பேச்சை ஆரம்பிக்க—“அறிமுகம்” சிறு புத்தகத்தை பயன்படுத்துங்கள்
1. எந்த புத்தகத்தை நாம் ஊழியத்தில் பயன்படுத்தலாம்?
1 “கடவுளுடைய அரசாங்கத்தை முதலில் நாடுங்கள்!” மண்டல மாநாட்டில், கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டார்கள். ஊழியத்துக்காக தயாரிக்கும்போது இந்த புத்தகத்தை எப்படி பயன்படுத்தலாம்? நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் இருப்பது போலவே இந்த புத்தகத்திலும் வித்தியாசமான தலைப்புகளுக்கு கீழே பைபிள் வசனங்களை கொடுத்திருக்கிறார்கள். பேச்சை ஆரம்பிப்பதற்கு இந்த புத்தகம் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.
2. “கடவுளுடைய புத்தகத்திற்கு ஓர் அறிமுகம்” என்ற சிறு புத்தகத்தை ஊழியத்தில் எப்படி பயன்படுத்தலாம்?
2 இந்தப் புத்தகத்தில் இருக்கிற 8-வது கேள்வியை கேட்டு இப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்: “‘நாம் படும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணமா?’னு நிறைய பேர் யோசிக்கிறாங்க. [சில இடங்களில், அந்த புத்தகத்தில் இருக்கிற கேள்வியை வீட்டுக்காரரிடம் காட்டி பேசினால் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.] இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? [பதில் சொல்வதற்கு நேரம் கொடுங்கள்.] இந்த கேள்விக்கு பைபிள்ல பதில் இருக்கு”. அந்த கேள்விக்கு கீழே கொடுத்திருக்கிற வசனங்களில் ஏதாவது ஒரு வசனத்தையோ இரண்டு வசனத்தையோ பைபிளில் இருந்து படியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் அந்த புத்தகத்தில் இருக்கிற 20 கேள்விகளையும் காட்டுங்கள். அதில் ஏதாவது ஒரு கேள்வியை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அந்த கேள்விக்கு அடுத்த முறை வந்து பதில் சொல்வதாக சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் பேசின விஷயம் சம்பந்தமாக கூடுதலான தகவல்கள், பைபிள் படிப்பு நடத்துவதற்கு நாம் பயன்படுத்தும் புத்தகங்களில் இருக்கலாம்; அப்படி இருந்தால் அந்த புத்தகத்தை கொடுங்கள்.
3. மற்ற மதத்தை சேர்ந்தவர்களிடம் அறிமுகம் சிறு புத்தகத்தை பயன்படுத்தி எப்படி பேசலாம்?
3 மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிற பகுதியில் ஊழியம் செய்யும்போது, இந்த புத்தகத்தில் இருக்கிற 4-வது கேள்வியும் 13-ல் இருந்து 17 வரை இருக்கிற கேள்விகளும் ரொம்ப உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு, 17-வது கேள்வியில் இருக்கிற விஷயத்தை பயன்படுத்தி நீங்கள் இப்படி கேட்கலாம்: “நாங்க எல்லா குடும்பங்களையும் சந்திக்கிறோம். இன்னைக்கு எல்லா குடும்பத்திலயும் ஏதாவதொரு பிரச்சினை இருக்கு, இல்லையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? [பதில் சொல்ல நேரம் கொடுங்கள்.] “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்”னு நான் படிச்சிருக்கேன். நிறைய தம்பதிகளுக்கு இந்த விஷயம் உதவியா இருந்திருக்கு. [இது பைபிளில் எபேசியர் 5:33-ல் இருக்கிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை, நீங்கள் ஒரு பெண்ணிடம் பேசினால் எபேசியர் 5:28-ஐ மனப்பாடமாக சொல்லுங்கள்.] இந்த அறிவுரைபடி நடந்துகிட்டா நம்ம வாழ்க்கையும் நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா?”
4. பேசி முடித்த பிறகு மறுபடியும் சந்திக்க என்ன செய்யலாம்
4 பேசி முடித்த பிறகு அவர்களை மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். இதை எப்படி செய்யலாம்? அடுத்த முறை வரும்போது, இது சம்பந்தமாக இன்னொரு தகவலை சொல்வதாக சொல்லலாம். அப்படி சந்திக்கும்போது, அறிமுகம் சிறு புத்தகத்தில் இருந்து அதே தலைப்பில் இன்னொரு வசனத்தை அவர்களிடம் சொல்லுங்கள். பைபிளில் இருக்கிற விஷயங்களைதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை சரியான சமயத்தில் அந்த வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்தலாம். வீட்டுக்காரருக்கு பைபிளில் ஆர்வம் இருந்தால், இதுவரை நீங்கள் அவரிடம் பேசின விஷயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை அவருக்கு கொடுங்கள்.—டிசம்பர் 2013 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையை பாருங்கள்.