காவற்கோபுரத்தில் புதிய தொடர் கட்டுரை
ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க காவற்கோபுரத்தில் வெளிவந்த “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற பகுதியை நாம் இதுவரை பயன்படுத்தி வந்தோம். ஆனால், ஜனவரியிலிருந்து இதற்குப் பதிலாக “பைபிள் தரும் பதில்கள்” என்ற புதிய தொடர் கட்டுரையை நாம் பயன்படுத்துவோம். இது, பொது இதழின் கடைசி பக்கத்தில் இடம்பெறும். “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” கட்டுரைகளை எவ்விதமாகப் பயன்படுத்தினோமோ அவ்விதமாகவே “பைபிள் தரும் பதில்கள்” கட்டுரைகளையும் நாம் பயன்படுத்தலாம். (km 6/11 பக். 2) முன்பு போலவே, முதல் சனிக்கிழமைகளில் பயன்படுத்துவதற்கான மாதிரி அணுகுமுறைகள் நம் ராஜ்ய ஊழியத்தில் தொடர்ந்து வெளிவரும்.