“வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளியுங்கள்”
சில மாதங்களாக நாம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து, முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்து வருகிறோம். ஒருவேளை வீட்டுக்காரரிடம் அந்தப் புத்தகம் இருந்தாலோ, பைபிள் படிப்புக்கு அவர் ஒத்துக்கொள்ளாவிட்டாலோ அவருடைய “ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ” அளிக்க நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். ஏன்?
சிற்றேட்டிலும் பழைய பத்திரிகைகளிலும் காலத்துக்கு ஏற்ற, விதவிதமான கட்டுரைகள் உள்ளன. இவற்றிலுள்ள ஏதாவது ஒரு விஷயம் அவருடைய மனதைத் தொடலாம். எனவே, நீங்கள் ஊழியத்திற்கு செல்லும்போது பல வித்தியாசமான சிற்றேடுகளையும் பழைய பத்திரிகைகளையும் சேர்த்து எடுத்துச் செல்லுங்கள். உங்களிடம் பழைய பத்திரிகைகள் இல்லை என்றால் நீங்கள் ஒருவேளை சபையிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். வீட்டுக்காரரிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகம் இருந்தாலோ, அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலோ சில பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் அவருக்குக் காட்டலாம். அவற்றில் அவருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளும்படி சொல்லலாம். அதன்பின் அவருடைய ஆர்வத்தை இன்னும் அதிகரிக்க மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். யாருக்குத் தெரியும், அது ஒருவேளை பைபிள் படிப்பாகக்கூட மாறலாம்!