உங்களால் உதவ முடியுமா?
அநேக சபைகளில் அதிக நோய்வாய்ப்பட்ட அல்லது வயது முதிர்ந்த பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். இவர்களால் அதிகளவு ஊழியம் செய்ய முடிவதில்லை. (2 கொ. 4:16) இப்படிப்பட்டவர்களை உங்களுடைய பைபிள் படிப்பிற்கு அழைத்துச் செல்ல முடியுமா? ஒருவேளை அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என்றால், அவர்களுடைய வீட்டிலேயே படிப்பு நடத்த நீங்கள் ஏற்பாடு செய்யலாம். உடல் பலவீனமுள்ளவர்களை அவ்வப்போது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சிறிது நேரம் உங்களால் அழைத்துப் போக முடியுமா அல்லது ஓரிரு மறுசந்திப்புகளுக்கு அழைத்துப் போக முடியுமா? வயதில் மூத்த அநேக பிரஸ்தாபிகளுக்கு ஊழியத்தில் அதிக அனுபவம் இருக்கிறது. ஆகையால், உங்களுடைய முயற்சி அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஊக்கம் அளிக்கும். (ரோ. 1:12) அதுமட்டுமல்ல, இவ்விதத்தில் அன்பு காட்ட முயற்சியெடுக்கும் உங்களை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—நீதி. 19:17; 1 யோ. 3:17, 18.