ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... பைபிள் படிப்பை நடத்தி காட்டுங்கள்
ஏன் முக்கியம்? நாம் ஊழியத்தில் பார்க்கிற நிறைய பேருக்கு பைபிள் படிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. எங்கேயாவது போய் பைபிள் க்ளாஸில் (class) கலந்துகொள்வதுதான் பைபிள் படிப்பு என்று அவர்கள் நினைப்பார்கள். இல்லையென்றால், மாதா மாதம் வரும் புத்தகங்களை படிப்பதுதான் பைபிள் படிப்பு என்று நினைப்பார்கள். அதனால், வெறுமனே ‘நாங்க பைபிள் படிப்பு நடத்துறோம்’ என்று சொல்லாமல், பைபிள் படிப்பு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு நடத்தி காட்டுங்கள். வீட்டு வாசலில் நின்றுகூட அவர்களுக்கு படிப்பு நடத்தலாம். அப்படி செய்தால், கொஞ்ச நேரத்திலேயே பைபிளில் இருந்து எவ்வளவு விஷயம் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
இந்த மாதம் இதை முயற்சி செய்யுங்கள்:
பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—பிலி. 2:13.
ஊழியத்தில், ஒரு வீட்டிலாவது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்தோ நற்செய்தி சிறுபுத்தகத்தில் இருந்தோ பைபிள் படிப்பை நடத்தி காட்ட முயற்சி செய்யுங்கள். அல்லது, “பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?” என்ற வீடியோவை காட்டுங்கள்.