மார்ச் 30-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மார்ச் 30-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 51; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 41 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 14-15 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 14:36-45 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பிலேயாம்—தலைப்பு: பேராசைப்பட்டால் தவறான வழியில் போய்விடுவோம்—எண் 22:5-35; யூ 11; 2பே 2:15, 16 (5 நிமி.)
எண் 3: கடைசி நாளை பற்றி பைபிள் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கிறது—அறிமுகம் பக். 13 பாரா 1 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’—தீத்து 3:1.
15 நிமி: ஊழியம் செய்யும்போது jw.org-ல் இருக்கிற வீடியோக்களை காட்டுங்கள். கலந்தாலோசிப்பு. முதலில், பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை போட்டு காட்டுங்கள். இதை ஊழியத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று கேளுங்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை போட்டு காட்டி அதே கேள்வியை கேளுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “பேச்சை ஆரம்பிக்க—‘அறிமுகம்’ சிறு புத்தகத்தை பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில். கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் என்ற புத்தகத்தை வேறு எப்படி ஊழியத்தில் பயன்படுத்தலாம் என்று கேளுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 114; ஜெபம்