jw.org வெப் சைட்டை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
“பூமியின் கடைமுனைவரையிலும்” நற்செய்தியைச் சொல்வதற்கு நம்முடைய வெப் சைட் பேருதவியாக இருக்கிறது. (அப். 1:8) அநேக மக்களுக்கு jw.org வெப் சைட்டைப் பற்றி தெரியாது. ஆகவே, நாம்தான் அவர்களுக்கு இதைப் பற்றி சொல்லித்தர வேண்டும்.
பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை ஒரு வட்டாரக் கண்காணி தன்னுடைய ஃபோனில் டவுன்லோட் செய்துகொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதை மற்றவர்களுக்குப் போட்டுக்காட்டுகிறார். வீட்டுக்கு வீடு ஊழியத்தில், அவர் இப்படிச் சொல்வார்: “எல்லாரையும் சந்திச்சு ஒரு வீடியோவ காட்டுறேன். மூன்று முக்கியமான கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்க அது உதவியா இருக்கும். அந்த கேள்விங்க என்னென்னா, இந்த உலகத்துல ஏன் இவ்ளோ பிரச்சனைகள் இருக்கு? கடவுள் அத எப்படி சரி செய்வாரு? அதுவரைக்கும் நம்ம எப்படி பிரச்சனைகள சமாளிக்கலாம்?” பிறகு, அந்த வீடியோவை வீட்டுக்காரருக்குப் போட்டுக்காட்டி அவருடைய ஆர்வத்தைக் கவனிக்கிறார். அந்த வீடியோவை நிறைய பேர் வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள். பிறகு, அந்த வட்டாரக் கண்காணி இப்படிச் சொல்வார்: “ஆன்லைன் மூலமா ஒரு பைபிள் படிப்பை கேட்கலாம்னு அதுல சொன்னாங்க இல்லையா, அந்த பைபிள் படிப்பு எப்படி இருக்கும்னு நான் உங்களுக்கு நடத்தி காட்டட்டுமா?” வீட்டுக்காரர் அனுமதித்தால், நற்செய்தி சிற்றேட்டை வைத்து பைபிள் படிப்பை நடத்திக்காட்டுவார். வீட்டுக்காரருக்கு நேரம் இல்லையென்றால், அவரை மறுபடியும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். டீ கடைக்குப் போகும்போதும் பக்கத்தில் இருப்பவரிடம் நட்பாகப் பேசி, இதே மாதிரி வீடியோவைக் காட்டுவார். நீங்களும் நம்முடைய வெப் சைட்டை ஊழியத்தில் பயன்படுத்துகிறீர்களா?