சபையின் கையிருப்பிலுள்ள பழைய பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள்
அநேக சபைகளில் பிரசுர இலாக்காவில் பழைய பிரசுரங்கள் எக்கச்சக்கமாக குவிந்துள்ளன. அவற்றைக் கேட்டு வாங்கி உங்களுடைய சொந்த லைப்ரரியில் வைக்கலாம், அல்லவா? உண்மைதான், உங்களுடைய கம்ப்யூட்டரிலுள்ள உவாட்ச்டவர் லைப்ரரி-யில் பழைய ஆங்கிலப் பிரசுரங்கள் சிலவற்றை உங்களால் வாசிக்க முடியும். என்றாலும், அவற்றைப் புத்தகங்களாகவே வைத்திருந்தால் அதிக நன்மைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆங்கிலம் தெரியாதவர்கள் நம்முடைய பிரசுரங்களைத் தங்கள் சொந்த மொழியில் வைத்திருந்தால், தனிப்பட்ட படிப்பிற்கு அவை பயனுள்ள கருவியாக இருக்கும். முன்னேறி வருகிற பைபிள் மாணவருக்குப் படிப்பு நடத்துகிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பழைய பிரசுரங்களை வாங்கிச் சென்று, சொந்த லைப்ரரியை அமைக்கும்படி அவரை ஊக்குவிக்கலாம், அல்லவா? சபையின் கையிருப்பிலுள்ள பழைய பிரசுரங்கள், ராஜ்ய மன்றத்திலுள்ள லைப்ரரியில் இருக்கின்றனவா என்பதைப் பள்ளிக் கண்காணி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பிரசுரங்களின் மதிப்பு என்றுமே குறையாது. அவற்றைச் சபையின் பிரசுர இலாக்காவிலேயே வைப்பதற்குப் பதிலாக, நாம் எடுத்துப் பயன்படுத்துவது எவ்வளவு நல்லது!