“இதை வாங்கிக்கொண்டால்தான் அதை வாங்கிக்கொள்வேன்”
இப்படித்தான் சில வீட்டுக்காரர்கள் நம்மிடம் “பேரம்” பேசுவார்கள். ஆனால், பைபிள் சத்தியங்கள் அடங்கிய நம் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு, பொய்மதப் பிரசுரங்களை நாம் வாங்கிக்கொள்ள மாட்டோம் என்பதால், அந்த வீட்டுக்காரரிடம் நாம் எப்படிச் சாதுரியமாகப் பதிலளிக்கலாம்? (ரோ. 1:25) ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: “ரொம்ப நன்றி. ஆனால், மக்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு இந்தப் புத்தகம் என்ன தீர்வு அளிக்கிறது? [பதில் அளிக்க அனுமதியுங்கள். ஒருவேளை அவர், ‘நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னால், பைபிள் பிரசுரத்திலுள்ள விஷயங்களைக் குறிப்பிட்ட பின்னரே அதை நீங்கள் அளித்தீர்கள் என்பதை அவருக்கு நினைப்பூட்டுங்கள். பின்பு மத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள் அல்லது மனதிலிருந்தே சொல்லுங்கள்.] கடவுளுடைய அரசாங்கத்தின் மூலமே அவருடைய சித்தம் பூமியில் நிறைவேற்றப்படும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைச் சிறப்பித்துக் காட்டுகிற பிரசுரங்களை மட்டுமே நான் வாசிக்கிறேன். அந்த அரசாங்கம் பூமியில் என்னவெல்லாம் செய்யப்போகிறதென்று பைபிளிலிருந்து சில வசனங்களைக் காட்டட்டுமா?”