உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/15 பக். 4-6
  • மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இதே தகவல்
  • “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்”
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • கடவுளை மகிமைப்படுத்தும் நடத்தை
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • மூன்று நாட்கள்—ஆன்மீகப் புத்துணர்ச்சி
    நம் ராஜ்ய ஊழியம்—2011
  • மாவட்ட மாநாடுகள்—சத்தியத்திற்கு வலிமைமிக்க அத்தாட்சிகள்!
    நம் ராஜ்ய ஊழியம்—2012
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 7/15 பக். 4-6

மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

  • நிகழ்ச்சி நேரம்: மூன்று நாட்களும் காலை 9:20 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். காலை 8:00 மணிக்கு மாநாட்டு மன்றத்தின் கதவுகள் திறக்கப்படும். ஆரம்ப இசை துவங்க போவதாக அறிவிக்கும்போது நாம் எல்லோரும் நம்முடைய இடத்தில் உட்கார வேண்டும்; நிகழ்ச்சி ஒழுங்காக ஆரம்பிக்க இது உதவும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மாலை 5:00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கும் நிகழ்ச்சிகள் முடியும்.

  • பாடல்கள்: பைபிள் காலங்களில் யெகோவாவை வணங்கும் மக்கள் அவரைப் புகழ்ந்து பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இன்று நாமும் யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறோம். (சங். 28:7) மாநாட்டின் ஒவ்வொரு பகுதியும் இசையுடன் ஆரம்பிக்கும். நிறைய முயற்சி எடுத்து நம் அமைப்பின் இசை குழுவினர் இதைத் தயாரிக்கிறார்கள். சில சகோதர சகோதரிகள் வருடத்திற்கு இரண்டு முறை சொந்த செலவில் நியு யார்க்கிற்கு போய், இந்த இசையைத் தயாரிக்க உதவுகிறார்கள். யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அவரைப் புகழவும் மாநாட்டில் இசைக்கப்படும் இந்த இசை நம் மனதைத் தயார்படுத்துகிறது. அதனால், ‘இசை ஆரம்பிக்கப்போகிறது’ என சேர்மேன் அறிவிக்கும்போது எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து இசையை கேட்க வேண்டும்; அந்த நேரத்தில் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. இந்த இசை முடிந்த பிறகு, எல்லாரும் சேர்ந்து யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவோம்.

  • வாகனம் நிறுத்துமிடம்: சில மாநாட்டு மன்றங்களில் வாகனம் நிறுத்துமிடத்தை மேற்பார்வை செய்கிற பொறுப்பு நம் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அப்போது, முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும். பொதுவாக வாகனங்களை நிறுத்துவதற்குக் குறைவான இடமே இருக்கும் என்பதால் முடிந்தவரை ஒரே காரில் ஒன்றாகச் சேர்ந்து வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

  • இடம் பிடித்து வைப்பது: காலையில் கதவுகள் திறந்தவுடன் இடம் பிடிப்பதற்காக மற்றவர்களை முந்திக்கொண்டு போகாதீர்கள். இது போட்டி மனப்பான்மையைத் தூண்டும். உங்கள் வசதியை மட்டும் பார்க்காமல், மற்றவர்களுக்காக விட்டுக்கொடுங்கள். சுயநலமாக நடந்துகொள்ளாமல் மற்றவர்கள்மேலும் அக்கறை காட்டினால் நாம் உண்மை கிறிஸ்தவர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள், யெகோவாவையும் புகழ்வார்கள். (யோவா. 13:34, 35; 1 கொ. 13:5; 1 பே. 2:12) உங்களுடன் காரில் வருபவர்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு அல்லது இப்போது உங்களுடன் பைபிளைப் படிப்பவர்களுக்கு மட்டுமே இடம் பிடித்து வைக்கலாம். நீங்கள் உட்கார வேண்டிய இடங்களில் மட்டும் பொருள்களை வையுங்கள். அப்போதுதான், உட்காருவதற்கு எந்தெந்த இடங்கள் காலியாக இருக்கிறது என்று பார்ப்பவர்களுக்குத் தெரியும். முதியவர்களும் ஊனமுற்றவர்களும் உட்கார தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கவனித்துக்கொள்ள ஓரிரு நபர்கள் மட்டுமே அவர்களோடு உட்காரலாம்.

  • அடக்கமான உடை: அடக்கமாகவும் மாநாட்டிற்குப் பொருத்தமாகவும் உடை உடுத்த வேண்டும். உடை விஷயத்தில் உலகத்தாரைப்போல் இருக்கக் கூடாது. (1 தீ. 2:9) ஓட்டலுக்கு வரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும்... மாநாட்டிற்கு முன்பும் பின்பும்... நாம் உடுத்துகிற உடை ஏனோதானோவென்று இருக்கக் கூடாது. அடக்கமான உடையில் இருந்தால்தான் பேட்ஜ் கார்டை போட்டுக்கொள்ள தயங்க மாட்டோம்; சந்தர்ப்பம் கிடைக்கும்போது சாட்சி கொடுக்கவும் தயாராக இருப்போம். நம் தோற்றத்தையும் நடத்தையையும் பார்த்து நிறைய பேர் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். யெகோவாவும் நம்மைப் பார்த்து சந்தோஷப்படுவார்.—செப். 3:17.

  • எலக்ட்ரானிக் சாதனங்கள்: மற்றவர்களுக்குத் தொந்தரவு வராதபடி செல்ஃபோன் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களின் செட்டிங்கை மாற்றி வைக்க வேண்டும். ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்கும்போது மற்றவர்களை மறைக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கையில்... எஸ்எம்எஸ் அல்லது ஈ-மெயில் அனுப்புவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • மதிய உணவு: மதிய இடைவேளையின்போது உணவு வாங்குவதற்காக மாநாட்டு மன்றத்திலிருந்து வெளியே போகாமல் இருப்பது நல்லது. எளிமையான மதிய உணவை நீங்களே கொண்டுவர முயற்சி செய்யுங்கள். பெரிய பெரிய பாத்திரங்களிலோ கண்ணாடி பாத்திரங்களிலோ உணவை எடுத்து வராதீர்கள். நீங்கள் உட்காரும் இடத்திற்கு கீழே வைப்பதுபோல் சிறிய லன்ச் பாக்ஸ்களில் உணவை எடுத்து வாருங்கள்.

  • நன்கொடைகள்: மாநாட்டு மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் உலகளாவிய வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் போடுவதன் மூலம் மாநாட்டு ஏற்பாடுகளுக்கு நன்றி காட்டலாம். ஒருவேளை செக் மூலம் நன்கொடை கொடுக்க விரும்பினால், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரை செக்கில் எழுதி கொடுக்கவும். க்ரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் நன்கொடை கொடுக்கலாம்.

  • மருத்துவ உதவி: நீங்கள் எப்போதும் சாப்பிட வேண்டிய மருந்துகளை மறக்காமல் எடுத்து வாருங்கள். மாநாட்டு மன்றத்தில் அவை உங்களுக்குக் கிடைக்காது. சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஊசிகளை மாநாட்டு மன்றங்களிலோ ஓட்டல்களிலோ மற்ற குப்பைகளோடு சேர்த்து போடக்கூடாது.

  • பாதுகாப்பு எச்சரிக்கை: மாநாட்டு மன்றத்தில் தடுக்கி விழுந்து காயப்படாமல் இருக்க கவனமாக இருங்கள். பிள்ளைகளை மாநாட்டு மன்றத்திற்குள் விளையாட விடக்கூடாது. பெரிய ஹீல்ஸ் (High Heels) செருப்புகளைப் போடுவதால் ஒவ்வொரு வருடமும் நிறைய பேருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. எனவே படிக்கட்டுகளில் அல்லது இரும்பு சட்டங்களில் நடக்கும்போது தடுக்கி விழாமல் இருக்க உதவும் செருப்புகளை போடுவது நல்லது.

  • லான் சேர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான தள்ளு வண்டிகள்: இவற்றை மாநாட்டிற்கு எடுத்து வரக்கூடாது. என்றாலும், பெற்றோர்களின் இருக்கைகளுக்கு அருகில் வைத்துக்கொள்ள முடிந்தால் சைல்ட்-சேஃப்டி சீட்டுகளை (child-safety seats) எடுத்து வரலாம்.

  • சென்ட்டுகள்: பெரும்பாலான மாநாடுகள் எல்லாப் பக்கமும் மூடியிருக்கும் மன்றங்களில் நடக்கின்றன. செயற்கை முறையில்தான் காற்று வசதி செய்யப்படுகிறது. சிலருக்கு சுவாச பிரச்சினை இருக்கலாம். அதனால், வாசனைப் பொருள்களையோ சென்ட்டுகளையோ அளவாகப் பயன்படுத்துவது நல்லது. அப்போதுதான் மற்றவர்கள் மேல் அக்கறை இருப்பதைக் காட்ட முடியும்.—1 கொ. 10:24.

  • தயவுசெய்து போய் பார்க்கவும் படிவம் (S-43): மாநாட்டு சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது யாராவது ஆர்வமாக கேட்டால், தயவுசெய்து போய் பார்க்கவும் படிவத்தை நிரப்பி மாநாட்டு புத்தக இலாகாவில் கொடுக்கலாம் அல்லது உங்களுடைய சபை செயலரிடம் கொடுக்கலாம்.

  • ஓட்டல்கள்: ஓட்டல்களுக்கு போகும்போது நல்நடத்தையைக் காட்டுங்கள்; அடக்கமான உடை உடுத்துங்கள். அதைப் பார்த்து மற்றவர்கள் யெகோவாவைப் புகழ்வார்கள். உங்கள் ஊர் வழக்கப்படி டிப்ஸ் கொடுங்கள்.

  • தங்கும் ஓட்டல்கள்:

    1. உங்களுக்கு எவ்வளவு அறைகள் தேவையோ அதை மட்டும் முன்பதிவு செய்யுங்கள். ஒரு அறையில் எத்தனை பேர் தங்க அனுமதி இருக்கிறதோ அத்தனை பேர் மட்டும் தங்குங்கள்.

    2. நீங்கள் பதிவு செய்த அறையை அநாவசியமாக ரத்து செய்யாதீர்கள்; ஒருவேளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் செய்யுங்கள். அதை உடனடியாக ஓட்டலுக்கு தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் தங்குவதற்கு அறை தேடுகிறவர்கள் புக்செய்ய வசதியாக இருக்கும். (மத். 5:37) ரத்து செய்ததற்கான அத்தாட்சியை ஓட்டலில் இருந்து வாங்குங்கள்.

    3. ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டைப் பயன்படுத்தி ஓட்டல் அறையை புக் செய்திருந்தால் அறைக்கான தொகையோடு சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைப்பார்கள். தங்கும் அறையிலோ ஓட்டலிலோ நீங்கள் ஏதாவது சேதம் ஏற்படுத்தினால் அதற்காக அந்த பணத்தைப் பயன்படுத்துவார்கள். நீங்கள் ஓட்டலை காலி செய்யும் வரை அல்லது உங்களுடைய அக்கவுண்ட் செட்டில் ஆகும்வரை அந்தத் தொகையை உங்களால் பயன்படுத்த முடியாது.

    4. லக்கேஜை எடுத்துச் செல்ல உதவும் தள்ளுவண்டிகளை பயன்படுத்திவிட்டு உடனடியாக திருப்பி கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் மற்றவர்களும் பயன்படுத்த முடியும்.

    5. நீங்கள் தங்கும் இடத்தில் டிப்ஸ் கொடுப்பது வழக்கமாக இருந்தால் டிப்ஸ் கொடுங்கள். ஓட்டலில் வேலை செய்பவர்கள் உங்களுக்கு நிறைய உதவி செய்வதால் டிப்ஸ் கொடுப்பது அன்பான செயல்.

    6. சமைப்பதற்கு அனுமதி இல்லாத அறைகளில் சமைக்காதீர்கள்.

    7. ஓட்டலில் தங்கும் நபர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற காலை உணவு, காபி அல்லது ஐஸ் போன்றவற்றை மாநாட்டு வளாகத்திற்கு கொண்டுப் போகாதீர்கள்.

    8. ஓட்டலில் வேலை செய்பவர்களிடம் எப்போதும் நல்ல குணங்களைக் காட்டுங்கள். அவர்கள் நிறைய பேரைக் கவனித்துக்கொள்வதால், நாம் அன்பாக, பொறுமையாக, நியாயமாக நடந்துகொள்ளும்போது சந்தோஷப்படுவார்கள்.

    9. ஓட்டலில் லிஃப்ட், நீச்சல் குளம், வரவேற்பறை, உடற்பயிற்சி செய்யும் இடம் போன்ற இடங்களில் இருக்கும்போது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    10. சிபாரிசு செய்யப்படுகிற தங்குமிடங்களுக்கான பட்டியல்களில் அறை வாடகையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, வரிக் கட்டணம் சேர்க்கப்படாத ஒருநாள் வாடகையாகும். கூடுதல் தொகையைச் செலுத்தச் சொன்னால் அவற்றைச் செலுத்தாமல், உடனடியாக மாநாட்டிலுள்ள அறை வசதி இலாகாவிடம் சொல்லுங்கள்.

    11. உங்கள் ஓட்டல் அறை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், மாநாட்டு வளாகத்தில் இருக்கும்போதே அறை வசதி இலாகாவிடம் மறக்காமல் சொல்லுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

  • வாலண்டியர் சேவை: வாலண்டியர் சேவையில் ஈடுபட யாருக்காவது விருப்பமிருந்தால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவிடம் சொல்ல வேண்டும். 16 வயதுக்கும் குறைவான பிள்ளைகளும் சேவை செய்யலாம். அவர்கள் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து அல்லது தங்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற ஒருவரோடு சேர்ந்து சேவை செய்ய வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்