நன்றாக சொல்லிக்கொடுக்க நன்றாக தயாரியுங்கள்
முடிவில்லா வாழ்க்கையைப் பற்றி இயேசுவிடம் இரண்டு பேர் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விதத்தில் இயேசு பதில் சொன்னார். (லூக். 10:25-28; 18:18-20) பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து நாம் நிறைய தடவை படிப்பு நடத்தியிருப்போம். இருந்தாலும், பைபிள் படிப்பவருக்கு ஏற்ற விதத்தில் படிப்பை நடத்த நாம் தயாரிப்பது ரொம்ப முக்கியம். அதற்கு, பின்வரும் கேள்விகள் உங்களுக்கு உதவும்: பைபிள் படிப்பவருக்கு எந்த விஷயங்கள் புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கும்? அவருக்கு பொருத்தமான எந்த வசனங்களை வாசிப்பது? எத்தனை பாராக்களை படிப்பது? சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை அவர் நன்றாக புரிந்துகொள்ள எந்த உதாரணத்தை பயன்படுத்துவது, எப்படி விளக்கி சொல்வது, என்ன கேள்விகளைக் கேட்பது என்பதைப் பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் என்னதான் முயற்சி எடுத்தாலும் பைபிள் படிப்பவரின் மனதில் சத்திய விதையை யெகோவாதான் வளர செய்கிறார். அதனால், நாம் செய்யும் தயாரிப்பையும், பைபிள் படிப்பவரையும், அவருடைய முன்னேற்றத்துக்காக நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்ய வேண்டும்.—1 கொ. 3:6; யாக். 1:5.