இதோ சில அணுகுமுறைகள்
ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க...
“நிறைய பேருக்கு ஆர்வமாக இருக்கிற ஒரு கேள்வியை உங்களிடமும் கேட்க வந்தோம். [ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தின் கடைசி பக்கத்திலுள்ள முதல் கேள்வியைக் காட்டுங்கள்.] இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். “இதைப் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்று உங்களுக்கு காட்டட்டுமா?” வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் அதற்கான பதிலை பத்திரிகையிலிருந்து கலந்தாலோசியுங்கள். அதிலுள்ள ஒரு வசனத்தையாவது அவருக்கு எடுத்து காட்டுங்கள். பத்திரிகையைக் கொடுத்துவிட்டு அடுத்த முறை வந்து இரண்டாவது கேள்வியைச் சிந்தியுங்கள்.
காவற்கோபுரம் ஜூலை - செப்டம்பர்
“புகைப்பிடிப்பதால் வருடத்திற்கு சுமார் 60 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதைப் பற்றி கடவுள் எப்படி உணர்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது நிறைய பேர் இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியிருக்கிறார்கள். புகைப்பிடிப்பது சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. இதைப் பற்றி கடவுள் கொடுக்கும் அறிவுரையும் அநேகரை யோசிக்க வைத்திருக்கிறது. நீங்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? [வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் 1 கொரிந்தியர் 10:24-ஐ வாசியுங்கள்.] புகைப்பிடிப்பது பற்றி கடவுளுடைய கருத்தைத் தெரிந்துகொள்வது எப்படி அதை ஒரேயடியாக நிறுத்த உதவும் என்று இந்தப் பத்திரிகை சொல்கிறது.”