“எப்போதுமே அவர்கள் வீட்டில் இருப்பதில்லை!”
ஆர்வம் காட்டிய யாரையாவது மறுபடியும் சந்திக்க முடியாமல் போயிருக்கிறதா? பல முறை முயற்சி செய்தும், அவரை பார்க்க முடியாமல் போயிருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் விதைத்த விதைக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவீர்கள்? (1 கொ. 3:6) ஆர்வம் காட்டிய ஒருத்தரை மறுபடியும் சந்திக்க முடியவில்லை என்றால், சிலர் ஏதாவது குறிப்பு எழுதி அவர்கள் வீட்டு கதவில் வைத்துவிட்டு வருகிறார்கள். அல்லது, அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள். ஊழியத்தில் சந்திக்கிற ஒருத்தரை மறுபடியும் பார்ப்பது கஷ்டம் என்று தெரிந்தால் சிலர் அவர்களுடைய ஃபோன் நம்பரை (phone number) கேட்கிறார்கள்; “உங்களுக்கு மெசேஜ் (message) அனுப்பலாமா” என்று கேட்கிறார்கள். ஒருத்தருக்கு ஃபோன் செய்தால், ஈ-மெயில் அனுப்பினால், மெசேஜ் அனுப்பினால், கடிதம் எழுதினால், ஏதாவது குறிப்பு எழுதி வைத்துவிட்டு வந்தால்கூட அதை மறுசந்திப்பாக போட்டுக்கொள்ளலாம். அவர்கள் வீட்டில் இல்லை என்றால்கூட, அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்க முடியும்; நாம் விதைத்த விதைக்கு தண்ணீர் ஊற்ற முடியும்.