பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 79-86
உங்கள் வாழ்க்கையில் யார் ரொம்ப முக்கியமான நபர்?
லேவியனாகிய ஆசாப் வம்சத்தில் வந்த ஒருவர்தான் சங்கீதம் 83-ஐ எழுதியிருக்க வேண்டும். இவர் தாவீது ராஜா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். எதிரி நாடுகள் யெகோவாவுடைய மக்களுக்கு பல பிரச்சினைகளை கொண்டுவந்த சமயத்தில் இவர் இந்த சங்கீதத்தை எழுதியிருக்க வேண்டும்.
தன்னுடைய சொந்த பாதுகாப்புக்காக ஜெபம் செய்யாமல், யெகோவாவுடைய பெயருக்காகவும், அவருடைய ஆட்சிக்காகவும் ஜெபம் செய்தார்
இன்று யெகோவாவை வணங்குபவர்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வருகின்றன. அதை சகித்து, உறுதியோடு இருந்தால் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும்
யெகோவா அவருடைய பெயரை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்
யெகோவாதான் நம் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் என்று நாம் எடுக்கும் தீர்மானங்கள் காட்ட வேண்டும்