய விஷயங்களை கேட்டிருப்பார்கள். அதனால் வெளி ஊழியக் கூட்டத்தை 5-7 நிமிடம் நடத்த வேண்டியதில்லை, அதைவிட குறைவான நேரத்திற்குள் முடிக்க வேண்டும். அப்படி சீக்கிரம் முடித்தால்தான், நிறைய நேரம் ஊழியம் செய்ய முடியும். ஒருவேளை, பயனியர்களோ பிரஸ்தாபிகளோ வெளி ஊழிய கூட்டத்துக்கு முன்பே ஊழியத்தை ஆரம்பித்திருந்தால்கூட, இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் கொஞ்சம் நேரம் மட்டும் ஊழியத்தை நிறுத்தினால் போதும்.
3. எல்லாருக்கும் பிரயோஜனமாக இருப்பது போல் வெளி ஊழியக் கூட்டத்தை எப்படி நடத்தலாம்?
3 பிரஸ்தாபிகளுக்கு பிரயோஜனமாக இருப்பதுபோல் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்த வேண்டும். சபையில் இருக்கிற எல்லாரும் ஒரே இடத்தில் கூடி வராமல், தொகுதி தொகுதியாக கூடிவருவது நல்லது. இதனால், கூட்டம் நடத்தும் இடத்துக்கு ஊழியம் செய்யும் இடத்துக்கு பிரஸ்தாபிகள் சுலபமாக போக முடியும். அதோடு, அந்தந்த தொகுதி கண்காணிகளால் பிரஸ்தாபிகளை சீக்கிரமாக பிரித்துவிட முடியும்; அந்த தொகுதியில் இருக்கிற பிரஸ்தாபிகளை நன்றாக கவனித்துக்கொள்ளவும் முடியும். இருந்தாலும் ஒரே இடத்தில் கூடிவருவதா, தொகுதி தொகுதியாக கூடிவருவதா என்று சூழ்நிலையை பொறுத்து மூப்பர் குழு தீர்மானிப்பார்கள். முடிவு ஜெபத்தை சுருக்கமாக செய்ய வேண்டும். அதை செய்வதற்கு முன்பு, யார் எங்கே ஊழியம் செய்வார்கள் என்று சொல்லிவிட வேண்டும்.
4. வெளி ஊழியக் கூட்டங்கள் முக்கியம் இல்லை என்று ஏன் நினைக்கக் கூடாது?
4 மற்ற கூட்டங்களை போலவே இதுவும் முக்கியமானதுதான்: யாரெல்லாம் ஊழியத்துக்கு போகிறார்களோ அவர்களுக்காகத்தான் வெளி ஊழியக் கூட்டம் நடக்கிறது. அதனால், சபை கூட்டத்துக்கு வரும் எல்லாரும் வெளி ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். அதற்காக, வெளி ஊழியக் கூட்டம் முக்கியம் இல்லை என்று நாம் நினைக்கக் கூடாது. ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பவும்’ யெகோவாதான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். (எபி. 10:24, 25) இந்த கூட்டத்தை நடத்தும் சகோதரர், நன்றாக தயாரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது, யெகோவாவுக்கு இன்னும் புகழ் சேர்க்க முடியும், வந்திருக்கிறவர்களும் பயனடைவார்கள். ஊழியத்துக்கு போகும் பிரஸ்தாபிகள், இந்த கூட்டத்துக்கு வர முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும்.
சபை கூட்டங்களை போலவே வெளி ஊழியக் கூட்டங்களும் ரொம்ப முக்கியம்
5. (அ) வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவதில், ஊழியக் கண்காணிக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது? (ஆ) வெளி ஊழியக் கூட்டத்தை சகோதரிகள் எப்படி நடத்த வேண்டும்?
5 கூட்டத்தை நடத்துகிறவர்கள் நன்றாக தயாரிக்க வேண்டும்: சபை கூட்டத்தை ஒரு சகோதரர் நன்றாக நடத்த வேண்டும் என்றால், முன்பே அவரிடம் சொல்ல வேண்டும். அதேபோல், வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தப்போகிற சகோதரரிடமும் முன்பே சொல்ல வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வெளி ஊழியக் கூட்டம் நடக்கும்போது தொகுதி கண்காணியோ அவருடைய உதவியாளரோ அதை நடத்த வேண்டும். ஆனால், எல்லா தொகுதிகளும் ஒரே இடத்தில் கூடி வந்தால், வெளி ஊழியக் கூட்டத்தை யார் நடத்த வேண்டும் என்று ஊழியக் கண்காணி சொல்வார். சில ஊழியக் கண்காணிகள், வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தப்போகிற சகோதரர்களிடம் அட்டவணை போட்டு கொடுக்கிறார்கள்; ஒரு பிரதியை அறிவிப்பு பலகையில் போடுகிறார்கள். யார் நன்றாக நடத்துவார்கள் என்பதை யோசித்து ஊழியக் கண்காணி அந்த அட்டவணையை போடுவார். வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் சகோதரர் நன்றாக கற்றுக்கொடுக்கிறவராக இருக்க வேண்டும், கொடுக்கிற வேலையை நன்றாக செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் வெளி ஊழியக் கூட்டம் எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும். வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துவதற்கு மூப்பரோ உதவி ஊழியரோ ஞானஸ்நானம் எடுத்த தகுதியுள்ள சகோதரரோ என்றைக்காவது இல்லையென்றால், ஞானஸ்நானம் எடுத்த தகுதியுள்ள ஒரு சகோதரரிடம் அந்த கூட்டத்தை நடத்தச் சொல்லலாம்.—“வெளி ஊழியக் கூட்டத்தை ஒரு சகோதரி நடத்தும்போது...” என்ற பெட்டியை பாருங்கள்.
6. வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தும் சகோதரர் ஏன் நன்றாக தயாரிக்க வேண்டும்?
6 தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலோ ஊழியக் கூட்டத்திலோ நியமிப்பு கிடைக்கும்போது, கடைசி நேரத்தில் தயாரித்துக்கொள்ளலாம்... வண்டியில் போகும்போது யோசித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நாம் எப்போதுமே நினைக்க மாட்டோம். முன்பே நன்றாக தயாரிப்போம். அதேபோல், வெளி ஊழியக் கூட்டத்துக்கு நாம் நன்றாக தயாரிக்க வேண்டும். இனிமேல், வெளி ஊழியக் கூட்டத்தை 5-7 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். அதனால், நன்றாக தயாரிப்பது மிக முக்கியம். அப்போதுதான் எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும் விதத்தில் நடத்த முடியும், சரியான நேரத்திற்குள் முடிக்க முடியும். எந்த இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தை நடத்துகிற சகோதரர் முன்பே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
7. கூட்டத்தை நடத்தும் சகோதரர் எந்தெந்த விஷயங்களை பற்றி பேசலாம்?
7 எந்த விஷயத்தை பற்றி பேசலாம்? நாம் ஊழியம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கலாம். அதனால், வெளி ஊழியக் கூட்டத்தை நடத்த எந்த குறிப்புத்தாளையும் நம் அமைப்பு கொடுக்கவில்லை. எந்தெந்த விஷயங்களை பற்றி பேசலாம் என்று தெரிந்துகொள்ள, “வெளி ஊழியக் கூட்டத்தில் சிந்திக்க...” என்ற பெட்டியை பாருங்கள். பொதுவாக, கலந்தாலோசிப்பு முறையில் இந்த கூட்டம் இருக்கும். சில சமயத்தில், நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம். அல்லது, jw.org வெப்சைட்டில் இருக்கிற பொருத்தமான வீடியோவை பார்க்க ஏற்பாடு செய்யலாம். பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துகிற மாதிரி என்ன சொல்லலாம்... ஊழியத்தை நன்றாக செய்வதற்கு எந்த விஷயங்களை சொல்லலாம்... இதையெல்லாம் மனதில் வைத்து வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துகிற சகோதரர் நன்றாக தயாரிக்க வேண்டும்.
கூட்டத்தை நடத்துகிற சகோதரர் அதற்காக தயாரிக்கும்போது, என்ன சொன்னால் பிரஸ்தாபிகள் உற்சாகமடைவார்கள்... ஊழியத்தை நன்றாக செய்வார்கள்... என்று யோசித்து பார்க்க வேண்டும்
8. சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் எந்த விஷயங்களை கலந்துபேசுவது ரொம்ப நல்லது?
8 பெரும்பாலும் சனிக்கிழமையில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை பிரஸ்தாபிகள் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை ஊழியத்திற்கு வரும் நிறைய பிரஸ்தாபிகளால் வார நாட்களில் வர முடிவதில்லை. அதனால், குடும்ப வழிபாட்டில் நடித்து பார்த்த அணுகுமுறையை ஞாபகம் வைப்பது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். கூட்டத்தை நடத்துபவர் இதை மனதில் வைத்து, நம் ராஜ்ய ஊழியத்தின் கடைசி பக்கத்தில் இருக்கிற அணுகுமுறைகளை கலந்தாலோசிக்கலாம். சமீபத்தில் வந்த உள்ளூர் செய்திகள், நிகழ்ச்சிகள், பண்டிகைகளை வைத்து எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்... பத்திரிகைகளை கொடுக்கலாம்... பத்திரிகைகளை பெற்றுக்கொண்ட ஆட்களிடம் மறுசந்திப்புக்கு எப்படி அடித்தளம் போடலாம்... என்று கலந்தாலோசிக்கலாம். ஊழியக் கூட்டத்துக்கு வந்திருக்கும் சில பிரஸ்தாபிகள் ஏற்கெனவே நிறைய பத்திரிகைகளை கொடுத்திருப்பார்கள். அவர்கள் எப்படி பத்திரிகைகளை கொடுத்தார்கள், அதனால் என்ன நல்ல அனுபவங்கள் கிடைத்தது என்று கேட்கலாம். அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பை பற்றி ஞாயிற்றுக்கிழமையில் கலந்துபேசலாம். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?, கடவுள் சொல்வதைக் கேளுங்கள், கடவுள் சொல்லும் நற்செய்தி! போன்ற புத்தகங்களை எல்லா நாட்களிலும் கொடுக்கலாம். அதனால், இந்த புத்தகங்களை எப்படி கொடுக்கலாம் என்று கலந்துபேசுவது பிரயோஜனமாக இருக்கும்.
9. விசேஷ விநியோகிப்பு செய்யும் சமயத்தில் எந்த விஷயங்களை பற்றி பேசலாம்?
9 விசேஷ விநியோகிப்பு செய்யும் சமயத்தில், நாம் முக்கியமாக துண்டுப்பிரதியோ அழைப்பிதழோ கொடுப்போம். இருந்தாலும், சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் அதோடு சேர்த்து பத்திரிகைகளையும் எப்படி கொடுக்கலாம் என்று கலந்துபேசலாம். அதுமட்டுமில்லாமல், யாராவது ஆர்வமாக கேட்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லலாம். இதுபோன்ற விசேஷ விநியோகிப்பு சமயங்களில் கிடைத்த நல்ல அனுபவங்களை பற்றி சொல்லலாம்.
10, 11. வெளி ஊழியக் கூட்டம் பிரயோஜனமாக இருப்பதற்கு பிரஸ்தாபிகள் என்ன செய்ய வேண்டும்?
10 பிரஸ்தாபிகள் எப்படி தயாரிக்க வேண்டும்? வெளி ஊழியக் கூட்டம் பிரயோஜனமாக இருப்பதற்கு பிரஸ்தாபிகளுடைய ஒத்துழைப்பும் தேவை. வெளி ஊழியத்துக்காக முன்பே அவர்கள் நன்றாக தயாரிக்க வேண்டும். ஒருவேளை, குடும்ப வழிபாட்டு சமயத்தில் தயாரிக்கலாம். அப்போதுதான், கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல முடியும். வெளி ஊழியக் கூட்டத்துக்கு வரும் முன்பே பத்திரிகைகளையும் புத்தகங்களையும் தேவையான அளவுக்கு எடுத்து வையுங்கள். அப்போதுதான் நேரத்தை வீணாக்காமல் கூட்டம் முடிந்த உடனே ஊழியம் செய்யும் இடத்துக்கு போக முடியும்.
11 வெளி ஊழியக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே நாம் வர வேண்டும். சொல்லப்போனால், நாம் எல்லா கூட்டங்களுக்குமே சரியான நேரத்துக்கு வருவது முக்கியம். அதுவும் வெளி ஊழியக் கூட்டத்துக்கு சரியான நேரத்திற்கு வருவது மிக முக்கியம். நாம் தாமதமாக வந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். எப்படி? பிரஸ்தாபிகளை பிரித்து விடுவதற்கு முன்பு தொகுதி கண்காணி நிறைய விஷயங்களை யோசித்து செய்கிறார். உதாரணமாக, கொஞ்ச பேர் மட்டும் வந்திருந்தால், அவர்கள் எல்லாரையும் மீதி இருக்கும் வீடுகளில் செய்ய சொல்லலாம். யாராவது நடந்து வந்திருந்தால், வண்டி வைத்திருக்கும் பிரஸ்தாபிகளோடு சேர்ந்து தூரமான இடங்களுக்கு ஊழியம் செய்ய அனுப்பி வைக்கலாம். ஊழியம் செய்யும் இடம் ஆபத்தானதாக இருந்தால், சகோதரிகளோடு சேர்ந்து சகோதரர்களை ஊழியம் செய்ய சொல்லலாம். இல்லையென்றால், சகோதரிகள் ஊழியம் செய்யும் இடத்திற்கு பக்கத்திலேயே சகோதரர்களை செய்ய சொல்லலாம். வயதான பிரஸ்தாபிகளை, மாடி வீடுகள் அதிகம் இல்லாத இடத்திற்கு அனுப்பி வைக்கலாம். புது பிரஸ்தாபிகளை அனுபவம் இருக்கிறவர்களோடு அனுப்பலாம். ஒருவேளை, நாம் தாமதமாக வந்தால் தொகுதி கண்காணிக்கு இதையெல்லாம் செய்வது கஷ்டமாக இருக்கும், முன்பு செய்த எல்லா ஏற்பாடுகளையும் மாற்ற வேண்டியிருக்கும். எப்போதாவது தாமதமாக வருவதற்கு நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால் எப்போதுமே தாமதமாக வந்தால் இந்த கேள்விகளை கேட்ட வேண்டும்: “வெளி ஊழியக் கூட்டத்தை நான் உண்மையிலேயே மதிக்கிறேனா? அதற்காக மற்ற வேலைகளை எல்லாம் முன்பே முடிக்கிறேனா?”
12. யாருடன் ஊழியம் செய்யலாம் என்று நீங்கள் முடிவு செய்யும்போது எதை மனதில் வைக்க வேண்டும்?
12 யாருடன் ஊழியம் செய்யலாம் என்று நீங்கள் முன்பே முடிவு செய்யலாம். அல்லது, உங்களோடு ஊழியம் செய்வதற்கு தொகுதி கண்காணி யாரையாவது நியமிப்பார். யாருடன் ஊழியம் செய்யலாம் என்று நீங்களே முடிவு செய்யும்போது, உங்களுக்கு பிடித்தவர்கள் கூடவே எப்போதும் ஊழியம் செய்யாமல் வேறு வேறு பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்யலாம். அப்படி செய்யும்போது உங்களுடைய ‘இதயக் கதவை அகலத் திறக்க முடியும்.’ (2 கொ. 6:11-13) புது பிரஸ்தாபிகளோடு அவ்வப்போது ஊழியம் செய்தால், அவர்களும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள், இல்லையா? (1 கொ. 10:24; 1 தீ. 4:13, 15) எங்கே ஊழியம் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறபோது அதை கவனமாக கேளுங்கள். கூட்டம் முடிந்த பிறகு, தொகுதி கண்காணி செய்த ஏற்பாட்டை மாற்றாதீர்கள். ஊழியம் செய்ய வேண்டிய இடத்திற்கு உடனடியாக செல்லுங்கள்.
13. வெளி ஊழியக் கூட்டத்தை மதித்து அதற்கு தயாராக வரும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
13 இயேசு அனுப்பிய 70 பேரும் ஊழியத்தை முடித்துவிட்டு “சந்தோஷத்தோடு திரும்பி” வந்தார்கள். (லூக். 10:17) ஊழியத்துக்கு போகும்முன் இயேசு சீடர்களோடு கூட்டம் நடத்தியதால், அவர்களால் நன்றாக ஊழியம் செய்ய முடிந்தது. அதேபோல், இன்று நடக்கிற வெளி ஊழியக் கூட்டங்களும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன. நாம் எல்லாரும் இந்த கூட்டத்தை மதித்து அதற்கு தயாராக வரும்போது நிறைய நன்மை கிடைக்கிறது. எப்படி? உற்சாகம் கிடைக்கிறது... ஊழியத்தை நன்றாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்கிறோம்... எங்கே செய்ய வேண்டும், யாரோடு செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம். “எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சி” கொடுப்பதற்கு வெளி ஊழியக் கூட்டங்கள் ரொம்ப உதவியாக இருக்கிறது.—மத். 24:14.