இன்னும் கொஞ்ச நேரம் செய்ய முடியுமா?
சில பிரஸ்தாபிகள் பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்குள், ஒருவேளை மதிய வேளைக்குள், ஊழியத்தை முடித்துக்கொள்கிறார்கள். சிலர் தங்களுடைய சூழ்நிலை காரணமாக அப்படிச் செய்யலாம். ஆனால், அவர்கள் நிறுத்திக்கொள்கிறார்கள் என்பதற்காக நீங்களும் நிறுத்திக்கொள்கிறீர்களா? அல்லது உங்கள் சபையில் அவ்வளவு நேரம் செய்வதுதான் வழக்கம் என்பதற்காக நிறுத்திக்கொள்கிறீர்களா? கூடுதலாக இன்னும் கொஞ்ச நேரத்திற்கு, இன்னும் ஒருசில நிமிடங்களுக்கு, பொது ஊழியமோ தெரு ஊழியமோ உங்களால் செய்ய முடியுமா? உங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓரிரு மறுசந்திப்புகளைச் செய்ய முடியுமா? ஆர்வம் காட்டிய ஒருவரை மீண்டும் சந்திப்பதாலோ, வழியில் ஒருவரிடம் பத்திரிகைகளைக் கொடுப்பதாலோ எவ்வளவு நன்மை விளையும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! சூழ்நிலை அனுமதித்தால், கூடுதலாக ஒருசில நிமிடங்களுக்கு ஊழியம் செய்து யெகோவாவுக்கு “புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.”—எபி. 13:15.